தன்னுடைய முன்னாள் நண்பருக்கு மிகப்பெரிய Elevationஐ கொடுத்திருக்கிறார் முதலமைச்சர்.
சட்டப்பேரவை கூடுவதற்கு முந்தைய நாள் உதயநிதியைக் கைது செய்வோம். கைது செய்து அவரை தஞ்சாவூர் கொண்டு செல்வோம் மாஸாக இருக்கும் என முதலமைச்சருக்கு ஆலோசனை சொன்ன பிரகஸ்பதியை தேடி திமுக அவருக்கு சிறப்பு செய்யலாம்.
டெல்டாவில் திமுகவின் வீச்சை அறிந்தவர்கள் அப்படி ஒரு ஐடியாவைக் கொடுத்திருக்க மாட்டார்கள். திமுக தேடிக் கொண்டிருந்த ஒரு மொமண்டம் கிடைத்திருக்கிறது.
தேர்தல்கள் முதல்வர்களை உருவாக்கும். போராட்டங்களும், கைதுகளுமே தலைவர்களை உருவாக்கும்.
அதேநேரத்தில், திரு. உதயநிதி அவர்களும் தனிநபர் அவதூறு அரசியலை கைவிட்டு, திராவிட இயக்கத்தின் அரசியல் மரபிற்கு ஏற்ற வகையில் கருத்தியல் அடிப்படையிலான விமர்சனங்களையே எதிர்காலத்தில் முன்வைக்க வேண்டும் என்பதையும் கண்டனத்துடன் பதிவு செய்கிறோம்.
தமிழ்நாட்டின் உரிமைகள் மீது அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும், சமூக அமைப்புகளும் ஒரே கோரிக்கையின் கீழ் ஒன்றிணைய வேண்டிய காலம் இது. காவிரி, மேகேதாட்டு, தமிழ்நாட்டு உரிமைகள் ஆகியவை தனிநபர்களைக் காட்டிலும் மேலானவை. அவற்றை முன்னிறுத்தும் மக்கள் ஒற்றுமையையே வரலாறு நினைவில் வைத்திருக்கும்; அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் அல்ல.
மே பதினேழு இயக்கம் திரு. உதயநிதி அவர்களைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்து, சட்டநடவடிக்கைகளை நீதிமன்றத்தின் வாயிலாக த.வெ.க அரசு மேற்கொள்ளுவதே உரிய வழிமுறையாகும். அதேவேளையில், அரசியல் கருத்து மோதல்கள் தனிநபர் இழிவுபடுத்தலாக மாறாமல், மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டு உரிமைகளை மையப்படுத்திய ஜனநாயக அரசியலே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
04 -08-2026
தமிழ்நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி காலத்தில் கைதுகளும், அவதூறுகளும் மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்கப்போவதில்லை.
தமிழ்நாடு இன்று காவிரி நீர் உரிமை, மேகேதாட்டு அணை, ஒன்றிய அரசின் அரசியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும், அவதூறு அரசியலில் ஈடுபடுவதும், அதற்குப் பதிலாக கைது அரசியலை மேற்கொள்வதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கப்போவதில்லை. அவதூறு பேச்சும் தேவையற்றது; கைதும் தேவையற்றது. இந்த இரண்டு நிகழ்வும் மக்களின் உரிமைப் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளுபவையே.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் தனது கண்டன உரையில் பயன்படுத்திய மாண்பிற்குக் குறைவான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. தனிநபர் தாக்குதல்கள் காவிரி சிக்கலுக்கோ, மேகேதாட்டு அணை பிரச்சினைக்கோ எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை. அந்த வகையில் அவரது பேச்சு கண்டனத்திற்குரியது. அதேநேரத்தில், அந்தப் பேச்சுக்காக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதும் ஜனநாயக அரசியலுக்கு ஏற்றதல்ல; அதுவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய அடக்குமுறை செயலாகும்.
காவிரி நீர் உரிமையும், மேகேதாட்டு அணை அச்சுறுத்தலும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினைகளாக இருக்கும் இந்த நேரத்தில், கட்சி வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமையான அரசியல் நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்த அவசியத்தை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் புறக்கணித்து வருவது மிகுந்த வருத்தத்திற்குரியது.
தமிழ்நாடு சட்டமன்றம் கூடவிருக்கும் காலகட்டத்திலும், தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் சூழலிலும், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது அரசியல் ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் தவறான முன்னுதாரணமாகும். சட்டமன்ற விவாதங்கள் நடைபெற வேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது சட்டமன்றத்தின் இயல்பான செயல்பாட்டையே பாதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படும்.
திரு. உதயநிதி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், சட்டமன்றக் கூட்டத்தொடரும் காவிரி தொடர்பான அரசியல் சூழலும் முடியும் வரை கைது நடவடிக்கையைத் தள்ளிவைத்திருக்க முடியும். இந்தக் கைது காவிரி பிரச்சினையையோ, மேகேதாட்டு அணை பிரச்சினையையோ தீர்க்காது. மாறாக, இது தனிநபர் விருப்பு-வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
இன்று ஆபாசமான பேச்சுகளும், அருவருப்பூட்டும் பதிவுகளும் அரசியலில் 'இயல்பாக்கப்படும்' அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், விமர்சனங்களுக்கே கைது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. இந்த இரு போக்குகளுமே ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை. கருத்துக்கு எதிராக கருத்து, அவதூறுக்கு எதிராக நீதிமன்றம் என்ற ஜனநாயக வழிமுறையை விட்டுவிட்டு, கைது அரசியலை முன்னிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளும் தவெக அரசையோ, முதலமைச்சரையோ நோக்கிய அவதூறுகள் கைது நடவடிக்கைக்குரியவை எனில், அதே சட்ட அளவுகோல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அனைத்து நபர்களுக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைத் தத்துவம் நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம்.
இந்த சமநிலை பின்பற்றப்படாதபோது, தமிழ்நாடு காவல்துறையும் அதிகாரவர்க்கமும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதிகாரம் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் வசதிக்காக பயன்படுத்தப்படுவதாக மக்கள் கருதும் சூழலை அரசு உருவாக்கக்கூடாது.
கர்நாடகத்தில் காவிரி பிரச்சினை எழும்போதெல்லாம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, முன்னாள் மற்றும் தற்போதைய முதலமைச்சர்கள் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒரே குரலில் பேசுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இன்று வரை அனைத்துக் கட்சிக் கூட்டமோ, ஒருங்கிணைந்த செயல் திட்டமோ உருவாக்கப்படவில்லை. மாறாக, தனிநபர் மோதல்களும், கைது அரசியலும் காவிரி உரிமைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகின்றன. இந்தச் சூழல் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கும், பாஜக போன்ற ஆதிக்க அரசியல் சக்திகளுக்கும் சாதகமாக அமைகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளும் அரசும், பிரதான அரசியல் கட்சிகளும் இன்று வழங்கும் செய்தி என்ன? ஒற்றுமையின்மை, தனிநபர் வெறுப்பு அரசியல், பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறை மட்டுமே.
எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவரை சட்டமன்றத்தில் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அவதூறு குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறட்டும்; சட்டம் தனது கடமையை செய்யட்டும்.ஆனால் ஜனநாயக அரசியலை கைது அரசியலால் மாற்ற முடியாது...(தொடர்ச்சி..1)
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருப்பது மாணவர் போராட்டங்களுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி. ஆணவ செறுக்கோடு இயங்கிய மோடி சர்க்கார் மண்டியிட்டு நிற்கிறது. நீட் தேர்வு ரத்து என்பதே இறுதித்தீர்வு. அந்த தீர்வை நோக்கி நகர்வோம். மாணவச் செல்வங்களுக்கும், இளைய தலைமுறைக்கும் புரட்சிகரவாழ்த்துகள். டில்லியில் இப்போராட்டத்தை தீவிரமாக்கிய இடதுசாரி அமைப்புகள், சிவில் அமைப்புகள், கரபபன்பூச்சி கட்சியின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர் வாங்க்ச்சுக் ஆகியோருக்கும், பெயர் தெரியாத துணிச்சல்காரர்களுக்கும் வாழ்த்துகள்.
தொகுதி மறுவரையறை குறித்து, பாஜக இந்த மசோதாவை பாஜக சமர்பித்த பின்னர், அந்த மசோதாவை வாசித்த பின்னரே முடிவெடுக்க இயலுமென திமுக முடிவெடுத்திருப்பதாக 'இந்தியா டுடே' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நடக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் 'தொகுதி மறுவரையறை' மசோதாவை பாஜக நிறைவேற்ற விரும்பும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
'தொகுதி மறுவரையறை' என்பது 1971 மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் நடக்காமல் 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின் படி நடக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு எங்ஙனம் நீதி கிடைக்கும்? அல்லது பாஜக எவ்வகையில் கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு நலன் பயக்கும் மசோதாவை கொண்டு வந்துள்ளது?
பொருளாதார திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே வட மாநிலங்களுக்கு சாதகமாகவே மோடி சர்க்கார் நிறைவேற்றி வந்திருக்கிறது. NIA, UAPA, CAA-NRC, NEP, அணை பாதுகாப்பு மசோதா, விவசாய மசோதா என மோடியால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் மாநில உரிமைகளை நசுக்குவது, தனியார் மயத்தை ஊக்குவிப்பது, சிறுபான்மையினருக்கு எதிரானதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் "தொகுதி மறுசீரமைப்பு' எவ்வாறு நமக்கு சாதகமாக அமையும் என கணக்கில் எடுக்க இயலும் அல்லது இந்த மசோதாவில் சனநாயகம் இருக்குமென அதை பரீசிலனை செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து தீவிரமாக எதிர் நிலைப்பாட்டை இந்திய அளவில் திமுக மட்டுமே அரசியல் கட்சிகளில் எடுத்தது. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வருமெனில் ஏமாற்றமாக மட்டும் அமையாது, தமிழ்நாட்டுக்கு எதிராகவும் அமையும்.
இவ்விடயத்தில் மே17 இயக் தனிபப்ட்ட கவனம் கொண்டு 2020ம் ஆண்டு காலத்திலேயே இந்த மறுசீரமைப்பு குறித்து மே17 இயக்கம் எச்சரித்தது. இவ்விடயத்தில் நாம் தமிழ்நாட்டின் நலனை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டுமேயொழிய, கட்சிகளின் நலனை-கூட்டனி நலனை வைத்து முடிவெடுப்பதை ஏற்க இயலாது. தொடர்ந்து கவனிப்போம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் திரு விஜயன் காவல்துறையால் விசாரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது செல்பேசியை காவல்துறை கையகப்படுத்தியிருப்பதும் கண்டிக்கத் தக்கது.
ஊடகம், ஊடகவியலாளர் மீதான் அடக்குமுறை ஏற்கதக்கதல்ல. தவெக அரசு மேற்கொண்ட நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியது. மே பதினேழு இயக்கம் திரு விஜயன் அவர்கள் மீதான தவெக அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறது.
@PttvNewsX
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை.
காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.
சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர்.
நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது.
ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது,
மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பை தடுக்கும் சாதிகளில் 'குற்றப்பரம்பரை' என ஒடுக்குமுறை சட்டத்தால்' முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியும் இருக்கிறது.
இந்த சாதியில் பிறந்த அனைவரையும் பிறவி-குற்றவாளிகள் என கிட்டதட்ட 88 சாதிகளை ஆங்கிலேயர் சட்டமியற்றி கொடுமை படுத்தினர். இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கவேண்டுமென இவர்களுக்காக வெள்ளையரிடத்தில் வாதம் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
"ஒருவர் பிறப்பால் குற்றவாளியாக முடியாது, சூழ்நிலையே ஒருவரை குற்றவாளியாக்குகிறது" என்ற அறிவியல் பூர்வமான உண்மையை அம்பேத்கர் உரக்கச் சொன்னார். பிறப்பிலேயே ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரை என்று அழைப்பது அநாகரிகமானது என்று அவர் கடுமையாக வாதிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை வழங்கும் சட்டப்பிரிவுகளை (குறிப்பாக பிரிவு 14, 15, 19, 21) அம்பேத்கர் சேர்த்தார். இந்த அடிப்படை உரிமைகள், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் நீடிப்பதற்கான வழியை முற்றிலும் அடைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் மீதான அவதூறு முத்திரையை அகற்றுவதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அண்ணலின் சிலையை இந்த சாதியை சார்ந்தவர்களே நிறுவியிருப்பார்கள். வரலாறை மறந்தவர்கள் நன்றியுணர்வற்று சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வரலாறு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால் அவர்களாவது சொல்லி சிலையை திறந்திருப்பார்கள்.
மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும், வருவாய்-நிர்வாக அதிகாரிகளுக்கும் வரலாறு தெரியவில்லை. விடுதலையான மக்களுக்கும் வரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.
காவல்துறையை ஏவிய தவெக ஆட்சியாளர்கள் அண்ணலின் சிலையை நிறுவ முன்வரவில்லை. தவெக ஆட்சியாளர்களின் காவல்துறை ஒடுக்குமுறையை திமுக-அதிமுக ஆகிய எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை.
கற்றறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வரலாறு அறியாதவர்களெனில்
இங்கே யார் 'தற்குறி' ??
இந்த தற்குறிகளுக்கு மத்தியில் இனிமேல் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் ' கால் மேல் கால்' போட்டவாறுதான் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.
தற்குறிகளுக்கு மத்தியில் அறிவாளி கால்-மேல்-கால் போட்டு திமிராக அமர்வதுதான் கற்றோர்க்குச் சிறப்பு
ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதத்தில்
லாக் அப் மரணங்கள்,
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு,
கோவில் நில அபகரிப்பு புகார்,
போதைப் பொருள் பயன்பாடு,
ஊழல் குற்றச்சாட்டுகள்,
கடுமையான மின் பற்றாக்குறை,
மேட்டூர் அணைக்கு இன்னமும் நீர் திறக்காமல்,
கடுமையான சட்டமன்ற சீர்கேடு,
மாற்றுக் கட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவது,
குதிரை பேரம்,
இன்னும் பல விஷயங்கள் நடந்து வருகிறது...
இதில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சி தரப்பினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்...
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?
இது நீங்க போட்ட பதிவுதானே? @Keerthana4VNR
"க்ஷத்திரிய மகளிர் தமிழ் பள்ளி"ன்னு ஒரு அரசு பள்ளி தமிழ்நாட்டுல கிடையாது.
Source tweet: https://t.co/YPmuERy6ot
School website link https://t.co/N5mC4y47M8
தமிழ்நாட்டில் பல அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் செய்யும் இந்த கன்றாவியை தயவுசெய்து நிறுத்தி தொலையுங்கள்!
சில தினங்களுக்கு முன்பு மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவை தமிழ்நாடு எல்லைப் பகுதியில் லாரி டிரைவர்களின் சிரமங்களை அறிந்து கொள்ளவும், எல்லைகளில் மதுபானங்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்திருந்தார். உண்மையில் உருப்படியானதும் பாராட்டுக்குரியதும் கூட...
அப்படி ஏதாவது செய்தால் கூட பரவாயில்லை. வெறும் ரீல்ஸ்களுக்காக எடுக்கப்படுகிறது என்று அப்பட்டமாக தெரியும் இம்சைகளை நிறுத்துங்கள்..
அதுவும் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் சிலற்றை பார்ப்பதற்கே
அத்தனை அருவருப்பாக உள்ளது!
🤢🤢🤮🤮
இவர்களுக்கெல்லாம் 'திராவிடம்', 'பெரியார்', 'அண்ணா' என்பதெல்லாம் பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்ளும் விசிட்டிங்கார்டுகள்.
திமுக இப்படிப்பட்ட அட்டைக்கத்திகளை தான் முன்னுக்கு நகர்த்தி பிராந்திய தலைவர்களாக்கியது. போராட்ட உணர்வு கொண்டவர்களுக்கோ, கருத்தியலாளர்களுக்கோ 'ஜெகத்ரட்சகன்'களுக்கு கிடைக்கும் பதவி வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஆழ்வார், வைணவம், சாதி என சனாதன குப்பைகளை சுமப்பவருக்கு பதவியும், பட்டமும் உண்டு.
அதிமுக-பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை எதிர்த்துப் போராடி வழக்கு பெற்று, கைதாகி சிறைப்பட்டவருக்கெல்லாம் கிடைக்காத பதவிகளை ஜெகத்ரட்சகன்கள், எ.வ.வேலுக்கள் அனுபவித்தார்கள். இவர்கள் செய்த ஊழல், கொள்ளை, சுரண்டல்களுக்கு 'திராவிடமும், பெரியாரும்' வசைபாடல்களை எதிர்கொண்டார்கள்.
இந்துத்துவவாதிகளின் கல்விக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடந்து கொண்டிருக்க, 'திராவிடத்தின்' பலனை அனுபவித்த ஜெகத் ரட்சகன், வேலுக்களின் கல்விக்கூடங்களில் மருந்துக்கும் பெரியார் பேசப்பட்டதில்லை. இளம் தலைமுறைகளை கல்லூரிகளுக்கான வாடிக்கையாளர்களாக மட்டுமே பார்த்த இந்த சுரண்டல் கூட்டம் , அரசியலற்ற இளம் தலைமுறை உருவாவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தார்கள். இவர்களின் கல்விக்கூடங்களில் படித்து சுரண்டபப்ட்டவனுக்கு திராவிடத்தின் மீது ஒவ்வாமை வரத்தானே செய்யும்.
ஈழப்படுகொ**லைக்கு நீதிகேட்டு நாம் போராடிக்கொண்டிருக்க, ஜெகத்ரட்சகனோ 27,000 கோடி ரூபாயை இலங்கை அரசின் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு முதலீடு செய்துகொண்டிருந்தார்.
இன உணர்வு, மான உணர்வு, சுயமரியாதை, சமத்துவ உணர்வு, கொள்கைப்பிடிப்பு என எதுவும் இல்லாத பெரும்பணக்காரர்களை வளர்த்து பண்ணையாராக்கியது திமுக. பாராளுமன்றத்தில் இவர்கள் கிழித்ததென்ன என எவருக்கும் தெரியாது. திராவிடம், பெரியார், அண்ணா சிந்தனைகளை வளர்ப்பதற்கு செய்ததென்ன ? இதுவும் நாமறியோம்.
சாராய கம்பெனிகள், கல்விக்கூடங்கள், கல்குவாரிகள் என திராவிடத்தை விலைபேசி வளர்த்தவர்கள், கப்பல் முழுகுகிறதென பெருச்சாலிகளாய் ஓடுகிறார்கள். கசக்கி பிழியப்பட்ட கூட்டணி கட்சிகள் வெளியேறியதை துரோகமென்றவர்கள், வாரிசுகளை அடுத்த கட்சிக்கு தாரைவார்த்து எதிர்காலத்திற்கு துண்டு போடுபவர்களை என்ன சொல்லி அழைக்கப்போகிறார்கள்?
இளம்தலைமுறையை சுரண்டிய கல்விமான்கள், சாராய விற்பனர்கள் இதுதவிர வீடுவீடாய் விஜய் படத்தை போட்டுக்காட்டிய திமுகவினரின் டி.வி சேனல்கள் எவ்வகையான வாக்காளர்களை உருவாக்கி வைத்தார்கள் என்பதிலிருந்து சுயவிமர்சனத்தை தொடங்குங்கள். தமக்கு முதுகு சொறியும் மருதையன்கள், ரூட்மாபியா கதைகள், கூட்டணி துரோகங்கள் எனச் சொல்லி மனதை தேற்றிக்கொண்டால் களம் கையைவிட்டு நிரந்தரமாய் களவுபோகும்.
வெற்றிக்கான திறவுகோலை பெரியார் என்றுமே ஒளித்து வைத்ததில்லை. தன்னலமில்லா, சொத்து சேர்த்துக்கொள்ளாத, தனியுடமை பாராட்டாத சுரண்டல்-ஊழல் தன்மையற்றவர்களை, வாய்ப்பிருந்தால், கண்டறிந்து பதவி கொடுத்து அழகுபாருங்கள். பெரியரிய சிந்தனையாளரை உயரத்திற்கு கொண்டு வாருங்கள். சொத்து சேர்த்து வயிறு வளர்க்காத கூட்டத்திடம் பொறுப்பை கொடுத்துப்பாருங்கள், களத்தைக் கைப்பற்றும் கழகம். இல்லையெனில் ஜெகத்ரட்சகன்கள், வேலுக்கள் கழுத்தைச் சுற்றி படமெடுப்பார்கள்.
#JustNow || பாலியல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி..
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பங்கேற்பு
#Chennai | #MLA | #Function | #PolimerNews
சம்பளம் த.வெ.க கட்சியோ, விஜய் என்கிற தனி மனிதரோ கொடுத்தால், கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.,
As long as they're paid from public exchequer, it ought to be outed, for "transparency".,
Btw, வெளியில் சொல்ல முடியாமல் இருப்பதை, ஏன் செய்ய வேண்டும்!
Also, என் வாயை பற்றி தாங்கள் கவலைப்பட தேவையில்லை!
Abusive under the carpet of anonymity is sufficient to understand who you're!
Have a good day!
ஏழை 'வேல்முருகன்' தீக்குளித்து மரணிக்க காரணாமாயிருந்த காவல்துறையினர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார்களா அல்லது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? சமீபத்தில் தான் 100 நாட்கள் போராடியும் காவல்துறையின் வன்முறையால் கொல்லப்பட்ட ஆகாஷுக்குநீதிகேட்டெ போராட்டம் நடந்தது. நீதிமன்றம் மிகமோசமான தீர்ப்பைக் கொடுத்தது. இந்நிலையில் பட்டியல் சமூக ஏழையின் மீது காவல்துறையினரால் சாதிய வன்மமான தாக்குதல் நடத்தப்பட்டதில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபோல தொடரும் காவல்துறை அத்துமீறல்களை தவெக அரசு என்ன செய்யப்போகிறது?? குற்றவாளிகளாக இருக்கும் காவலர்களை பணியில் இயங்கச் செய்து குற்றத்தை அதிகரிக்கப்போகிறார்களா? குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் தயக்கம், தாமதம்?
தவெக அரசே! தவறிழைக்கும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடு.
Wife of Velmurugan, who died by sucide after he was allegedly attacked by Tirunelveli city police, was offered a temporary gov. job under provisions of SC/ST (PoA) Act.
கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெக பொறுப்பாளர்களே!
அச்சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள்ளாக கள ஆய்வினை செய்ததில் நாங்கள் கண்டறிந்த உண்மைகளை முன்வைத்தோம். அன்று காலை 8 மணி முதலாக காத்திருந்த மக்களுக்கான குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் தவெக பொறுப்பாளர்களால் செய்துதரப்படவில்லை என்பதை அன்றே ஊடகச் சந்திப்பில் வெளிப்படுத்தினோம். சம்பவ இடத்தில் கொட்டிக்கிடந்த செறுப்புகளுக்கு மத்தியில் தண்ணீர் பாட்டில்கள் எவற்றையும் போதுமானதாக காண முடியவில்லை என்பதைச் சொன்னோம். இந்த வசதிகளை செய்து கொடுத்திருந்தால் பல இழப்புகளை தடுத்திருக்க இயலும். இதுபோல பல தவறுகள் நடந்திருந்ததை அங்கிருந்த மக்கள் வாயிலாக அறிந்ததை பதிவு செய்துள்ளோம்.
மேலதிக விசாரணைகள் நடந்தால் பல விவரங்களை அனைவரும் அறிய இயலும். இந்த சம்பவம் குறித்து அன்றய ஆட்சியாளர்களான திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல. அப்படியான குற்றச்சாட்டை வைப்பதெனில் உரிய விளக்கங்கள், ஆதாரங்களோடு வைப்பதுதான் ஆட்சியிலிருக்கும் தவெக கட்சிக்கு அழகாகும். அவ்வாறான முழுமையான விசாரணை நடத்தி நாங்கள் அறியாத தகவல்களை ஒருவேளை தவெக அரசு அறிந்திருந்தால் வெளிப்படுத்துங்கள். மாண்புமிகு அமைச்சரின் மேலோட்டமான குற்றச்சாட்டு ஏற்புடையதாக அமையாது.
தமிழ்நாட்டுக்கான 'ஆளுனர்' இன்று வைகை ஆற்றில் தண்ணீர் இல்லையென்பதை பார்த்தாராம், ஆகவே வைகையில் தண்ணீர் வரவைக்க முயற்சியை தமிழ்நாடு செய்யவில்லையெனில் ஆளுநர் மாளிகை நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்யும் என உணர்ச்சிவயத்தோடு பேசி இருக்கிறார்.
ஏன் வைகையில் தண்ணீர் இல்லை?
இவ்வாண்டு எல்-நினோ தட்பவெப்ப நிலை காரணமா இந்தியா முழுவதும் மழையின் அளவு மிகக்குறைந்தது. இதனால் வைகை அணை உள்ளிட்ட தென்னிந்திய அணைகளில் கொள்ளளவு மிகவும் குறைந்துள்ளது.வைககை அணையின் கொள்ளளவில் 50%க்கும் குறைவான நீர் உள்ளது. 71 அடி கொள்ளளவில் கிட்டதட்ட 32அடி அளவில் தான் நீர் உள்ளது. இதில் குடிநீருக்காக மிகக்குறைந்த அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணைக்கு நீர் கொடுக்கும் முல்லைப்பெரியாறு அணையிலும் மிகக்குறைந்த கொள்ளளவு உள்ளதால், வைகை ஆற்றில் கோடை காலத்தில் நீர் குறைவாகவே வரும்.
இந்த உண்மை மதுரையில் ஓடும் வைகை ஆற்றில் மூட்டை தூக்கும் கழுதைக்குக் கூட தெரியும். கழுதைக்கு தெரிந்த விடயம் , தமிழ்நாட்டிற்கு தண்ணீர்கேன் போட வந்தவருக்கு தெரியாதா? அது தெரிந்தால் அவர் ஏன் சங்கியாக இருக்கப் போகிறார்.
பீகாரில் இதேபோல தண்ணீர் ஓடாத ஆற்றில் ஓடவைத்த விடயம் மாண்புமிகு ஆளுநருக்கு தெரியுமாம். அதை வைகையில் செய்து காட்டப்போகிறாராம்.
நல்லது, மதுரை வைகை ஆற்றின் நடுவே உள்ள கல்மண்டபத்தில், 'மாண்புமிகு ஆளுநரை' உட்கார வைத்து இந்த நற்காரியத்தைசெய்ய வைப்போம். கோடைகாலத்தில் வைகை ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடும் வரை 'ஆளுநர்' கல்மண்டபத்தில் குடியிருக்க வேண்டும் எனும் கோரிக்கையை தாழ்மையுடன் முன்வைக்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர்கேன் போட வந்தவர், ஆற்றில் தண்ணீரை கொண்டுவருகிறேன் என்கிறார். வரவேற்போம்.