கட்சியிலிருந்து இரண்டு தனி நபர்கள் வெளியேறிய போது, "நாம் தமிழர் கட்சி என்கிற whatsapp குழு அழிவதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று நீங்கள் பேசியது எல்லாம் நினைவில் இருக்கா? கட்சி அழிஞ்சா போயிடுச்சு? நீங்கள் பல நேரங்களில் சான்றில்லாமல், பொய்யாகவும், உண்மையை விட மிகக் கூடுதலாகவும் பேசுவதையே முழுநேர வேலையாக செய்து வருவது உங்களை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு நன்கு புரியும்.
இப்போதும், நான் சொல்வதைப் பொய் என்று நிறுவ உங்களுக்கு ஒரு வாய்ப்பு... திமுகவிடம் துரைமுருகன் பணம் வாங்கினார் என்றால், எப்போது, யாரிடம், எவ்வளவு வாங்கினார் என்று சான்றுடன் வெளியிடுங்கள் பார்ப்போம். செய்வீர்களா @SavukkuOfficial?
அதை விடுத்து சீமான் யார் என்று நீங்க என்ன புதுசா புரிய வைக்க முயற்சிக்கிறீங்க? அப்படி எதுவும் செய்யச் சொல்லி உதயநிதி உங்களிடம் சொன்னாரா?
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதால் ஏழு தமிழரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆனால் தமிழக அரசு அதில் நாலு பேர் ஈழத் தமிழர் என்பதால் சிறப்புமுகாமில் அடைத்துள்ளது.
ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டிருப்பது எப்படி விடுதலையாகும்?
40 வருடங்களாக அகதிகளாக இருக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அகதிகளுக்கு “ஏதிலிகள்” என்று பெயர் மாற்றியதைத் தவிர வேறு எதை தமிழக அரசு செய்துள்ளது?
இலங்கையிலும் இங்கிலாந்திலும் ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் இந்த அகதிகளுக்கு செய்தது என்ன?
வன்மையான கண்டனங்கள்
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கஜேந்திகுமார் பொன்னம்பலத்தை அச்சுறுத்திய பொலிசார் கைது செய்யப்படவில்லை.
இதுதான் சிங்கள அரசின் சட்ட நீதி?
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் அடுத்தடுத்து இரண்டு கலைஞர் பிறந்தநாள் விழாக்கள்.
எத்தனை விழாக்கள் நடத்தினாலும் கலைஞர் செய்த துரோகத்தை ஈழத் தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
சுவிஸ் நாட்டுக்கு அகதியாக சென்ற சிறுமி மருத்துவகல்வி பயில்கிறார்
தமிழ்நாட்டிற்கு அகதியாக சென்ற குழந்தை கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில் தந்தையை பார்வையிடுவதற்காக தாயுடன் உண்ணாவிரதம் இருக்கும் நிலை
கலைஞர் ஈழத்தமிழருக்கு நன்மைகள் செய்துள்ளார் என்று கிளப்கவுசில் கதைச்சவன் எவன்டா?
இந்திய அரசும் (200 ரூபா) உபிகளும் அவரை பயங்கரவாதி என்று கூறுகின்றனர். அதற்கு அதே இந்திய நாட்டில் பூக்கடை வைத்திருக்கும் தமிழர் ஒருவர் கடவுளுக்கு அருகில் அவரை வைத்து அளித்திருக்கும் பதில் இது.
வீட்டில் கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு அண்ணாவைக் கூப்பிட்டவர்கள்
களத்தில் சக தோழியை காப்பாற்ற சுமந்து செல்லும் வலிமை மிக்கவர்களாக அவர்களை மாற்றியது போராட்டம்.
ஆம். போராட்டம் மகத்தானது
“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று ஒப்பாரி வைத்த தலைவர் அல்ல இவர். “மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” என்று மரணத்தின்போதும் உறுதியாக கூறிய போராளி இவர். தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
தியாகி சிவகுமாரன் 49வது நினைவு தினம். (05.06.1974)
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு ஈழத்தில் சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் பாராட்டுவிழா.
நாய் நன்றி உள்ள மிருகம்
நாய்களில் பலவகை இருந்தாலும் எல்லா வகை நாயும் தன் எஜமானுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும்
அதற்கு பிஸ்கட் போடுகிற ஒவ்வொரு முறையும் நன்றாக தன்வாலை ஆட்டும்
இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றவர்கள்
தமக்காக இந்தியஅரசுடன் போராடி தோற்றுவிட்டார்கள்
புதிய பாராளுமன்றத்தை திறந்து தன் ஜனநாயகம் குறித்து பெருமை பேசுகிறது இந்திய அரசு
அந்த அரசின் கீழ் உள்ள பெண்கள் தம்மீதான பாலியல்சீண்டல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி போராட்டம்
வெட்கம்!
சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது தமிழ்த்தேசிய போராளி நாகராசனை போலி என்கவுண்டர் மோதலில் சுட்டுக்கொன்றார்.
நாகராசன் தமிழ்நாட்டில் தமிழத்தேசிய விடுதலைக்காக போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்டவர்.
அவர் தமிழ்த்தேசிய போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படுவார்.
அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள்.
யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் 31.05.1981
காங்கிரஸ் அரசும் தமிழரை மிதித்தது.
மோடி அரசும் தமிழரை மிதிக்கிறது
ஆனால் “உங்கள் தமிழ் தொன்மையானது, உங்கள் திருக்குறள் இனிமையானது” என்று சொல்லி சொல்லி மோடி மிதிப்பதால் அது சில தமிழருக்கு இதமாக தெரிகிறது. வலி தெரிவதில்லை.
இனப்படுகொலை நடந்தது என்று கூறுவதற்கு விசாரணை தேவையில்லை. அதை செய்தது யார் என்று அறிந்து தண்டிப்பதற்கே விசாரணை தேவை.
விசாரணை நடைபெற்றால் சந்திரிக்காவும் ஒரு இனப்படுகொலை குற்றவாளிதான் என்பது உறுதியாகும்.