3 வயது குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க விடாமல் அராஜகம் செய்யும் தவெக MLA.
குழந்தையை இழந்த பெற்றோரின் மனநிலையை எண்ணி பார்க்காமல் கொடூரமாக நடந்துகொள்ள எப்படி மனம் வருகிறது?
டம்மி முதல்வராக இருக்கும் விஜய் அவர்களே.. உங்க MLA செய்யும் அராஜகத்தை பாருங்க.
#WhySilentCM
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்று வெளியிட்ட வெற்று அறிக்கையே இந்த ஒண்ணுமில்லாத வெள்ளை அறிக்கை!
அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் “வெள்ளை அறிக்கை” என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள்.
தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கவனித்திருந்தாலே இந்த வெற்று அறிக்கையின் தேவை இருக்காது; இதைத்தாண்டி இந்த அறிக்கையில் வேறு என்ன இருக்கிறது?
கடந்த காலங்களில் வெளியான வெள்ளை அறிக்கைகளை படித்து இருந்தாலே வெள்ளை அறிக்கை என்றால் என்ன என அறிந்திருக்கலாம்.
கடன்கள் எதற்காக வாங்கப்பட்டது - அது மாநிலத்தின் வளர்சிக்கு உதவியுள்ளதா? அதன் தாக்கம் என்ன? என ஒரு வார்த்தைகளும் இல்லை. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற பயமா? அவர்கள் செய்யும் அட்டுழியங்களை கேள்வி கேட்க துப்பில்லையா? இல்லை கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற 19+ பாலியல் குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப உங்கள் DUMMY CM வழிகாட்டுதலில் போடும் நாடகமா?
எது எப்படி இருப்பினும், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது.. அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என உண்மையை பேசியுள்ளீர்கள்.
அதுபோல, 2021 ஆம் ஆண்டில் 2021-22 - 27.05% ஆக இருந்த தமிழ்நாட்டின் Debt-to-GSDP Ratio தற்போது 26.43% ஆக குறைத்தும் தி.மு.கழக அரசுதான்.
மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் உங்கள் தலைவர் பட்டியல் போட்ட சாதனைகளும் நாங்கள் செய்ததுதான்.
எனவே, தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தவர்கள் மக்களை ஏமாற்றாமல், ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, அடுத்தவர்களின் மேல் பழிபோடாமல் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள்!
#TVKFails
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் இருவர் தங்கள் சொந்த கட்சி உறுப்பினரான இரு பெண்களைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில், புகார் கொடுத்த அந்தப் பெண்களையே தொடர்ந்து மிரட்டி, குற்றவாளிகளைக் காப்பாற்றும் கேடுகெட்ட வேலையை அப்பட்டமாகச் செய்து கொண்டிருக்கிறார் தவெக MLA சரவணன்!
இந்த குற்றத்திற்குத் துணைபோகும் MLA மீது Strict Action எடுத்தால், எங்கே உங்களுடைய தள்ளாடும் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்களா 'டம்மி' CM விஜய்?
குற்றவாளிகளுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் அரசியல் பொறுக்கிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் இந்த 'டம்மி' CM-ன் கையாலாகாத Worst Administration-ஐப் பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் காறித் துப்புகிறது!
#TVKFails
தமிழ்ச் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்!
காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் அவர்கள் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணையும் விழாவில்
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை.
இன்று (06-06-2026), சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட – காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் திரு. கஜா (எ) கஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவில், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம்:
தாய்க் கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக, வருக, வருக என நான் வரவேற்க விரும்புகிறேன்.
அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள்; கலைஞர் அரங்கத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். அந்த உணர்வோடு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் நான் வரவேற்கிறேன்.
75 ஆண்டு காலம் தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தி, பவள விழா கொண்டாடி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
அதுமட்டுமல்ல, ஒரு முறை அல்ல, ஆறு முறை தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வந்திருக்கிறீர்கள். நவீன தமிழ்நாட்டை உருவாக்கித் தந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அண்ணா அறிவாலயத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். எனவே, வந்திருக்கும் அனைவரையும் நான் மீண்டும் மீண்டும் வருக, வருக என வரவேற்கிறேன்.
எப்போதுமே ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்திற்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வசதியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆளுங்கட்சி அல்ல; ஆளுங்கட்சியாக இருந்து, இப்போது எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், பதவிக்காக நீங்கள் வரவில்லை, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் வரவில்லை. பணியாற்ற வேண்டும், இந்த இயக்கத்திற்குத் துணை நிற்க வேண்டும், தமிழ் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறீர்கள். அப்படி வந்திருக்கும் உங்களை எல்லாம் நான் மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன்.
இங்கு நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார், "நான் பல ஆண்டு காலம் அ.தி.மு.க.விற்குப் பணியாற்றி இருக்கிறேன்; இரண்டு முறை தேர்தல் களத்தில் ஈடுபட்டு இருக்கிறேன்; இருந்தாலும், அந்த இயக்கத்தில் இருந்தபோது நான் விசுவாசமாகப் பணியாற்றி இருக்கிறேன்" என்பதை வெளிப்படையாக அவர் எடுத்துச் சொன்னார். நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
எப்போதுமே ஒருவன், ஒரு தொண்டனாக இருந்தாலும் சரி, ஒரு செயல் வீரனாக இருந்தாலும் சரி, ஒரு தளகர்த்தராக இருந்தாலும் சரி, தளபதியாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி, தான் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருந்திட வேண்டும். எனவே, நிச்சயமாக தி.மு.க.வில் இணைந்திருக்கும் கஜேந்திரன் அவர்கள், நிச்சயமாக தி.மு.க.விற்கு விசுவாசமாக இருந்து பணியாற்ற இருக்கிறார் என்பதை இதன் மூலமாக அறிந்து கொள்கிறேன். அவர் மட்டுமல்ல, இங்கு வந்திருக்கும் நீங்களும் அப்படித்தான் இருக்கப் போகிறீர்கள்.
தி.மு.க.வினுடைய வரலாறு என்பது, 1949-இல் தொடங்கி, அதற்குப் பிறகு நடைபெற்ற 1952-இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னாலும், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்குப் பிறகு, 1962-இல் தேர்தல் களத்தில் ஈடுபட்டு, நாம் எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெறும் அளவிற்கு 50 இடங்களில் அன்றைக்கு வெற்றி பெற்றோம். அதற்குப் பின்னால் 1967-இல் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம்.
அண்ணா மறைவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். அதற்குப் பிறகு 1971-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றோம். 1971-இல் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில்தான், 1975-இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையை நாம் எதிர்த்தோம். அந்த நெருக்கடி நிலையை எதிர்த்தால் ஆட்சி பறிபோகும் என்பதைத் தெரிந்தே எதிர்த்தோம். நாம் கவலைப்படவில்லை. கலைஞர் அவர்கள் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், "ஆட்சி நமக்கு முக்கியமல்ல, ஜனநாயகம் தான் நமக்கு முக்கியம்" என்று கருதி, அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து, சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, தீர்மானம் போட்டு அன்றைக்கு நிறைவேற்றினார்கள். "நெருக்கடி நிலையை ரத்து செய்யுங்கள்; கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யுங்கள்" என்று தீர்மானம் போட்டார்கள்.
அந்தத் தீர்மானம் போட்ட காரணத்தால், 1976-ஆம் ஆண்டு நம்முடைய ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 13 ஆண்டு காலம் நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை.
மீண்டும் 1989-இல் ஆட்சிக்கு வந்தோம். 1991-இல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு தி.மு.க. துணை நிற்கிறது என்ற ஒரு பிரச்சாரத்தை நடத்தி, அதற்காக நம்முடைய ஆட்சியைப் கலைத்தார்கள்.
அதற்குப் பிறகு 1996-இல் நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்குப் பிறகு 2001-இல் நடைபெற்ற தேர்தலில் தோற்றோம். 2006-இல் ஆட்சிக்கு வந்தோம். 2011-இல் தோற்றோம். அதற்குப் பிறகு 2021-இல் ஆட்சிக்கு வந்தோம்.
இதை எதற்காக நான் சொல்கிறேன் என்று சொன்னால், வெற்றி தோல்வி என்பது நம்மைப் பொறுத்தவரையில் மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன்தான் தி.மு.க.காரன் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் தான், இன்றைக்கு வெற்றி வாய்ப்பை நாம் இழந்திருந்தாலும், ஆட்சிப் பொறுப்பை நாம் இழந்திருந்தாலும், எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நீங்கள் எல்லாம் இங்கு நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் தலைமையில் வந்து சேர்ந்திருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், நாம் வெற்றி பெற வேண்டும்; தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்; எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் தேர்தல் களத்தைச் சந்தித்தோம். நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று கருதி நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள், "நாங்கள் வருகிறபோது, எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடத்தில் சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறோம்" என்று சொன்னார்கள்.
அவர்கள் சொல்லிவிட்டுச் செல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், "நீங்கள் செல்லுங்கள்; உங்களுடைய விருப்பம்; உங்களுக்கு இருக்கும் ஜனநாயகம்; நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது; அதன் மூலமாக பி.ஜே.பி. ஆட்சி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அவர்களை நான் வழியனுப்பி வைத்தேன்."
எனவே, நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம் என்று கூறி, மீண்டும் வந்திருக்கும் உங்கள் அத்தனை பேரையும் வருக, வருக, வருக என்று வரவேற்று என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
ஸ்டிக்கர் ஒட்டுவதற்கென்றே ஒரு அரசாங்கம்... ஜால்ரா அடிப்பதற்கென்றே சில ஊடகங்கள்!
திமுக ஆட்சியின் உழைப்பில் உருவான திட்டங்களுக்கு "ஸ்டிக்கர்" ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் தவெக அரசும், உண்மையை உரக்கச் சொல்லாமல் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்ட சில 'பச்சோந்தி' ஊடகங்களும் மீண்டும் ஒருமுறை மக்கள் மன்றத்தில் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளனர்!
உண்மை என்ன? ஆதாரங்கள் இதோ! பதிவுத்துறையில் காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா பதிவு, ஆன்லைன் வில்லங்கச் சான்று என 18 சேவைகளை உள்ளடக்கிய "ஸ்டார் 3.0" (STAR 3.0) மென்பொருள் திட்டத்தை, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 2026-லேயே (22.01.2026 & 23.01.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துவிட்டார். இதற்கான செய்தித்தாள் மற்றும் ஊடக ஆதாரங்கள் இதோ அப்பட்டமாக உள்ளன.
வெட்கக்கேடான விளம்பர அரசியல்! ஆனால், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் தவெக அரசும், அதன் 'Toxic' ஐடி விங் போராளிகளும், இந்தத் திட்டத்தைத் தங்களது புதிய கண்டுபிடிப்பு போலவும், 'வரலாற்றுச் சாதனை' போலவும் கட்டமைக்க முயல்வது அப்பட்டமான திருட்டுத்தனம்! இவர்களைக் கேள்வி கேட்க துப்பற்ற சில ஊடகங்கள், ஆளுங்கட்சி வீசும் எலும்புத்துண்டுக்காக உண்மையை மறைத்து, தவெக-வின் மலிவான பி.ஆர் (PR) ஏஜென்சிகளாகச் செயல்படுவது ஜனநாயகத்தின் சாபக்கேடு.
முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2000-ஆம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்த ஸ்டார் திட்டத்தின் தொடர்ச்சியை, 2026-ல் திமுக அரசு "ஸ்டார் 3.0" ஆக தரம் உயர்த்தியது. அடுத்தவர் உழைப்பில் உருவான திட்டத்தில் வெட்கமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி குளிர் காயும் தவெக அரசே... சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட உங்களுக்குத் திராணி இல்லையா?
ஊடகங்களை விலைக்கு வாங்கி ஊரை ஏமாற்றிவிடலாம் எனப் பகல் கனவு காணாதீர்கள்! புள்ளிவிவரங்களும், ஆதாரங்களும் உங்களின் போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறியும்!
தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, சி.ஐ.டி காலனி இல்லத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களுடன் மரியாதை செலுத்தினோம்.
#KalaignarForever
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் நலன் என்பதை மட்டுமே வாழ்வாகக் கொண்ட முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103'வது பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்தில் கழகத் தலைவர், திரு.@mkstalin அவர்கள் உள்ளிட்ட கழக முன்னணித் தலைவர்கள் (ம) உடன்பிறப்புகள் மரியாதை செலுத்தினர்.
#KalaignarForever
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை தவெக அரசு முதலில் சீரமைக்க வேண்டும். அதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்புறம் துறையை சீரமைக்கலாம்.
- திரு @V_Senthilbalaji MLA அவர்கள்
#TVKFails
இது அதுல்ல?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி இரண்டாக உடைக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி MLA-க்களில் பெரும்பகுதியினர் தனிக்குழுவாகப் பிரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
சட்டப்பேரவைத் தலைவரும் இந்த திடீர்க் குழுவையே அங்கீகரிக்கின்றார்.
Sounds familiar?
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை உடைத்து, தூயசக்தி த.வெ.க. நடத்திய ஜனநாயகக் கேலிக்கூத்தைப் பற்றி நாம் பேசவில்லை.
இது மேற்கு வங்கத்தில் அவர்களது "கொள்கை எதிரி" பா.ஜ.க. செய்த செயல். தமிழ்நாட்டில் த.வெ.க. ஒருபடி மேலே சென்று MLA-க்களை விலைக்கே வாங்கிவிட்டனர்.
பா.ஜ.க. - த.வெ.க. பெயர்கள் வெவ்வேறானாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டனர்.
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தைத் திரையிடத் தடை, பக்ரீத் குர்பானி கொடுக்கத் தடை என மதச்சார்பின்மையிலும் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மண்டையில் இருக்கும் கொண்டை வெளியே தெரிந்துவிட்டது.
கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவியதற்கும் கண்டனம் தெரிவிக்காமல் கப்சிப்.
மிச்சம் இருப்பது மாநில உரிமை. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஒன்றிய அரசிடம் தெளிவுரை கேட்டு அதிலும் மண்டியிடத் தயார் என்ற சிக்னலை டெல்லிக்குக் கொடுத்து விட்டது இந்த அரசு.
மொத்தத்தில், ஜனநாயக - மதச்சார்பற்ற - மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஓர் அரசு அமைவதற்காகத்தான் ஆதரவு தருகிறோம் என்று சொன்ன கட்சிகளின் முகத்தில் ஒரே மாதத்தில் ஒரு லோடு கரியைப் பூசியிருக்கிறார்கள். இவர்களும் வாய்பேச முடியாமல் தவிக்கிறார்கள்.
#TVKFails
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்களில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever