தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
வாயைத் திறங்க டம்மி CM சார்!
“நீங்க ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு! ஆணவக் கொலைகள், பத்துக்கும் மேற்பட்ட தொடர் கொலைகள், சிறுமி மற்றும் முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை என மாநிலமே தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், ஊடகங்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து மௌன விரதம் இருக்கிறார்!”
- தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம்!
#TVKFails #TVKVijay #CMJosephVijay #DMKITWing #TamilNadu #KalaignarSeithigal
தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற விவசாயியை ஆய்வாளர் மிரட்டி தாக்கியத்தில் கவலைக்கிடம்.
காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாற்றுவதுதான் நீங்க சொன்ன மாற்றமா திரு @TVKVijayHQ சார்? சட்டம் ஒழுங்கை சீர் செய்ய சிறு துரும்பையாவது கிள்ளி போடுங்க..
#TVKFails
#WATCH | "எங்கள் ஆட்சி நடக்கிறது. மாமூல் தரவில்லை என்றால் நீங்கள் தொழில் நடத்த முடியாது" என தவெக நிர்வாகிகள் மிரட்டியதாக வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதி செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.
தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் மீது புகாரளித்துள்ளனர்.
சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#SunNews | #Vellore | #TVK
பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று திறந்துவைத்தேன். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம்.
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.
ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!
ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
#WATCH | கோவையில் நள்ளிரவு நேரங்களில் அட்டூழியத்தில் ஈடுபடும் இளைஞர்கள்..
இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.
#SunNews | #Coimbatore
#BREAKING | திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் பாராட்டு - திராவிட மாடல் அரசின் திட்டங்களை பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம்!
#MKStalin | #Srilanka | #Kalaignarseithigal
முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் தூய்மை அருணை அமைப்பாளருமான மாண்புமிகு ஐயா அவர்கள்
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள்…
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திருவண்ணாமலை மேற்கு,தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நேரில் சென்று தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றபெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தப்போது.
நெல்லை தியாகராய நகரில் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை என்ற 35 வயதுடைய பெண் தனது 5 வயது குழந்தையின் கண்முன்னே பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்!
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இதுதானா?
“பெண்கள் நலனே என் முதன்மை” என்று மேடைகளில் முழங்கி ஆட்சிக்கு வந்த த.வெ.க அரசும், பெண்கள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய் அவர்களும் இன்று என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
ஒரு பெண் பொதுவெளியில் கூட பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குழந்தையின் கண்முன்னே தாயை வெட்டி சாய்க்கும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு தைரியம் வந்திருக்கிறது என்றால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது என்பதற்கே இதுவே சாட்சி!
“சிங்கப் பெண் அதிரடிப்படை” என்று விளம்பரம் மட்டும் போதாது. பெண்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத ஆட்சி மக்களுக்கு எதற்கு?
தேர்தலுக்கு முன் கவர்ச்சி வார்த்தைகளை வைத்து மக்களிடம் வாக்கு வாங்கியவர்கள், இன்று பெண்களின் ரத்தம் சாலையில் சிந்தும் நிலைக்கு தமிழகத்தை தள்ளியிருக்கிறார்கள்!
இந்த ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியா? அல்லது வெறும் வசன அரசியலா?பதில் சொல்லுங்கள் @CMOTamilnadu@TVKVijayHQ
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
- கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#TVKFails