என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அ���ைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்சு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்சு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் என்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதியோர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சானிடரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மா��வர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிம���த் தொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 என்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக வேலை உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails
குமரியை நாசமாக்கும் IREL ஆலையின் அணுக்கனிம சுரங்க பரப்பை விரிவாக்குவதற்காக 1,144.06 ஹெக்டேர் நில ஒதுக்கீட்டை இன்னும் ஒரு வருடத்திற்கு காலநீட்டிப்பு செய்ய அனுமதி வழங்கியிருக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணை ரத்துசெய்யப்படும்வரை எங்கள் போராட்டம் தொடரும��.
வருபவர் போவரெல்லாம் சுரண்டிச்செல்ல எங்கள் நிலம் ஒன்றும் ஊரான்வீட்டு நெய் அல்ல.
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதின���று வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈ��ுசெய்ய முடியாத பேர��ழப்பாகும்.
திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
தென்காசியில் பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல்!
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பை பார்த்த பிறகும் தமிழ்நாடு காவல்துறையினர் எந்த பாடமும் கற்றுக்கொள்ளாது, மனச்சான்று இன்றி அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது வெட்கக்கேடானது.
கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உ���்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல்துறை, கள் இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல தேடித்தேடி வேட்டையாடுவது கொடுங்கோன்மையாகும். அப்பாவிகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், குற்றங்களைத் தடுப்பதிலும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருந்தால்,
��ட்டம் - ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும்.
உடலுக்கு எ��்தத் தீங்கும் செய்யாத ‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழ்நாடு அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் விற்பதற்குப் பெயர் என்ன? புனிதத் தீர்த்தமா? அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்குப் பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் தமிழ்நாடு காவல்துறையினர், ‘கள்’ இறக்கும் எளிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மருத்துவ குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. ‘தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் பனங்கள்ளை உணவாக வகைப்படுத்தி, உணவுக் குறியீடு "ரி001" வழங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கள்ளை தங்களின் சிறப்பு உணவுப் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளன. உலகின் பல நாடுகளும் தங்களின் பாரம்பரிய உணவாக கள்ளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கத் தடை இல்லாதபோது, தமிழ���நாட்டில் மட்டும் தடை எதற்கு? கள்ளின் மீதான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 23.01.26 அன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் பனைத் தொழிலாளர்கள் மீது தாக்��ுதல் நடத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, பொய் வழக்கு புனைந்து கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 20ஆம் நாள் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறை���ினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்ததோடு ‘ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் காவல் நிலையத்தில் அமரவைத்ததோடு, பனைத் தொழிலாளர்கள் எளிதில் பிணையில் விடுதலை ஆகிவிடக்கூடாது என்பதற்காக, கள்ளை முறையான ��ய்வுக்கு உட்படுத்தாமலே உள்நோக்கத்துடன் ‘நச்சு கலந்த கள்ளை விற்பனை செய்ததாக’ பொய் வழக்கு புனைந்தனர். அதிகார மமதையோடு காவல்துறை நிகழ்த்திய அக்கொடுமைகளை அப்போதே நான் கடுமையாக கண்டித்ததோடு, திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளும் பனைத் தொழிலாளர்களை விடுவிக்க போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பனைத் தொழில��ளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு கொடுத்தது யார்? யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு காவல்துறை பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது? சாராய முதலாளிகளின் தூண்டுதலாலேயே பனைத் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடுமைகள் நாளும் அரங்கேறுகின்றன. இக்கொடுமைகளை எதிர்த்து, பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காதது ஏன்? ஏனெனில் சாராய ஆலைகளை நடத்துவதே திமுக, அதிமுக
கட்சியினர்தானே?
பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக போராடி, அவர்களின் நியாயமான உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒற்றைப் பெரும் அரசியல் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது. (1/2)
கள் இறக்குவதற்கு ஆத��வாக நாம் தமிழர் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக போராடியும் வருகிறது. சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’, எங்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல, அது எங்களின் உரிமையுமாகும்.
பனைத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் புரிகின்ற இக்கொடுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள். வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
���ம்பி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மீது, கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்வதோடு, வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
த��ைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)
திருப்புவனத்தில் தம்பி அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து, அதனை மூடி மறைக்க முயன்றவர் சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கை மாறன்.
திருப்புவனத்தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் சூர்யா மனமகிழ் மன்றம் எனும் மதுக்கூடத்தை நடத்துபவர் சேங்கை மாறன்.
ஏனாதி, கணக்கன்குடி, கண்ணாரிருப்பு ப���ன்ற பகுதிகளில் தனது பினாமிகளை வைத்து வளக்கொள்ளை செய்பவரும் இதே சேங்கைமாறன்தான்.
அஜித்குமார் படுகொலை, மனமகிழ் மன்றம், வளக்கொள்ளை மூன்றையும் நான் தொட்டுப் பேசியதற்காகவே முதல் சுற்றிலேயே பேசவிடாது குறுக்கிட்டார் சேங்கை மாறன். பிறகு, என்னைப் பேசவிடாது, அவர் தூண்டிவிட்டதால், வன்முறையில் ஈடுபட்டனர் திமுகவின் பொறுக்கிகள்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் இளங்கோ, ந���கழ்ச்சியின் நெறியாளர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டார்கள்.
மனோ தங்கராஜ் அவர்களுக்கு !
கன்னியாகுமரியில் நடக்கும் கனிமவளக்கொள்ளைக்கும் உங்களுக்கு தொடர்பு இல்லை என்பது போலவும், நீங்கள் கனிமவள காவலர் போல ஊடகத்தில் பேசியுள்ளீர்கள் !
கனிமவள காவலரே !
உங்கள் உதவியாளராக இருந்த போத்திராஜ் மூலமாக கல்குவாரியில் வசூலிக்கப்பட்ட ஒரு கோடியை அவர் எடுத்துக் கொண்டு கேரளாவிற்கு ஓடிப்போனதை அறிந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளரை சந்தித்து போத்திராஜிடம் பணத்தை வசூல் தர சொல்லி கேட்டது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சீங்களா !
இப்போது உங்களிடம் இன்னொரு உதவியாளர் இருக்கும் வெள்ளை ரவி (எ) விஜிலென்ஸ் ரவி மூலமாக வசூல்வேட்டை நடத்தி வருவதை யாரும் அறியாமல் போவார்கள் என நினைத்தீர்களா ?
உங்கள் மகன் ரெமோன் மூலமாக கேரளா செல்லும் வாகனங்களில் வண்டிக்கு 300 வ��ூல் செய்து கனிவளத்தை காப்பாற்றுவது யாருக்கும் தெரியாமலே போய்விடும் என நினைத்து விட்டீர்களா ?
கேள்வி கேட்டவர்களை கோவணத்துக்குள்ள இருந்தீயான்னு கேட்டகுறீங்களே ? கனிமவள கொள்ளையை தடுக்காமல் நீங்க பாவாடைக்குள்ள இருக்குறீங்களா யாராவது மானமுள்ள தமிழன் கேட்டால் என்ன செய்வீர்கள் !
@mkstalin @Manothangaraj @HimlarE @dir_ed @ECISVEEP
அழகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும், வரலாற்று சின்னங்களும் நிறைந்த கன்னியாகுமரியில் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு சுற்றுலா கட்டமைப்பை உருவாக்கி ஒரு ஆகச் சிறந்த சுற்றுலா தலமாக கன்னியாகுமரியை மாற்றுவதற்கான நோக்கமும், எண்ணமும், செயலும் இங்கிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு இதுவரை இருந்ததில்லை.
ஒரு உயர்ந்த ���ோக்கமும் கனவும் சிறந்த செயல்திட்டத்துடன் சேர்ந்திருந்தால் குமரியை உலகம் வியக்கும் சுற்றுலா மையமாக மாற்றியிருக்க முடியும்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari
நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
பதின்ம பருவத்திலேயே பொதுவுடைமை தத்துவத்தில் பெரும் ஈர்ப்பு கொண்டு, 18 வயதிலேயே பொதுவுடைமை ��ட்சியில் இணைத்துக்கொண்டு பயணித்த பொதுவுடமை பேராசான்..!
வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து, ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்..!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி..!
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி..!
சாதிய ஒடுக்குமுறைக்கும், சமூக தீண்டாமைக்கும் எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து சமத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்ட சாதி ஒழிப்பு போராளி..!
தேர்தலின் வெற்றி தோல்விகள் மக்கள் தொண்டிற்கும், தூய பொதுவாழ்விற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்பதை தம்முடைய அயராத அரசியல் பணிகளால் உலகிற்கு உணர்த்திய மாண்பமை தலைவர்..!
ஐயா அவர்களை நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என் மீது பேரன்புக��ண்டு வாழ்த்தி, நல்ல நூல்களைப் பரிசளித்த பேரறிஞர்..!
பெருமதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தூய்மையான அரசியலுக்கும், அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், இந்தியப் பொதுவுடைமை கட்சியினருக்கும், ���மிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு புலிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கச்செய்து, ஐயாவின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரை நாம் தமிழர் கட்சி பகிர்ந்துகொள்கிறது.
பொதுவுடைமை பிதாமகன், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!