ஜனநாயகத்தைச் சூறையாடும் சர்க்கஸ் மன்னருக்கு நீதிமன்றம் வைத்த குட்டு!
மக்களின் வாக்குகளை மதிக்காமல், சுயநலத்திற்காக மற்றொரு கட்சிக்கு அடிமாடாக மாறிய துரோகிகளுக்கு, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துச் சரியான பாடம் புகட்டியுள்ளது!
மேடையில் பேசுவதற்கு முன்னால் கொடுத்த ஸ்கிரிப்ட்டை உள்வாங்கிப் படித்திருந்தால், அதில் இருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உங்களையே நோக்கியது என்பது புரிந்திருக்கும். அன்று சரியான நேரத்திற்குச் சென்றிருந்தால் அந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாமே?
முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ அவர்கள்
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?
பள்ளிக்கூடம் அறிவை வளர்க்கத்தான், உங்கள் அரசியல் புகழ் பாடுவதற்கு அல்ல
தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் தங்கள் அரசியல் கைவரிசையைக் காட்டி வந்த தவெகவினர், இன்று உச்சகட்டமாக முதலமைச்சர் விஜய் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்து அராஜகம் செய்துள்ளனர். சிறு பிஞ்சு நெஞ்சுகளில் உங்கள் சுயநல அரசியல் நஞ்சை விதைக்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?
ராஜ்மோகன் அவர்களே, ஆங்கரிங் வேலை செய்வதற்கு மட்டும்தான் இருக்கிறீர்களா அல்லது உண்மையிலேயே நீங்கள்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? பள்ளி வளாகத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று ஊடகங்களுக்கு ஒப்புக்கு பேட்டி கொடுத்துவிட்டு, திரைமறைவில் நாடகமாடுவதை நிறுத்துங்கள். உங்கள் வெற்று பேட்டிகளால் இங்கே எந்த மாற்றமும் வரப்போவதில்லை. குழந்தைகளிடம் அரசியல் விளம்பரம் தேடும் இந்தத் தரங்கெட்ட செயலை செயலிலும் தடுத்து நிறுத்திக் காட்டுங்கள்.
அரசியல் செய்ய ஆயிரம் மேடைகள் இருக்கின்றன, அங்கே போய் உங்கள் புகழைப் பாடிக்கொள்ளுங்கள். வகுப்பறைகளை உங்கள் சுய விளம்பரக் களமாக மாற்ற நினைத்தால் தமிழ்நாட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோதும் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தனி விமானத்தில் சென்னைக்கு ஓடிய @TVKVijayHQ, 268 நாட்களுக்குப் பிறகு கரூருக்கு சென்றதன் பின்னணி என்ன?
#KarurStampede#KarurTragedy#VijayFails
வாயை திறந்து பேசுங்க விஜய் சார்!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு தினமும் படுகொலை, பாலியல் வன்முறைகள் நடக்கிறது.
மின்வெட்டு பிரச்சனையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா அரசு மேகதாது பிரச்சனையை பேசி வருகிறது.
இவை எதற்கும் நடவடிக்கை எடுக்காமல், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் வெறும் டம்மி முதலமைச்சராக இருக்காதீர்கள் CM சார்.
#TVKVijayFails
பச்சைப்புள்ளங்க, படிக்கிற புள்ளங்க, சின்ன பொண்ணுங்க, வீட்ல இருக்க பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்கன்னு இவங்க எல்லோருக்கும் நடக்குற கொடுமைய சொல்ல முடியல CM சார்...
இந்த வார்த்தைகள் எல்லாம் ஞாபகம் இருக்கா CM சார்... ஆட்சி என்பது வசனம் பேசிவிட்டு ஷூட்டிங் முடிந்தது என்று போகும் விஷயமல்ல.
உறுதியான நடவடிக்கைகளை எடுத்து சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி பெண்களுக்கு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.
#TVKFails
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
நமது மக்கள் நலப்பணிகள் தொடரும்!
“நம் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நமது மக்கள் நலப்பணிகள் மென்மேலும் தொடரும்!”
- தி.மு.க முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உறுதி!
#SivaSankar#DMK#TamilNadu#KalaignarSeithigal