வைக்கோல் பட்டடை நாய் என்பது இதைத் தான். கிளிநொச்சியில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க விடாமல் தடுத்து அடாவடித்தனம் பண்ணிய இனவாத காடையர்கள்.
பசித்தவனுக்கு உணவு கொடுக்க விடாமல் தடுக்கும் இந்த காட்டுமிராண்டி கும்பல் தான் "தமிழின உரிமை" பற்றி பேசுகிறது. காலக் கொடுமை.
இதை ஒரு பெரிய சாகச செயல் மாதிரி இந்த சைக்கிள் கட்சி பரப்புரையாளர் காவித் திரிகிறார்.
வெட்கம் இல்லையா?
26 வயது பழங்குடி இளைஞர் மணிமாறனை அடித்துப் படுகொலை செய்த Gripwell Multi tech pvt. ltd கம்பெனியின் முதலாளி கலீல் ரஹ்மான், அவருடைய மகன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரும்புக் கடை செல்வம். 8 மணி நேரம் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து படுகொலை செய்து உடலை முட்புதருக்குள் வீசிய கொடூரம்.
watch full video on Neelam Social
Link : https://t.co/RsZNNzw3fU
#ManimaranMurder | #JusticeForManimaran | #tngoverment | #neelamreports
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேர் வேலைகளை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
AI and Automation மூலம் ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்களில் 40%, டிரக் ஓட்டுநர்களில் 47%, கணக்காளர்களில் 64%, கல்வி கற்பித்தல் உதவியாளர்களில் 65%, துரித உணவக ஊழியர்களில் 89 சதவீதத்தினரின் வேளை பறிபோகலாம் என கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவின் மூலமான உழைப்பு பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் பொருளாதாரத்தை மறுவடிவமைப்பு செய்யும்.
அதற்கு ஏற்றவாறு கல்வி உள்ளிட்ட கட்டமைப்புகளை அரசு மாற்ற வில்லை என்றால் வேலையின்மையும் வளர்ச்சி தடைகளும் உருவாகும்.
#AI #US #layoffs
சென்னை மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர் கைது விவகாரம், பணி நிரந்தரம், தனியார் மயத்திற்கு எதிராக எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் ப்ரியா பதில் கூற மறுத்துள்ளார். மேலும் துணைமேயர் கண்ணியமற்ற வார்த்தைகளால் பேசியுள்ளார் .
இதனை கண்டித்து #CPIM#CPI கவுன்சிலர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
@chennaicorp #ChennaiCorporation #Sanitaryworkersprotest
தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள CPIM ☭ கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி
கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4 50 மணி அளவில் உயிர் இழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு.
கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர்.
அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும். கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை.
சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் சிறதாவது இருக்க வேண்டும் @mkstalin@Chief_Secy_TN@thamoanbarasan@sivasankar1ss@RAKRI1
இஸ்ரேல் உருவாக்கியுள்ள கொடூரமான பட்டினியின் விளைவாக காசாவில் உள்ள பாலஸ்தீன குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இப்படித்தான் மிகக் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
#children
5 ஆம் நாளாக தொடர்கிறது காத்திருப்பு போராட்டம்.
25 மாதமாக பணி ஓய்வு பெற்ற 3500 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்கள், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 வருட ஊதிய ஒப்பந்த நிலுவையை போக்குவரத்து துறை தராமல் உள்ளது.
தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தமிழகம் முழுவதும் துவங்கினர்.
இப்போராட்டம் இன்று 5 ஆவது நாளை எட்டியுள்ளது.
காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
#Transportworkers #CITU
@CMOTamilnadu@sivasankar1ss@Udhaystalin
LTUC தலைவர் கு. பாரதியை அலைக்கழிக்கும் காவல்துறை - அவருக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் குவிந்த வழக்கறிஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்.
#sanitaryworkers | #protest | #tamilnadu | #tnpolice
ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை, ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுத்தும் இழிவான போக்கை, தனியார்மயமாக்குதலால் தடுக்க முடியாது.
தனியார்மய நடவடிக்கை அந்த மக்களை எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய உழைக்கும் மக்களை, தனியார்மயம் மேலும் சுரண்டலுக்கு உட்படுத்தும் அமைப்பில் வைத்திருக்கிறது. மேலும், அவர்களைப் பாதுகாப்பற்ற சமூகத்தில் இழிவாகக் கருதப்படும் தொழில்களில் மட்டுமே ஈடுபடுத்துகிறது. இதைத் தடுக்க அரசு தான் முன்வர வேண்டும்.
தொடர்ச்சியாக உழைக்கும் மக்களை வெள்ளைக் காலர் (white-collar) வேலைகளில் புறக்கணிக்கப்பட்டு, நீலக் காலர் (blue-collar) வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துவது சமூகநீதி அல்ல. தூய்மைப் பணியை, சுகாதாரத் துறைக்கு கீழ் ஒரு வேலையாக உருவாக்கி, அவ்வேலையை அரசு அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பாக கொடுக்க வேண்டும்.
அப்போது தான் இழிதொழில் என்ற கருத்து சமூகத்தில் ஒழியும். சமூகத்தில் ஒரு மனிதனின் மதிப்பு, அவன் வைத்திருக்கும் நிரந்தரப் பணி, சம்பளம் மற்றும் வைப்புப்பணம், சமூகப் பாதுகாப்பு, பிற சொத்து உருவாக்கத்தில் அவனது பங்கு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. எந்தவித சுகபோகங்களும் இல்லாத மனிதர்களின் மதிப்பை இந்த அரசு உருவாக்கப் போகிறது என்ற கொள்கை முடிவு தெளிவில்லாமல், சமூக மாற்றம் சாத்தியமற்றது.
#அறிவோம்_திமுக
#StopPrivatization
#SavePeople
#Sanitaryworkersprotest
1. கவின் கொலை மற்றும் ஆணவ படுகொலை தனி சட்டத்தை பற்றி பேசவில்லை.
2. நேரில் சந்தித்த தூய்மை பணி தொழிலாளர்கள் பற்றி பேசவில்லை.
3. பாஜக அரசு நடத்திய ஓட்டு திருட்டு #VoteChori பற்றி பேசவில்லை
படத்தில் வர வசனங்கள் மாதிரி பேசிவிட்டு கிளம்பிவிட்டார் #TVKMaanadu#TVKMaduraiMaanadu