மாயா மச்சீந்தரா பாடலில் வரும்
“மாறன் கலைக்கூடம்,
மஞ்சத்தில் உருவாக்கும்,
மேஸ்திரி…
காதல் சாஸ்திரி…”
என்ற வரியில் வரும் மாறன் கலைக்கூடம் என்பதற்குப் பொருள் தேடினேன்.
“அது யாருடா மாறன்… அப்படி என்ன நாம் தெரிந்து வைத்திராத கலைக்கூடத்தை அவர் கட்டியிருக்கிறார்?” என்று தேடவே, மாறன் அலங்காரத்தை வந்தடைந்தேன்.
மாறன் அலங்காரம் என்ற நூல் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் எழுதப்பட்டது. நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர் அவர்.
மாறன் அலங்காரம் — அடிப்படையில் ஒரு தமிழ் இலக்கண நூல். ஆனால், அது தமிழ் இலக்கணத்தை மட்டும் பேசுவதில்லை. மாறனாகிய நம்மாழ்வாரின் பெருமையைப் பாடும் நூலாகவும் இருக்கிறது.
பாண்டிய மன்னர்களை மாறன் என்று அழைப்பதுண்டு. பாண்டிய மன்னர்களின் சிற்றரசர் மரபில் வந்ததால் நம்மாழ்வாருக்கும் மாறன் என்ற பெயருண்டு.
தமிழ் மொழியின் ஒட்டுமொத்த அமைப்பையும், இலக்கிய நெறிகளையும் முறைப்படுத்தும் ஐந்து முதன்மை இலக்கணப் பிரிவுகளாகிய எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் ஆகிய ஐந்திலக்கணம் பற்றி நாம் அறிவோம்.
இதில் அணி இலக்கணம் என்பது செய்யுள்களுக்குச் சொல்லாலும் பொருளாலும் அழகு சேர்ப்பதை விளக்கும் இலக்கணமாக அமைகிறது. அணி — அணிகலன் என்பதை அலங்காரம் என்ற வடமொழிச் சொல்லாலும் குறிப்பதுண்டு.
தமிழ் மொழியின் அணிகளைக் கொண்டு மாறனை அலங்கரிப்பதால் அந்நூலுக்கு மாறன் அலங்காரம் என்று பெயர்.
சரி, மீண்டும் பாடலுக்கு வருவோம். யார் இங்கே அப்படியொரு மாறன் கலைக்கூடத்தைக் கட்டுகிறார் என்றால் முதலில் நம்மவர், கமல்ஹாசர்தான். இரண்டாவதாக, நம்ம வாலி அவர்கள்.
கமலை “காதல் இளவரசன்” என்று எளிமையாகச் சொல்லிவிட்டால் அதில் என்ன “அலங்காரம்” இருக்கிறது?
“மாறன் கலைக்கூடம்
மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி…
காதல் சாஸ்திரி…”
என்று ஒரு காதல் வித்தகனைப் பிரமாண்டமாக, கம்பீரமாக விவரித்தால்தானே அழகு!
அதுபோல் 1970, 1980களில் பிறந்த எம் போன்ற பாவப்பட்ட பிறவிகளுக்கு முத்தத்தின் மதிப்பைக் கற்றுக்கொடுத்ததில் கமலுக்குப் பெரும்பங்குண்டு என்பது மறுப்பதற்கில்லை.
முத்தத்திற்கு எது அழகு? ஏது சுவை? பொறுங்கள். நாயகனும், நாயகியுமே விளக்குகிறார்கள். கேட்போம்.
அவன்:
“உன்னை நான் சிந்தித்தால்
உண்டாகும் தித்திப்பை
உதட்டுக்குள்
பொத்தி வைத்தேன் நாளும்…”
அவள்:
“பொத்தி வைத்த
தித்திப்பை நீ
தந்தாலென்ன…
முத்தமிட்டு சர்க்கரை நோய்
வந்தாலென்ன…”
அவன்:
“தினமும் தினமும் வரலாமா?
தவணை முறையில் தரலாமா? சொல்லடி…
சோன் பப்படி…”
அவள்:
“செயலில் இறங்கு சீக்கிரமா
மீனம் மேஷம் பாக்கணுமா
மென்னுடா…
என்னைத் திண்ணுடா…”
“மலரை வண்டு மொய்த்திட
மாதம் தேதி ஏது?
மீன மேஷம் பார்ப்பதோ
காதல் தோன்றும் போது…”
என்று அதிகம் யோசிக்காமல் பகிரப்படும் முத்தங்களே காதலில் முத்தங்கள். மற்றதெல்லாம் வெறும் சத்தங்கள்!
மேலும், கமலை உலக நாயகன் என்று நேரடியாகவும் அவர் சொல்லவில்லை.
“உனையும் எனையும் புனைவோமா
உலகப் படமாய் தருவோமா?”
என்று மனிஷா கொய்ராலாவை விட்டுக் கால்ஷீட் கேட்க வைத்துவிட்டு,
“ஹஜ்ஜி மா… செல்ல புஜ்ஜி மா…” என்று கொஞ்சியும் இருக்கிறார்.
பாண்டி நாட்டு பரமக்குடியில் பிறந்த மாறன் கமல்ஹாசனுக்கு, சோழ தேசத்து ரங்கராஜன் வடித்த “மாறன் அலங்காரம்” “மாயா மச்சீந்தரா” பாடல் என்றால் அது மிகையல்ல.
அழகிய வார்த்தைகளை மீட்டருக்குள் நிரப்பிப் பாட்டெழுத பலராலும் முடியும். வார்த்தைகளுக்குள் இத்தனை சூட்சுமங்களை ஒளித்து வைக்கவும், அந்த வார்த்தைகளை கச்சிதமாக மீட்டருக்குள் பாட்டில் வைக்கவும் வாலி ஒருவரால் மட்டுமே முடியும்!
ஆம், இன்றைய சபாஷ் வாலி மூமென்ட் தான்❣️
@ShobhithaK #ShobhiScribbles
#வாலி #கமல்ஹாசன் #மாயா_மச்சீந்தரா
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளைரை வெல்ல வைக்க வாக்கிற்கு பணம் கொடுத்தது மட்டுமில்லாமல் சுயேச்சை வேட்பாளர்களையும் அவர்களின் வாக்குச்சாவடி முகவர்களையும் விலைக்கு வாங்கியதை அம்பலப்படுத்தும் சுயேச்சை வேட்பாளர் !
இதுதான் தூயசக்தியா? @TVKVijayHQ
I have written to the Chief Election Commissioner urging him to meet Opposition MPs at Samvidhan Bhavan in Parliament. @ECISVEEP
The Election Commission is the guardian of every Indian’s right to vote. When that trust is under strain, the CEC must meet elected representatives, address their concerns and reaffirm the Commission’s independence and impartiality.
The time for dialogue and corrective action is now.
வாழும் போதே ஒரு கலைஞன் கொண்டாடப்பட வேண்டும்.
சிங்கீதம் சீனிவாஸ் எனும் திரை மேதையின் பற்பல பரிமாணங்களை எதிர்காலக் கலைஞர்களுக்காக காட்சிப்பதிவு செய்த இன்னொரு மேதை @ikamalhaasan இந்நேரத்தில் நன்றியுடன் வணங்குகிறேன்.
கிட்டத்தட்ட நூறாண்டு சரித்திரம்.
🙏❤
https://t.co/JJNtqolBDF
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில்,
இளமையுடன் உயிர் நீத்தார்.
அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள்
நானும் உளேன்.
- கமல் ஹாசன்
Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did.
- Kamal Haasan
தாராபுரம் இடைத்தேர்தலில் இந்த பேச்சளாரின் பிரச்சாரம் அருமையா இருக்கு “சும்மா விஜய்க்கு ஓட்டு போட்டோம்” என வாக்களித்த மக்களுக்கு வாக்கு செலுத்துவதின் அவசியத்தை விளக்கி பேச இருக்கிறார்
ஓட்டு போடுறாங்க இல்ல அது ஒரு பக்கம் இருக்கட்டும் தெளிவான கொள்கை விளக்கம்யா 🔥🔥
#திமுக🖤♥️
அசால்டா அடிச்சாரு பாருங்க! என்னா ஒரு Clarity 💯👌👌
"இந்த ஒரு வியாபாரியை ஜெயிக்க விட்டா 234 பேரும் வியாபாரியா மாறிடுவாங்க. ஆனா ஒரு தொகுதியில் தோற்கடிச்சா மத்த எல்லா MLA க்களும் TVK வின் குதிரை பேரத்துக்கு படியாம மூடிட்டு வேலை பாப்பாங்க".
இவனுங்களை இப்படி தான் Expose பண்ணனும்
ரொம்ப காலத்துக்கு பொய்களை வச்சே காலத்தை ஓட்ட முடியாத
வச்சு உரிச்சு உப்புகண்டம் போட்டுட்டாப்ல
பொருப்புள்ள பதவில இருக்கீங்க பொறுப்புடன் நடந்து கொள்ளுங்க
இசைஞானி இளையராஜாவைச் சந்திக்கும் என் முறை வந்த போது அவர் முன்னால் முன்னேறும் அத்தருணம் இயல்பாகக் கை கூப்புகிறேன். அவரும் பதிலுக்கு நிறைவாகக் கை கூப்பிய தருணத்தில் அப்படியே காந்தப் போல ஒட்டிக் கொண்டு விட்டன என் கைகள்.
தன் மன அலைகளில் இந்தக் கடைக்கோடி ரசிகனின் உள்ளார்ந்த அன்பைப் புரிந்திருப்பார் போலும். ❤️
கமல் சாருக்கு விருதுகள் கிடைப்பது என்பது நிச்சயமாக நமக்கு மகிழ்ச்சியான பெருமைபடும் நிகழ்வு. ஆனால், அவருடைய திறமையையும் புகழையும் நிரூபிக்க எந்த விருதும் தேவைபடாது…
உண்மையில், கமல் சார் போன்ற ஒரு மகத்தான கலைஞருக்கு ஒரு விருது வழங்கப்படும்போது, அந்த விருதின் மதிப்புதான் உயர்கிறது.
ஒரு விருதைப் பெற்ற கலைஞர்களின் பட்டியலில் கமல் சாரின் பெயர் இடம்பெறுவது, அந்த விருதுக்கே ஒரு பெருமை.
சினிமாவை வெறுமனே கடந்து சென்றவர் அல்ல கமல் சார்;
சினிமாவின் எல்லைகளையே தொடர்ந்து விரிவுபடுத்தியவர்...விரிவுபடுத்துபவர்…
கலை, நடிப்பு, சிந்தனை, பரிசோதனை என ஒவ்வொரு தளத்திலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியவர்... உருவாக்குபவர்… தொடர்ந்து உருவாக்க போகிறவர்…
இன்னும் பல தலைமுறைகள் கமல் சாரை ஒரு கலைஞராக மட்டுமல்ல, ஒரு பாடமாகவும், ஒரு அளவுகோலாகவும் பார்த்துக் கொண்டிருக்கின்றன… பார்க்கப் போகின்றன….
விருதுகள் அவரை உயர்த்துவதில்லை…
கமல் சாரின் பெயர்தான் விருதுகளுக்கு உயரத்தை தருகிறது.
கமல்ஹாசன்…. வெறும் பெயர் அல்ல
தமிழ் சினிமா எட்டிய உயரம் 💪
இந்திய சினிமா எட்டிய உயரம் 💪
உலக சினிமா கொண்டாட வேண்டிய சிகரம் ❤️🙏🙇 @ikamalhaasan
God Bless
#Kamalhaasan
#Cinema