கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
தஞ்சை மண்ணில் பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் எண்ணம் டெல்டாக்காரரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் ஒரு போதும் நிறைவேறாது.
பொய்களையும் அவதூறுகளை முறியடித்து விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்போம்!
#AsianYouthGames2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு! 🥇🥇
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.
கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.
நேற்று நான் #BisonKaalamaadan-இல் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது.
@SportsTN_@Udhaystalin
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சீர்மிகு நான்காண்டு #திராவிடமாடல் ஆட்சியில், மக்கள் நலன் காத்திட, குடும்பத்தின் நலன் போற்றிட, சேலம் மத்திய மாவட்டம்- காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில்
நடைபெறும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.மேலும் பயனர்களுக்கு அனைத்துப் பரிசோதனை முடிவுகள் உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகளை வழங்கினேன்.
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேலம் மத்திய மாவட்டம்-காடையாம்பட்டி மத்திய ஒன்றியம்-மூக்கனூர் ஊராட்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தமிழ்நாட்டில் புதிய சுற்றுலாத்தளங்களை உருவாக்கி சர்வதேச சுற்றுலாத்தளமாக உயர்த்தும் நோக்கில்,விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் யுனொஸ்கோ அமைப்பு பாரம்பரிய சின்னமாக அங்கிகரித்துள்ள செஞ்சிக்கோட்டையில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டையின் அடிவாரம், கல்வெட்டுகள், ராஜகிரி கோட்டை, கிருஷ்ணகிரி, சந்திரகிரி கோட்டை, வெடிமருந்து கூடம், நெற் களஞ்சியம், வேணுகோபால் கோயில், படிகட்டுகளுடன் காணப்படும் குளம், கல்யாண மகால், குதிரைகள் கட்டும் இடம், உடற்பயிற்சி கூடம், யானைக் கட்டும் மண்டபம், யானைக்குளம், சக்கரைக் குளம், செட்டிக் குளம், சதாத்துள்ளாகான் மசூதி, சிவன் மற்றும் அம்மன் கோயில், வெங்கடரமணா கோயில் பகுதிகளை பார்வையிட்டு, செஞ்சிக்கோட்டையின் அடிவாரம் மற்றும் முக்கிய பகுதிகளில் கூடுதலாக குடிநீர் வசதி, மின்மிளக்கு வசதி, பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினேன்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.தரணிவேந்தன்,செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேலம் மத்திய மாவட்டம்-காடையாம்பட்டி மத்திய ஒன்றியம்-பொம்மியம்பட்டி ஊராட்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கும் முக்கியப் பங்காற்றி வரும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இந்த கல்வியாண்டில் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராமபிரதீபன், மாநில தடகள விளையாட்டு சங்க துணைத் தலைவர் திரு.எ.வ.வே.கம்பன்,வேலூர் மாவட்ட கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் திருமதி.அ.மலர், கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி.இல.இரேவதி, ஆகியோர்,பேராசிரியர்கள்,மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேலம் மத்திய மாவட்டம்-காடையாம்பட்டி மத்திய ஒன்றியம்-குண்டுக்கல் ஊராட்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
🛑 #SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் இது.
🗳️ இதற்காக, வரும் 28-10-2025 மாமல்லபுரத்தில் நடைபெறும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக் கூட்டத்தில் உடன்பிறப்புகளைச் சந்திக்க வருகிறேன்.
🌄 ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாம் உழைப்பை விதைத்தால்தான், மாநில அளவிலான வெற்றியை அறுவடை செய்ய முடியும்! வார்டு நிர்வாகி முதல் மாநில நிர்வாகி வரை ஒவ்வொருவரும் அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற உழைப்போம், ஏழாவது முறையும் கழக ஆட்சியை அமைப்போம்!
#LetterToBrethren
கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேலம் மத்திய மாவட்டம்-காடையாம்பட்டி மத்திய ஒன்றியம்-உம்பிளிக்கம்பட்டி ஊராட்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள்.
வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக் கணக்காகத்தான் ஆகும்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#LetterToBrethren
சேலம் மத்திய மாவட்டம்- காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம்- நடுப்பட்டி ஊராட்சி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்,கிளை செயலாளர் திரு.கே.சின்ன காவேரி அவர்கள் அண்மையில் மறைந்ததை அடுத்து இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களின் குடுமபத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம்- ஜவ்வாது மலை, கரூர் மாவட்டம் - பொன்னணியாறு அணை மற்றும் நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை ஆகிய இடங்களில் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் ரூ 7.46 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ 16.30 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வில் கலந்து கொண்டேன்.
இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் திரு.க.மணிவாசன், இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குநர் திரு.தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் திருமதி.ச.கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
🪹 திருநங்கையர்கள் பாதுகாப்பாகத் தங்கி, கல்வியைத் தொடர உதவும் ”அரண்” இல்லங்களைச் சென்னை – செனாய் நகர், மதுரை – அண்ணா நகரில் சமூகநலத்துறை சார்பில் திறந்து வைத்தல் -
👩🏽🍼 தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் இந்தியாவிலேயே அதிக அளவாக 43% கொண்டுள்ள நம் தமிழ்நாட்டின் 16 #SIPCOT-களில் குழந்தைகள் காப்பகங்கள், திண்டிவனம் & தேனியில் மெகா உணவுப் பூங்காக்கள் ஆகியவற்றை @TNIndMin சார்பில் திறந்து வைத்தல் -
🌟 @tnhrcedept சார்பில் திருச்செந்தூர், திருவரங்கம், திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட திருக்கோயில்களில் 27 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, மருதமலை உள்ளிட்ட 4 திருக்கோயில்களில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிநியமன ஆணைகள் வழங்குதல் –
👩🏽⚖ சட்டத்துறை சார்பில் மதுரை & வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான புதிய கட்டடங்கள் திறந்து வைத்தல் –
🏞 சுற்றுலாத் துறை சார்பில் சவ்வாதுமலை, கொல்லிமலை, பொன்னணியாறு அணை உள்ளிட்ட இடங்களில் முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகளைத் திறந்து வைத்து, மேலும் 5 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் –
என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!
@regupathymla@geethajeevandmk@PKSekarbabu@TRBRajaa@SalemRRajendran