I am happy to announce that I have joined the Bharatiya Janata Party.
I take this step with a commitment to serve society, work for the people, and contribute towards the development of our nation.
I look forward to learning, working with fellow members, and participating in public service with dedication... Together with people, for people... #bjp #bjp4nation
I am happy to announce that I have joined the Bharatiya Janata Party.
I take this step with a commitment to serve society, work for the people, and contribute towards the development of our nation.
I look forward to learning, working with fellow members, and participating in public service with dedication... Together with people, for people... #bjp #bjp4nation
தற்குறிகளால் உருவாக்கப்பட்ட தரம் கெட்ட தமிழக அரசாங்கமே!!
கருத்துகளை கருத்தியலாக எதிர்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை சகிப்புத்தன்மை கூட இல்லாத நீங்கள் எப்படி ஐந்து வருட ஆட்சியை வன்மம் இல்லாமல் செய்ய போகிறீர்கள்.?
#StandWithMaridhas#FreedomOfSpeech#SupportMaridhas
மருத்துவத்துறையில் மிகவும் புகழ்பெற்ற KMCH நிறுவனத்தின் நிறுவன தலைவர் திரு. நல்ல G பழனிசாமி அவர்களின் துணைவியார் திருமதி. தவமணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் KMCH குழுமத்தின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், அம்மையாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
இன்றைய தினம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற திருநிறைச்செல்வன் ஹரிஹரசுதன் மற்றும் திருநிறைச்செல்வி சிவசங்கரி அவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தேன்.
மணமக்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தேன்
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என் ஆருயிர் தம்பி திரு. @annamalai_k அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நேற்றையதினம் @BJP4TamilNadu சார்பாக சென்னை ராயப்பேட்டை YMCA வில் நடைபெற்ற பண்டித் தீன்தயாள் உபாத்யாயா பயிற்சி பேரியக்கம்-2026 நிகழ்வில் @bjpkarurdt மாவட்ட தலைவர் ஆற்றல்மிகு செயல்வீரர் திரு @VVSenthilnathan வழிகாட்டல்படி
கலந்துகொண்டேன்.
அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப @CMOTamilnadu நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தமிழக அரசுத்துறைகளில் 40%-க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஐந்து லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளித்து, ஐந்தாண்டுகாலமாக ஒரு லட்சம் பணியிடங்களைக் கூட நிரப்பாமல் ஏமாற்றிய முந்தைய திமுக அரசின் வஞ்சகத்தால் தற்போது தமிழக அரசுத்துறைகள் காலிப்பணியிடங்களால் நிரம்பி வழிகின்றன. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர்களின் பிரதிநிதியாகவும் மாற்றுச் சக்தியாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தவெக அரசு உடனடியாக தகுதித் தேர்வுகளை நடத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்கி, அரசு இயந்திரம் சீராகச் செயல்பட வழிவகுக்க வேண்டும்! அது தான் ஒரு பொறுப்புள்ள அரசுக்கு அழகு!
திமுகவின் நியூ வெர்ஷனான தவெக!
செங்கல் மற்றும் ஜல்லியை இலவசமாகத் தர மறுத்த கிரேன் ஓட்டுநர் மீது தவெக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தவெக நிர்வாகி ஒருவர் ₹1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே, மீண்டும் ஒரு தவெக நிர்வாகி மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது ஆளும் கட்சியினரின் அராஜகப் போக்கைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
திமுக தீய சக்தி, தான் தூய சக்தி எனத் தம்பட்டம் அடித்துவிட்டு, தீய சக்தி திமுகவின் நியூ வெர்ஷனாக தவெக உருமாறி வரும் வேளையில், முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தனது கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்க வேண்டும்! அதுதான் தமிழக மக்களுக்கும் தவெகவுக்கும் நன்மையைப் பயக்கும்!
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் பார் உரிமையாளர் தவெகவைச் சேர்ந்தவர் என்பதால் இச்சலுகை கிடைத்திருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"இவங்களே பாம் வைப்பாங்களாம், இவங்களே எடுப்பாங்களாம்" என்பதைப் போல நடக்கும் இந்த தில்லுமுல்லு நாடகங்கள் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தெரியாமலா நடக்கும்? தவெக நிர்வாகிகளுக்கு கொலை செய்யவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடவும், மிரட்டி மாமூல் வாங்கவும், சட்டவிரோதமாக டாஸ்மாக் நடத்தவும் முழு சுதந்திரம் கொடுப்பது தான் அனைவருக்குமான ஆட்சியா?
ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதாக பெருமை பீற்றிக் கொண்ட தவெக அரசு, அவற்றில் எத்தனை கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும். முந்தைய அரசைப் போலவே வெற்று விளம்பரங்களில் ஆட்சி நடத்துவதை விட, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் @CMOTamilnadu கவனம் செலுத்த வேண்டும்.
"தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்" என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் (@TVKVijayHQ) அவர்களே..
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே? தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே?
குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை.
எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்!
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் X தள கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
18 X தள கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு..