தொட மாட்டேன் தொடவும் விட மாட்டேன், அப்படின்னு மேடைக்கு மேடை சும்மா வீர வசனம் பேசுறீங்களே விஜய் அங்கிள் ஆமா, நீங்க என்ன டாஷ் புடுங்கினீங்கன்னு உங்க நடவடிக்கையிலேயே தெரியுது.
100 கோடி ரூபாய்க்கும் மேல மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடா பத்திரம் பதிவு பண்ணி கொள்ளையடிச்சிருக்காங்க. இது ஏதோ சாதாரணமா நடந்த விஷயம் கிடையாது. பக்காவா ஸ்கெட்ச் போட்டு பண்ணியிருக்காங்க
ஒரு கோவில் நிலத்தை பத்திரம் பதியணும்ன்றதுக்காகவே, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு அந்த இடத்துக்கு அவசர அவசரமா டிரான்ஸ்பர் போடுறாங்க. மத்த அதிகாரிகளை எல்லாம் அன்னைக்குன்னு பார்த்து லீவு எடுக்க வைக்கிறாங்க. சரி, பத்திரம் பதிஞ்சு முடிஞ்சஅடுத்த நாளே அந்த பதிவாளரை அங்கிருந்து வேற இடத்துக்கு மாத்துறாங்க இதெல்லாம் தற்செயலா நடக்குற விஷயமா? இது அப்பட்டமான, திட்டமிட்ட பகல் கொள்ளை.
முதலமைச்சர் அவர்களே, இதுக்கு நீங்க எடுத்த நடவடிக்கை என்ன? உங்க கண் முன்னாடி இவ்வளவு பெரிய கொள்ளை நடக்கும்போது நீங்க என்ன டாஷ் பண்ணிட்டு இருக்கீங்க?
அமைச்சர் ரமேஷ் அவர்களே, மறுஆய்வுக் கூட்டம் நடத்தி சும்மா சீன் போடுறீங்களே100 கோடி சொத்து உங்க கண் முன்னாடியே கொள்ளை போறதுக்கு நீங்கதான் துணை போயிருக்கீங்கன்னு உங்க நடவடிக்கையே காட்டுது. மக்கள் சொத்தையும், மக்கள் பணத்தையும் காப்பாத்த துப்பில்லாத உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? யோக்கியதை இருந்தா உடனே உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போங்க.
அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார்.
இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர்!
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்
முன்னாள் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர்
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர்
கழக உடன்பிறப்புகளின் பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய எங்களின் அண்ணன்
DR .T.R.B. RAJA
@TRBRajaa அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறோம் 🙏💐🎂
@arivalayam@DMKITwing
இன்று பிறந்த நாள் காணும் என்னாளும் அமைச்சர், DMK ITWing மாநில செயலாளர் பாசமிகு அண்ணன் TRB Rajaa அவர்களுக்கு கடலூர் மேற்கு மாவட்ட திட்டக்குடி தொகுதி பெண்ணாடம் நகரதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.🖤❤️🙏 @RamkumarPE64370@DMKITwing
இன்று பலருக்கும் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது...
ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த தலைவர் ஸ்டாலின் அவர்கள், கடுமையான அரசியல் தாக்குதல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தபோதும், அரசியலை நாகரீகத்தின் எல்லைக்குள் வைத்தே நடத்தினார்.
கொள்கைக்கு எதிராகப் பேசினார்; ஆனால் தனிநபர் இழிவை அரசியலாக்கவில்லை.
கருத்தை எதிர்த்தார்; ஆனால் கண்ணியத்தை விட்டுக்கொடுக்கவில்லை.
அதுதான் திராவிட இயக்கத்தின் அரசியல் பண்பாடு.
அண்ணா கற்றுக் கொடுத்த அரசியல், கலைஞர் வளர்த்த அரசியல், தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த அரசியல்—அது வார்த்தைகளால் காயப்படுத்தும் அரசியல் அல்ல; வாதங்களால் வெல்லும் அரசியல்.
தரம் தாழ்ந்த பேச்சுகள் சில நிமிட கைதட்டலை வாங்கித் தரலாம். ஆனால் நாகரீகமான அரசியல்தான் வரலாற்றில் மரியாதையைப் பெற்றுத் தரும்.
வார்த்தைகளில் அல்ல... செயல்களில் பதிலளிப்பதே திராவிட மாடலின் அரசியல். அதுதான் வித்தியாசம்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் @mkstalin நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்று கரூரில் பேசும் போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? 7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி
41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று பழிவாங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார் ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்.
தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான் என்று கரூரில் பேசிய CM sir, தீர்ந்து போன கட்சியில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா?
CM sir, இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும்! ஆட்சியும் மாறும் !
@CMOTamilnadu@actorvijay@arivalayam@Udhaystalin
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
#அதானே
தன்னைக்
காணவந்து
நெரிசலில்
செத்தால்
அரசு உத்தியோகம்..
தன்னை வைத்து
சினிமா
எடுத்தவருக்கு
டெல்லி
பிரதிநிதி பதவி..
தன்னை போட்டோ
எடுத்தவருக்கு
பிலிம்
சிட்டியில்
பொறுப்பு..
பேசாம..
அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தைக்
கலைத்துவிட்டு
அதனை
அரசியல்
பணி தேர்வாணயம்
ஆக்கலாம்..
அப்படியே
கண் விழித்து
படித்தால்
எல்லாம்
கிடைக்காது..
என்னைக்
காண வந்து
மிதிபட்டு
மரித்தால் மட்டுமே
அரசாங்க
வேலை என்று
அறிவிப்பும்
செய்து
விடலாமே..
#என்னநாஞ்
#சொல்றது
திரு. முக. ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவித கோபமும் இல்லை.
எதிரிகள் எடுத்த கருத்து கணிப்பில் கூட திரு. முக. ஸ்டாலின்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஏறத்தாழ 60% மக்கள் கூறினர்.
ஏறத்தாழ 80% மக்கள் திரு. முக. ஸ்டாலின்தான் முதலமைச்சராக வருவார் என்றே நம்பினர்.
ஆனாலும், ஏறத்தாழ 35% மக்கள் ஜோஸஃப் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.! (வாக்களித்ததாக நம்ப வைக்கப் பட்டுள்ளோம்).!
அந்த மக்கள் புதிய கட்சியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம், அவ்களிடம் திணிக்கப்பட்ட ஒரு வெறுப்பு பிரச்சாரம்.
அந்த வெறுப்பு பிரச்சாரத்தை அவர்கள் உள்வாங்க காரணம் கடந்த திரு. முக. ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சி மட்டும் இல்லை.!
காமராஜர் ஆட்சியை மிகச்சிறப்பான ஆட்சி என்று கட்டமைப்பு செய்து, அதற்குப் பிறகான ஆட்சிகள் மிகவும் மோசமான ஆட்சிகள், குறிப்பாக திமுக கலைஞர் மீதான வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் திணிக்கப்பட்டதன் விளைவே, புதிய கட்சிக்கு 35% மக்களின் வாக்குகள்.!
அந்த வெறுப்பு பிரச்சாரத்தில் உண்மை இல்லாமலும் இல்லை.!
ஹிந்தி மொழியை திணித்தால் எனக்கென்ன, நான் எல்லோரிடமும் தமிழில்தான் பேசுகிறேன்.!
ஜோஸஃப் விஜயின் செயலாளர்களாக ஆந்திர ரெட்டி, கன்னட ராவ் இருந்தால் எனக்கென்ன.!
ஜோஸஃப் விஜய்க்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் மொழி, இன உணர்வு இருந்தால் என்ன இல்லாவிட்டால் எனக்கென்ன.!
அவர்களுக்கு தமிழ்நாட்டின் புவியமைப்பு, மாநில உரிமைப் பற்றி தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் எனக்கென்ன.!
பல்கலைக்கழக வேந்தராக, துணை வேந்தராக யார் இருந்தால் எனக்கென்ன.!
மதுரை, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மக்களான எங்களுக்கு காவிரியில் தண்ணீர் வந்தால் என்ன, வராவிட்டால் எங்களுக்கென்ன.!
எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடும் பிரச்சினைகளை யார் தீர்ப்பது.!
கிராம அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், வட்டார காவல் அலுவலர் (Inspector), மாவட்ட கண்காணிப்பாளர் (SP) இவர்களின் நடவடிக்கைகள் எங்களை நோக்கி எப்படி இருந்தது.!
கடந்த 75 ஆண்டுகால ஆட்சியர்களின் நடவடிக்கைகள், ஏதோ ஒரு காரணத்தால் எங்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.!
யாரையோ தேடிக் கொண்டே இருந்தோம். சினிமா மூலமாக எங்களுக்குத் தெரிந்த ஜோஸஃப் விஜய் வந்ததும் வாக்களித்து விட்டோம்.!
திரு. சீமானை ஒரு பொழுதுபோக்கு கருவியாகவே பார்த்து பழகி விட்டோம்.!
உண்மையில், ஜெயலலிதா என்ற அரசியல்வாதியின் மிக மிக கேவலமான நடவடிக்கைகளே தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.!
காலச்சக்கரத்தை நாம் பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது.!
என்ன செய்து, எப்படி செய்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கப் போகிறோம்.!
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று '5' MLA-க்கள் இருந்தாலும் போதும் என்று காங்கிரஸின் காலைப் பிடித்து ஆட்சியைக் காப்பாற்றிய
"ஆல் இன் ஆல் அழகு சுந்தரத்திற்கு"
அதே காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில்
தன் ஆளுமையை செலுத்தி தமிழ்நாட்டுக்கும் உரிய தண்ணீர் உரிமையை வாங்கித் தர முடியுமா!?
நடிக்கும் போதே தாழ்வுமனப்பான்மைல இருந்தான், இப்போ எங்க பாத்தாலும் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் இருக்கு அத பாத்து தாங்கிக்க முடியாத விஜய் ஒவ்வொரு திட்டதுக்கும் பேர் மாத்திட்டு இருக்கான் 🤦♂️🤦♂️ ஸ்டாலின் திட்டங்கள் இருக்கும் வரை இந்த தமிழ்நாட்ல அவர் தான் 🔥