மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
“யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்… நான் உங்கள் கூட இருக்கிறேன்.”
ஒரு மாநிலத்தின் முதல்வர் மக்களுக்கு தரக்கூடிய மிகப் பெரிய சொத்து பணமல்ல… தைரியம்.
“நான் இருக்கிறேன்” என்ற ஒரு வாக்கியம், நேர்மையாக வாழ விரும்பும் ஆயிரக்கணக்கான நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.
மக்களை அதிகாரிகளிடம் தலைகுனியச் சொல்லாமல், தலைநிமிரச் சொல்லும் ஆட்சிதான் நல்லாட்சி.
இந்த நம்பிக்கையை அளித்ததற்காக நடுத்தர வர்க்கம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.
தமிழ்நாடு இந்த ஆட்சியில் நேர்மையிலும், வளர்ச்சியிலும், செழிப்பிலும் முன்னேறட்டும்.
நன்றி முதல்வரே @CMOTamilnadu
ஜூலை 7ஆம் தேதி, அயப்பாக்கம் பகுதியில் தனியார் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன்.
உடனடி தற்காலிக நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அயப்பாக்கத்தின் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாத்து, அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நிலையான நிரந்தரத் தீர்வை நோக்கி தொடர்ந்து செயல்படுவோம்.
————————
On 7th July, I met with the residents of Ayyapakkam to discuss their concerns regarding the excessive extraction of groundwater through private borewells, which has been contributing to water scarcity in the area.
As an immediate measure, the operation of these borewells has been temporarily stopped. We will continue working with the concerned authorities and residents towards a sustainable and permanent solution to protect Ayyapakkam’s groundwater resources and ensure equitable access to water for all.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
Truly humbled and immensely honoured to have received the blessings of the Hon'ble Chief Minister of Tamil Nadu, my beloved Anna, on my special day.
You have always been more than a leader to me . You are my inspiration, my elder brother, and the person I have always looked up to.
Your love, blessings, and words of wisdom will forever be my greatest strength.
Tamil Nadu is truly blessed to have your visionary leadership, and I pray that you continue to guide our beloved state for many more years to come.
Love you always, my dearest Anna. Forever grateful. ❤️
Happy Birthday to our respected MLA, @rhevanth95 🎉
Wishing you good health, happiness, strength, and continued success. May this new year of your life bring you many more opportunities to serve the people and achieve greater milestones.
Have a wonderful birthday and a fantastic year ahead! 🎂🎈
மேலும் 5 மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, 8 நபர்களுக்கு தையல் இயந்திரம், 20 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 மாற்றுத் திறனாளிக்கான கையால் இயக்கும் மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.(2/3)
மதுரவாயல் தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர். என்றும் மக்கள் பணியில் சுறுசுறுப்புடன் இயங்கும் அண்ணன் ரேவந்த் சரண் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
"உழைப்பே உயர்வு... மக்கள் சேவையே லட்சியம்!"
#PrideOfMaduravoyal#HBDRevanth
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடன், இன்று நமது கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. ந. ஆனந்த் அவர்கள், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த இனிய நாளை முன்னிட்டு, பொதுமக்கள் நலனை முன்னிறுத்தும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வை சிறப்பித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு பொதுச் செயலாளர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையை காக்கும் பணியில், மதுரவாயலின் வளர்ச்சிக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.
---------------
With the blessings of Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay avl., today our Party General Secretary and Hon'ble Minister for Rural Development & Water Resources, Thiru N. Anand avl., inaugurated my Maduravoyal Constituency MLA Office.
To mark this special occasion, several welfare initiatives were also carried out in service of the people. My heartfelt gratitude to our Hon'ble Chief Minister and our respected General Secretary for their guidance, support, and encouragement as we continue to work for the welfare and development of Maduravoyal.
@BussyAnand@CMOTamilnadu@TVKVijayHQ
🙏 வணக்கம் அம்பத்தூர் மக்களே!
📍 நாள் : 07.07.2026
இன்று அம்பத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள், குறைகள் மற்றும் மனுக்களை பெற்றுக்கொண்டு, அவற்றை பொறுமையுடன் கேட்டறிந்தேன்.
மக்களின் அன்றாட தேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகள் மீது உடனடி கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரைவான தீர்வு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியளிக்கிறேன்.
அன்புடன்,
திரு. க. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
#TVK #TVKVijay #Ambattur #GBalamurugan #AmbatturMLA #PeopleFirst #MakkalNalan #Trending
மூத்த பத்திரிகையாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான PSD புருஷோத்தமன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
பத்திரிகையாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் அங்கீகாரத்திற்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அயராது பாடுபட்ட அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு ஊடகத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பத்திரிகையாளர் சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The transformer in our area is severely overloaded, resulting in frequent tripping, low voltage, repeated transformer failures, and regular power outages. This is causing significant inconvenience to residents and affecting daily life.We kindly request the Electricity Board to inspect the situation immediately .@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (06.07.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N.ஆனந்த் MLA அவர்கள் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள். (1/3)
சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய திராவிடமணி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 167-வது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான புகழ்வணக்கங்களையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சிந்தனைகளும், சமூக முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் என்றும் நமக்கு வழிகாட்டியாக விளங்கட்டும்.