சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று புதுச்சேரியில் சர்வோதயா சங்கம், சக்தி அபியான் மற்றும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் இணைந்து ராட்டை சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்தன.
அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோது,
"வாக்கு என்பது வெறும் வாக்குச்சீட்டு அல்ல; அது நமக்கான அரசியல் நீதியை நிலைநாட்டும் ஆயுதம். நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்கும் மிகப்பெரிய ஜனநாயக சக்தி".
ஆனால், இன்று அரசியலமைப்பு நிறுவனங்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகளின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் முறைகேடு அல்ல; அது மக்களின் அரசியல் நீதியைப் பறிக்கும் செயல். நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளைப் பறித்து, மக்களை மீண்டும் அதிகாரத்தின் அடிமைகளாக மாற்றும் முயற்சி என்று முக்கிய செய்தியை பகிர்ந்து கொண்டேன்.
நிகழ்வின் நிறைவாக, மகாத்மா காந்தி சுதேசி, சுயசார்பு மற்றும் அகிம்சை வழிப் போராட்டத்தின் அடையாளமாக உலகிற்கு அறிமுகப்படுத்திய காந்தி ராட்டையில் நூல் நூற்கும் அனுபவத்தை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
ராட்டை என்பது ஒரு கருவி மட்டுமல்ல; அது சுயமரியாதையின் சின்னம், உழைப்பின் கண்ணியத்தின் அடையாளம், பொருளாதார சுதந்திரத்தின் வழிகாட்டி, அநீதிக்கு எதிரான அகிம்சை எதிர்ப்பின் உயிரோட்டமான குறியீடு.
ராட்டை சுழலும் ஒவ்வொரு தருணமும், சத்தியம், சுயநிறைவு மற்றும் ஜனநாயகத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இன்று ஜனநாயகத்தையும், மக்களின் வாக்குரிமையையும் பாதுகாப்பது, காந்தியடிகள் காட்டிய சத்தியம் மற்றும் அகிம்சை வழியை மீண்டும் நினைவுகூர்ந்து நடைமுறைப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்.
என்ன சார் இது நியாயமா?
‘அவதூறு’ன்னு அறிக்கை விட்டுட்டு இவ்வளவு பெரிய உண்மைகளை மறைக்கப் பார்க்கிறீங்களே @nainarbjp?
பழைய பல்லவியையே இன்னும் எத்தனை நாளைக்கு பாடுவீர்கள்?
நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட பழைய புகார்களைப் பேசும் உங்களுக்கு, தற்போதைய CAG அறிக்கைகள் அம்பலப்படுத்திய துவாரகா எக்ஸ்பிரஸ்வே, ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகள் பற்றிப் பேச ஏன் நா எழவில்லை?
தமிழக மக்கள் செலுத்தும் ஒவ்வொரு ₹1 வரிக்கும் வெறும் 29 பைசாவை மட்டும் திருப்பித் தரும் நிதி அநீதிக்கு என்ன பதில் இருக்கிறது?
கிராமப்புற ஏழைகளின் 100 நாள் வேலைத் திட்டத்தை (MGNREGA) முடக்கிவிட்டு, அதற்குப் பதிலாக கொண்டு வந்துள்ள 'VBGRAM' திட்டத்தில் மத்திய-மாநில நிதிப் பகிர்வை 90:10 என்ற விகிதத்திலிருந்து 60:40 ஆக மாற்றி, தமிழகத்தின் மீது கூடுதலாக ₹5,000 கோடி நிதிச் சுமையைச் சுமத்துவது தான் நீங்கள் கூறும் 'அனைவருக்குமான வளர்ச்சியா'?
பக்தி என்ற போர்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் அரங்கேறிய நில முறைகேடுகளும், லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கை திருட்டும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
இது ஊழல் இல்லையா?
மாநில உரிமைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும்!
இலவசங்களை குறித்து கேவலமாக பேசுபவர்களுக்கு சம்மட்டி அடி.
கேள்வி: 80 ஆண்டுகள் கழித்தும் இந்திய மக்களுக்கு “இலவசங்கள்” கொடுக்க வேண்டும் என்று நீங்கள் பேசுகிறீர்கள் என்றால், அதற்கு அர்த்தம் நாம் ஏழைகளை இன்னும் ஏழைகளாக வைத்துள்ளோம் என்பதுதான். இது பொருளாதார வளர்ச்சி அல்ல. அப்படியானால் இந்தியா எப்போது பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடாக மாறும்?
திரு. அதானிக்கு வழங்கப்படும் இலவசங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?நீங்கள் விவாதிக்க விரும்புகிறீர்களா?
திரு. அதானி அம்பானிக்கு வழங்கப்படும் இலவசங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
அவர்களுக்கு வழங்கப்படும் பெரும் அளவிலான நிலங்கள் பற்றி கருத்து என்ன? அதைப் பற்றி ஏன் நாம் விவாதிக்கக் கூடாது?
அந்த இலவசங்களை நிறுத்தத் தயாராக இருந்தால், இந்த இலவசங்களையும் நாங்கள் நிறுத்துவோம்.
ஆகவே, நீங்கள் பேசும் இந்த “இலவசங்கள்” உண்மையில் ஒரு எதிர்வினை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
“அம்பானி மற்றும் அதானிக்காக 16 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.”
இப்போது நீங்கள் இந்த விஷயத்தை எழுப்புவது சுவாரசியமாக உள்ளது.
ஒரு ஏழை மனிதர் இலவச உதவி கேட்டால் அதை நீங்கள் கவனிக்கிறீர்கள். ஆனால் அந்த ஏழை மனிதருக்கு அந்த உதவி உண்மையில் தேவை. ஆனால் திரு. அதானி பெறும் இலவசங்களை நீங்கள் கண்டுகொள்ளுவதில்லை.
உங்கள் கேள்வி “திரு. அதானி மற்றும் திரு. அம்பானிக்கு வழங்கப்படும் இலவசங்களை எப்போது நிறுத்தப் போகிறோம்?” என்பதாக இருக்க வேண்டும்.
ஆகவே ஒரு அரசியல் அமைப்பை நீங்கள் பார்க்கும்போது, முழு படத்தையும் பார்க்க வேண்டும்.
என்னைப் பற்றி சொன்னால், நான் எல்லா இந்தியர்களையும் நேசிக்கிறேன். அதுவே என் ஆரம்ப நிலை. என்னை வெறுப்பவர்களையும் கூட நான் நேசிக்கிறேன்.
எனவே நான் பார்க்க விரும்புவது அனைவருக்கும் வெற்றி கிடைக்கும் ஒரு நிலை.
“இலவசங்கள்” பற்றி நாம் பேசப் போகிறோம் என்றால், ஒரு பக்கத்தை மட்டும் பற்றி பேசக்கூடாது.
இலவசங்கள் கிடைப்பது ஒரே ஒரு பக்கத்திற்கே என்று காட்ட முயற்சிக்கக் கூடாது. அது உண்மை அல்ல.
திரு. அதானி, திரு. அம்பானி மற்றும் சில பெரிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் இலவசங்களின் அளவு, ஏழை மக்களுக்கு கிடைப்பதை விட பல மடங்கு, பல மடங்கு அதிகம்.
10 மடங்கு அல்ல, 50 மடங்கு அல்ல, 100 மடங்கு அல்ல. ஆயிரக்கணக்கான மடங்கு அதிகம், .
இது ஒரு உண்மை. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
எனவே, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து இலவசங்களையும் நீக்க நான் மகிழ்ச்சியுடன் தயாராக இருக்கிறேன்.
ஆனால் அதே சமயம் திரு. அதானி, திரு. அம்பானி போன்றவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து இலவசங்களையும் நீக்க வேண்டும்.
@RahulGandhi 🔥🔥🔥
திருச்சியில் சிவில் சொசைட்டி நண்பர்களுடன் வாக்குத் திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைத்து, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் புதிய நேர்மையான ஆணையம் அமைக்கவும்; முறைகேடாக ஆட்சிக்கு வந்த மோடி அரசு விலகவும் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது.
#VoteChori
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்... குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்... அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக... தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு... தமிழிசை என்ற பெயர் வைத்து... இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது.... வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று... சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்... இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்... சீராக வாழ்வதைக் கண்டு... பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்... என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.... மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்... நாங்கள் செய்வோம் என்று... உறுதியோடு... உங்களை வழி அனுப்புகிறோம்... உங்கள் வழி உங்கள் வழியில்...... நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்...
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்....
அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராக திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் சேவைகள் பல செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எனது பெரியப்பாவுமான திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவு குறித்த செய்தி அறிந்து வேதனையால் வருந்துகிறேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உண்மை தொண்டனாக உழைத்து, எனக்கும் எனது தந்தைக்கும் அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்து, காங்கிரஸ் பேரியக்கத்தின் பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அவரை சேரும்.
இறுதி மூச்சு வரை தமிழ், காங்கிரஸ் என்று வாழ்ந்து மறைந்த அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
#KumariAnanthan
Saddened by the passing of veteran Congress leader Thiru Kumari Ananthan — a true champion of the Tamil people, language, and culture.
His relentless efforts made it possible for Tamil to be spoken in the halls of Parliament — a legacy that will be remembered forever.
A dedicated public servant, he represented the people as both MP and MLA, standing as a proud disciple of Thiru K. Kamaraj.
Heartfelt condolences to his family and all who are mourning his loss.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தமிழக மக்களால் பேரன்போடு இலக்கியச் செல்வர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் குமரி அனந்தன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினேன்.
நிகழ்வின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.
(1/2)
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரும்,
முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த அண்ணாச்சி H.வசந்தகுமார் அவர்களின் சகோதரர் மேனாள் ஆளுநர் அக்கா தமிழிசை செளந்தரராஜன் அவர்களின்
தந்தை, இந்நாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் V.விஜய் வசந்த் MP அவர்களின் பெரியப்பாவுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93.
கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி ஆனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டு, அதன் விளைவாக 1984-ல் 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர். கங்கை இங்கே வர வேண்டும் குமரி எல்லையை தொட வேண்டும் என நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுத்தவர், பாராளுமன்றத்தில் தமிழ் பேச உரிமை பெற்று தந்தவர், 1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர்.
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர்.
குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் அதற்குரிய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்
மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினருமான இலக்கியச் செல்வர் அய்யா திரு.குமரி அனந்தன் அவர்களின் மறைவு மிகுந்த துயரளிக்கிறது. தனது இறுதி மூச்சுவரை காங்கிரஸ் கட்சியை தனது நெஞ்சில் சுமந்தவர். தான் ஒரு காங்கிரஸ் காரர் என்பதில் பெருமை கொண்டவர். எளிமையானவர். மாறாத புன்னகையும்,அன்பும் கொண்டவர். அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது அன்பு மகள் மேனாள் ஆளுநர் சகோதரி திருமிகு .தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கும், தம்பி திரு.விஜய் வசந்த் எம்.பி அவர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் பேரியக்க சகோதர,சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
@DrTamilisai4BJP@iamvijayvasanth
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினருமான திரு குமரி அனந்தன் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#RIP
@girishgoaINC