இந்த இக்கட்டான நேரத்தில், @AmitShah ji உங்களின் ஆறுதல் மற்றும் ஆதரவு வார்த்தைகள் எனக்கும் , எங்கள் கழகத்தினருக்கும் , குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.
#21YearsofRamanaa
ரமணா உருவான விதம்...
ரமணா...
இதனை வெறும் திரைப்படமாக நாம் பார்த்து நகர்ந்துவிட முடியாது.
அத்திரைப்படம் உருவாகிய விதமும்,
கேப்டனின் செயலும் காலம் கடந்தும் பேச வேண்டியவை.
இயக்குனர் முருகதாஸ் கேப்டன் நடித்த
கருப்புநிலா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பொழுதே இவரை வைத்து ஒரு படம் எடுத்தே ஆகவேண்டும் என்ற கனவில் வலம் வந்தார்.
கருப்புநிலா படத்தில் நிறைய
சண்டை காட்சிகளில் கேப்டன் டூப்பே
இல்லாமல் அவரே நடித்திருப்பார்.
உச்சகட்டமாக ஹெலிகாப்டரில்
இருந்து கடலில் குதிக்கும் காட்சி.
இவையெல்லாம் பார்த்து வியந்த முருகதாஸ்
நீண்டநாள் காத்திருந்து கேப்டனுக்காகவே செதுக்கிய படம்தான் ரமணா.
விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரனை முதன்முதலாக தயாரிப்பாளராக ஆக்கியது கேப்டன் தான். வானத்தைபோல படத்தின் மூலம்.
அதற்க்கு நன்றி செலுத்தும் வகையில்
ரமணா படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுத்தார்.
அனைத்தும் கேப்டனின் முடிவு,
செலவு செய்வது மட்டுமே என் பொருப்பு
என ரவிச்சந்திரன் கூறிவிட்டார்.
நடிகர்கள் தேர்வில் பழம்பெரும்
நடிகர் விஜயனுக்கும், வல்லரசு படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகருக்கும் வாய்ப்பு கொடுத்தார் கேப்டன்.
மற்றபடி நடிகர்கள் தேர்வு உங்கள் பொருப்பு என முருகதாஸிடம் ஒப்படைத்து விட்டார் கேப்டன்.
சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகாவிடம்தான் பேசினார் இயக்குனர்.
அவர் கேப்டனுடன் நடித்தால் எனக்கு முக்கியத்துவம் இருக்காது. அதுவும் அவருடன் ஜோடியாக நடித்தால் வயதான நடிகை என முத்திரை குத்திவிடுவார்கள் என்று நடிக்க மறுத்துவிட்டார்.
அடுத்தது யூகிசேதுவின் கதாபாத்திரத்திற்க்கு முதலில் மாதவனிடம் பேசினார் இயக்குனர்.
அவரும் அதே காரணத்தை கூறிவிட்டார், கேப்டனுடன் நடித்தால் எனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று.
அடுத்ததாகத்தான் சிம்ரனிடம்
சென்று பேசினார் முருகதாஸ்.
சிம்ரன் கதையை கேட்காமலேயே கேப்டனுடன் என்றதுமே நடிக்க சம்மதித்துவிட்டார்.
காரணம் க
கண்ணுபடபோகுதய்யா படம் நடிக்கும் பொழுது கேப்டனின் அனைவரையும் மதிக்கும் குணம் சிம்ரனுக்கு பிடித்த காரணத்தினால்.
அப்பொழுது கேப்டன் நடிகர் சங்கத்தலைவர்.
அவர் படத்தில் நடிக்க ஜோதிகாவும், மாதவனும் நடிக்க மறுத்துவிட்டனர் என்றதையும் முருகதாஸ் கேப்டனிடம் கூறிவிட்டார்.
அதற்க்கு கேப்டனோ பெருந்தன்மையாக பரவாயில்ல விடுங்க அவுங்களுக்கு பெரிய ரோல் இல்லாம போய்டும்னு பயந்துருக்காங்க விடுங்க பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டார்.
படப்பிடிப்பு சில நாட்கள் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் ஒருவர் ரமணா படத்தின் கதை என்னுடையது, முருகதாஸ் திருட்டுத்தனமாக எடுக்கிறார். நான் கேட்டதற்க்கு என்னை மிரட்டுகிறார் என்று பேட்டி கொடுக்க.
அவரை நேரில் அழைத்து
விசாரித்தார் கேப்டன்.
முருகதாஸும் இரண்டு லைன்தான் அவருடையது, மீதியெல்லாம் என்னுடைய கதைதான் என்று கூற.
சரி இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்
படம் பாதி எடுத்தாச்சு, இந்த நேரத்துல
என்ன செய்யலாம் என்று கதைக்கு உரிமை கோரியவரிடம் கேப்டன் கேட்க.
எனக்கு நஷ்டஈடு வேண்டும் என்று கூற.
தனது சொந்த பணத்தை அவருக்கு கொடுத்து சுமூகமாக பிரச்சனை இல்லாமல் பேசி முடித்தார் கேப்டன். பின்னர் அவருக்கு தென்னவன் படம் மூலம்.வாய்ப்பும் கொடுத்தார் கேப்டன்.
ஊழலுக்கெதிராக மிகப்பிரம்மாண்டமாக
படத்தினை எடுத்து முடித்தார் முருகதாஸ்.
படமும் மிகப்பெரிய வெற்றி.
குறிப்பாக பல காட்சிகளில் வசனங்கள்
பட்டைய கிளப்பின.
அப்படப்பிடிப்பின் போது முருகதாஸின் அம்மா கேப்டனை சந்தித்து இவனை ஒரு கல்யாணம் பன்ன சொல்லுப்பா என்று கேப்டனிடம் கூற.
கேப்டனும் முருகதாஸிடம் கல்யாணம் சீக்கிரம் பன்னு என்று கூற.. நீங்கள் வந்து தாலி எடுத்து கொடுத்தால் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேப்டனிடம் கூற.
நீ பொன்னு பாரு கண்டிபாக வரேன் என்று கூறியதோடு இல்லாமல்,அவ்வளவு உச்சத்தில் பரபரப்பாக இருந்தாலும் கள்ளக்குறிச்சிக்கே நேரில் வந்து முருகதாஸுக்கு திருமணம் செய்து வைத்தார் கேப்டன்.
படம்தான் நடித்து முடித்து ஹிட்டாகிவிட்டதே,
எதற்க்கு இவர் திருமணத்திற்க்கு கள்ளக்குறிசிக்குலாம் செல்ல வேண்டும்... சென்னையில் வரவேற்பு வை வருகிறேன் என்று கேப்டன் கூறவில்லை.
சொன்ன சொல்லில் உறுதியாக இருக்கும் ஒரே மனிதர் கேப்டனல்லவா.
ரமணா வெளிவந்த பிறகு.
நடிகை ஜோதிகாவிற்க்கும், நடிகர் மாதவனுக்கும்
அவர்கள் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் தயாரிப்பாளர் சங்கம் அவர்கள் இருவருக்கும் நடிக்க தடை விதித்தது.....
இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால்தான் இனி திரைப்படங்களில் நடிக்க முடியும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூற.
இவர்கள் இருவரும் கேப்டனை தொடர்புகொள்கின்றனர்.... கேப்டன் அப்பொழுது
எங்கள் அண்ணா (2004)
பிரண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக்கின் இயக்கத்தில் கேப்டன் ஆக்சன் இன்றி நடித்த படம்.
கேப்டன், வடிவேலு, பாண்டிராஜ், புரபுதேவா, எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணி காமெடியில் அதகளம் பண்ணியிருக்கும்.
விருமாண்டி, கோவில் போன்ற படங்கள் உடன் வந்தாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது
வானத்தை போல (2000)
வருடத்தின் முதல் வெற்றிக்கணக்கை ஆரம்பித்து வைத்த படம்...
இன்றளவும் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது...
பாடல்கள் அத்தனை தித்திப்பாய் இருக்கும்...
விக்ரமனே கூட கேப்டனுக்கு இந்த வேடம் செட் ஆகுமா என யோசிக்க அதற்கு தன் நடிப்பில் பதில் கொடுத்திருப்பார்.
உளவுத்துறை (1998)
ரமேஷ் செல்வன் இயக்கத்தில் வெளிவந்த படம்.
அப்போது திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக படங்கள் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு வித்திட்டு வந்தார் கேப்டன்.
அவரின் நம்பிக்கையை பொய்த்துப்போக செய்யாமல் படமும் பெரும் வெற்றி பெற்றது.
தர்ம சக்கரம் (1997)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கேப்டன் நடித்த ஒரே படம்.
அது என்னவோ பெரிய இயக்குனர்களின் படங்கள் கேப்டனுக்கு செட் ஆகவில்லை.
படம் தோல்வியை சந்தித்தது.
இதே போல தான் பாரதிராஜாவின் தமிழ்செல்வன் படமும் தோல்வியடைந்தது.
சேதுபதி IPS (1994)
பி.வாசு இயக்கத்தில் வந்த படம்.
கேப்டன் படங்களுக்கே உண்டான தீவரிவாதிகளின் திட்டத்தை முறியடிக்கும் படம் தான்.
வாசு திரைக்கதையில் விளையாண்டிருப்பார்.
கடிகாரத்தை நிறுத்தும் காட்சியில் கேப்டன் டூப் இல்லாமல் நடித்தது இன்றும் பேசப்படுகிறது.
#திமுகஅரசின்_காட்டுமிராண்டிதனம்
மனித வளம் அதிகமாக உள்ள நம் நாட்டில் வேலை நேரத்தை படிப்படியாக குறைத்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கித்தர திட்டமிட வேண்டும்…
மாறாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பது காட்டுமிராண்டித்தனமாகும்🧎♂️🙏
அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#ரம்ஜான்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று- 20.04.2023 , கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்.
#ரம்ஜான்#இப்தார்
திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
(1-3)
மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் @ActorMadhavan , 17 வயது மகன் வேதாந்த் @VedaantMadhavan 50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
(1-2)
மத்திய ஆயுத காவல் படைகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தியை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறேன்.