விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள். ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன். கேப்டன் குறித்த சில கருத்துக்களையும், அவரது சிறப்புகளையும் எழுதியிருக்கிறேன்.
https://t.co/jluSLCZl9T
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், புகழ்பெற்ற காமநாத ஈஸ்வரர் குடிகொண்டிருக்கும் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி, தம்மம்பட்டியில் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுவேதா நதிக்கரையில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர், தம்மம்பட்டியில் உள்ள 1000 வருடங்கள் பழமையான உக்கிர கதலி நரசிம்ம ஸ்வாமி கோவில், ஒரு புறம் பச்சைமலை, மறுபுறம் கொல்லிமலை என இயற்கை அழகு நிறைந்த பகுதி தம்மம்பட்டி. (1/6)
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இரண்டு சிறார்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.
தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால், கொலைக் குற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன. பல்லடம் அருகே, குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தையே, மது போதையில் ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தின் சுவடு மறையும் முன்னரே, மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.
உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை செய்யும் திமுக அரசு, குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானால் என்ன, சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தான போக்கு.
தங்கள் கட்சியினருக்கு வருமானம் என்ற ஒரே நோக்கத்திற்காக, மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்களையும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும், தடுக்க திமுக அரசு தவறினால், இதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.
மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய முன்னெடுப்பினால் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம் கும்பாபிஷேகமானது நடக்க உள்ளது,பாரதம் புத்துணர்ச்சி பெரும் இந்த பொன்னாளில் பாரத மக்கள் அனைவரும் 22 ஆம் தேதி அன்று மாலை ராமஜோதி எனப்படும் விளக்கேற்றி வைத்து ஸ்ரீராம பிராணை வழிபட்டு இன்பமாக வாழ்க்கையில் நோய்நொடி இன்றி அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அயோத்தி ஸ்ரீராம ஆலய கும்பாபிஷேகத்திற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
@annamalai_k@BJP4TamilNadu@BJP4India
#AyodhyaRamMandir
அழகுமிக்க தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது -
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள். #VanakkamModi
வரும் ஜனவரி 2, 2024 அன்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வருகையையொட்டி, @BJP4Tamilnadu சார்பாக, ஸ்வச் பாரத் - தூய்மை இந்தியா திட்டத்தினை எதிரொலிக்கும் வண்ணம் காலை 6 முதல் 8 மணி வரையில், திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் மாபெரும் தூய்மை பணி, நடைபெறவிருக்கிறது.
இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்களும், பொதுமக்களும், கீழ்க்காணும் இணைப்பில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
https://t.co/w5a5qAWwT3
அயோத்தியில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளி ஒருவரின் இல்லத்திற்கு சென்று தேநீர் அருந்திய நெகிழ்வான நிகழ்வு.
தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி.
விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடித்த போது அவர் கூறிய வார்த்தைகள்:
"நேத்து மண்டபத்தைப் போய்ப் பார்த்தேன் சார். இடிஞ்சுகிடக்கிற மண்டபத்தைப் பார்த்தா, குடல் அறுந்து தொங்குற மாதிரி இருக்கு. வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில் போட்டுச் சம்பாதிச்சதில்லை; ஊழல் பண்ணிச் சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்ச மண்டபம். அது இன்னிக்குக் கண்ணெதிரே நொறுங்கும்போது மனசில் சுருக்குனு ஒரு வலி. அவ்வளவுதான்..!"
(1 ஏக்கர் 56 செண்ட் இடத்தில் வெறும் 20 செண்ட் இடத்தை தான் விட்டானுக. அந்த இடத்தில் தான் இன்று அந்த நல்ல மனிதனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறார்.)
தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.
தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.
கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
நேற்று அண்ணாமலை அண்ணா அவர்கள் விமான நிலையம் செல்லும் வழியில் குரோம்பேட்டை மண்டல் சார்பாக வாஜ்பாய் ஜி பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது, எதிர்பாராத விதமாக அவ்வழியே சென்ற அண்ணன் அண்ணாமலை அவர்கள் தொண்டர்களை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி நலம் விசாரித்தார்!