மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!
நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர், 'விசாரணை' என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி உயிர்களைப் பறித்து வருகின்றனர்.
இதையெல்லாம் கண்காணித்துத் தடுக்க வேண்டிய காவல்துறை அமைச்சரோ, தன் திரைப்படத்தைத் தானே பார்த்துப் பூரிப்படைந்து வருகிறார்.
மக்களைக் காக்கத் துப்பில்லாத காவல்துறை, சினிமா பார்ப்பதற்குத் துப்பாக்கியேந்தி காவல் காப்பது வெட்கக்கேடு!
தினம் தினம் நடக்கும் இத்தகைய காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள், பொம்மை முதலமைச்சரே?
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
Today in Parliament, we protested against the Karnataka Government's proposal to construct the Mekedatu Dam across the Cauvery River, which threatens Tamil Nadu's rightful share of Cauvery water.
#DMKinParliament
இந்திய அரசியல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய் மண்ணுக்குத் திரும்பிய திராவிட நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்தனர். வாழ்த்து முழக்கங்கள் விண் அதிர ஒலித்தன.
மாண்பு இல்லாத 'மாண்புமிகு' முதல்வர்! நாவடக்கத்தை மறந்தால் மக்கள் அடக்கத் தயங்க மாட்டார்கள்!
மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்புக்கும், அந்த இருக்கையின் கண்ணியத்திற்கும் துளியும் சம்பந்தமில்லாமல், மூன்றாந்தர வீதிப் பேச்சாளரைப் போலத் தரம் தாழ்ந்து பேசுவதை முதலமைச்சர் விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்!
‘ஓடு.. ஓடு..’, ‘கொளத்தூரில் கொத்து பரோட்டா’, ‘வெளுத்து விடுங்க’ என உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், இந்த மாநிலத்தின் நிர்வாகத்தையே கேலிக்கூத்தாக்கும் துர்நாற்றம் வீசும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
நீங்கள் பின்பற்றும் கொள்கைத்தலைவர்களின் பெயர்களைக் வெறும் அடையாள அரசியலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், குறைந்தபட்சம் அவர்களின் பண்பையாவது உங்கள் பேச்சில் வெளிப்படுத்துங்கள்.
‘வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவேன்’ என்ற உங்கள் திமிர் பிடித்த பேச்சு, ஒரு முதலமைச்சருக்கு அறவே அழகல்ல.
நாவடக்கம் என்பது உங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று! பொறுப்புணர்ந்து பேசக் கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், மக்களின் கோபத்தால் அந்த நாக்கு நிச்சயம் அடக்கப்படும்!
வியட்நாம் நாட்டில் நடந்த படகு விபத்தில் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துயர்மிகுந்த நேரத்தில் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் உள்ளோருக்குத் தரமான சிகிச்சைக் கிடைப்பதை ஒன்றிய அரசும் - மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இறந்தோர் உடல்களைத் தாயகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
#VietnamAccident
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி
இசைக்குயில் திருமிகு எஸ். ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.
இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்.
அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடக்குமுறைக்கும் - ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்த மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
ஆங்கிலேயருக்கு வரிக்கட்ட மறுத்து - மாபெரும் போரிட்டு பீரங்கிக்கு நெஞ்சைக் காட்டிய மாமன்னர் அழகு முத்துக்கோனின் வீரம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அவரது தீரத்தையும் - தியாகத்தையும் போற்றுவோம்!
#அழகு_முத்துக்கோன்
முதலமைச்சர் விஜயின் இந்த துர்நாற்ற சக்தி ஆட்சி இருமாதங்களை கடப்பதற்குள்ளே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்களுக்கு பாதுகாப்பு என கட்டிய பொய்கோட்டைகள் அனைத்தும் பொல பொலவென உதிர்ந்து வருகிறது..
நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. இதன் உச்சமாக இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி, விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு கோவை: சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
17.06.2026 அன்று கோவையில் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
28.06.2026 அன்று ராமநாதபுரம் பசும்பொன் நகரில் காணாமல் போன 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
03.07.2026 அன்று தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த துயர சம்பவங்கள் ஒருபுறம் எனில், 60 வயது மூதாட்டி முதல் ஆறு வயது சிறுமி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் - இந்த கொடுமையை எல்லாம் எங்கே சொல்ல?
வாய்கிழிய வசனம் பேசும் சேடிச முதலமைச்சர் விஜய், வெறும் வாயில் வடை சுடாமல், ரீல்ஸ் மூலம் பேருக்கு சிங்கப்பெண் ஆய்வு செய்யாமல் உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் உங்கள் செயல் திட்டத்தை காட்டுங்கள்..
தனது வசீகர குரலால் தென்னிந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி இசைக்குயில் எஸ்.ஜானகி அவர்கள் மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஒடியா உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, தமிழ்நாடு - கேரளம் - ஆந்திரப் பிரதேச மாநில அரசுகளின் விருதுகளை வென்று நீங்கா பெருமையைப் பெற்றவர்.
அவரது மரணம் இசை உலகிற்கு பேரிழப்பு. அவரது பாடல்கள் என்றும் மறையாது நம்மிடையே ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஜானகி அம்மையாரை இழந்து வாடும் அவரது உறவினர்கள் - நண்பர்கள் - இசை ரசிகர்களுக்கு என் ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#SJanaki
இது தான் அரசியல் மாண்பா????
குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது தவெக அகராதியில் இல்லை போல.
தவெக தலைவர் எவ்வழியோ தவெக அமைச்சர்களும் அவ்வழியே!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் இன்று நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான அக்கா @KanimozhiDMK எம்.பி.யை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றும் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் , காரில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தவெக அமைச்சர்கள் முதலில் மரியாதை செலுத்திய பிறகே கனிமொழி கருணாநிதி மரியாதை செலுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிப்பது தவெக அரசின் அடக்குமுறையை காட்டுகிறது
இந்த சலசப்புக்கு அஞ்சாத அக்கா திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி , நான் நடந்தே செல்கிறேன் என்று கூறி நடந்து சென்று மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கரூர்ல தன்னோட விளம்பர வெறிக்காக மக்கள் கூட்டத்த கூட்டினது மட்டுமில்லாம, வேனும்னே லேட்டா வந்ததால ஏற்பட்ட துயரச் சம்பவத்தப்பக் கூட, பாதிக்கப்பட்ட மக்கள் கூட நிக்காம, ஒரு ஆறுதல் கூட சொல்லாம, அங்கிருந்து தலைதெறிச்சு ஓடிப் போன #ஓட்டநாயகன் விஜய்யின் நினைவா, அதே கரூர்ல ஒரு நினைவுச் சின்னம் அமைச்சா அது எப்படி இருக்கும்?
உங்க Creative Thinkingல வர்ரத டிசைனா மாத்தி கமெண்ட்ஸ் தெறிக்க விடுங்க, உங்க Pagesலையும் #ஓட்டநாயகன் hashtag போட்டு போடுங்க!