தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
மக்கள் பணியில் நம்மையெல்லாம் வளர்த்தெடுத்து என்றும் நம்மை வழிநடத்தும் என் அன்புத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள எனது இல்லத்தில் நம் கலைஞரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
உடன்பிறப்பே என்னும் ஒற்றை வார்த்தையால் உலகத் தமிழர்களை கட்டிப்போட்ட நம் கலைஞரின் புகழ், காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்..!
#KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
"பாதுகாப்பான ஆட்சி" என்று சினிமா டயலாக் பேசியவர்களின் உண்மையான லட்சணம் இதுதான்!
திருவாரூரில் போதை கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து, மகளின் கழுத்தில் அருவாளை வைத்து மிரட்டி அவளது கண்முன்னேயே தந்தையை வெட்டிக் கொன்றிருக்கிறது.
நள்ளிரவில் வீடு புகுந்து ஒரு குடும்பத்தையே சரமாரியாக வெட்டும் அளவுக்கு கொலைகாரர்களுக்கும் ரவுடிகளுக்கும் தைரியம் வந்திருக்கிறது என்றால், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
குற்றவாளிகளுக்கு சிறிதும் பயமில்லாத ஒரு இருண்ட காலத்திற்கு தமிழ்நாட்டைத் தள்ளிவிட்டார் டம்மி CM விஜய்.
#TVKFails
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆனால் Sofa model ஆட்சி நடத்தும் திரு. விஜய் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவை ரத்து செய்துவிட்டு தன் மேலாளர் இல்ல நிகழ்ச்சிக்கு Celebration mode-ல செல்கிறார்.
நீங்க சாவகாசமாக சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#TVKFails
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் தினம் தினம் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பல குற்றச் செயல்களில் தவெகவினரே ஈடுபடுகின்றனர். இதையெல்லாம் கண்டும் காணாமல், சனிக்கிழமை விடுமுறை என்று தூங்கிக் கொண்டிருக்கிறார் டம்மி CM விஜய்.
#TVKFails
டம்மி முதல்வர் விஜய் அவர்களே, இந்த மகளின் கதறல் உங்கள் காதுகளை எட்டவில்லையா?
"உங்களுக்கு ஒன்று என்றால் நான் வந்து நிற்பேன்" என மேடைகளில் சினிமா வசனம் பேசிய நீங்கள் இப்போது எங்கே? பட்டப்பகலில் வீடுபுகுந்து நடக்கும் இந்த படுகொலைகளால் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக செத்து நாற்றமெடுக்கிறது.
சனிக்கிழமை உறக்கத்தில் இருந்து இன்னும் நீங்கள் எழவில்லையா?
"பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணும் தலைவன்" என காசு கொடுத்து 'ரீல்ஸ்' போடச் சொன்னீர்களே...
இந்த யாருமில்லாமல் தவிக்கும் மகளின் கண்ணீரை வைத்து இப்போது என்ன 'ரீல்ஸ்' போடப் போகிறீர்கள்?
#TVKFails
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM SIR!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசைப் பார்த்து மன்னராட்சி எனத் திமிர்ப்பேச்சு பேசினார் இன்றைய முதலமைச்சர்.
இன்றோ, மங்குனிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
Volvo பேருந்து என்றால் இதுதான். முன்பின் செய்திகளைக் கூட பார்க்காதவர்கள் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளனர். பரிதாபம்...
#TVKFails
கோடம்பாக்கத்தில் போலீஸ்காரரே ஒரு சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கிறார்.
கும்பகோணத்தில் ஆளுங்கட்சியினர் தாக்கியதில் அதே போலீசுக்கு கை உடைகிறது.
வேளச்சேரியில் 61 வயது மூதாட்டிக்குப் பாலியல் வன்கொடுமை நடக்கிறது.
இந்த #SofaModel ஆட்சியில் மக்களுக்கும் போலீஸால் பாதுகாப்பு இல்லை, அந்தப் போலீஸுக்கே இங்கு கொஞ்சம்கூடப் பாதுகாப்பு இல்லை.
சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதிலும், பிற கட்சிகளை உடைப்பதிலும் பிசியாக இருக்கும் CM சார்... உங்களிடம் உள்ள காவல்துறை அடியோடு சீரழிந்து கிடப்பதைக் கொஞ்சமாவது கவனியுங்கள்.
#TVKFails
#WATCH | பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்.
முக்காடு போட்டும், பிச்சை எடுத்தும், தர்ணாவில் ஈடுபட்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#SunNews | #FarmersProtest | #Vijay
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று வாய் கிழிய வீர வசனம் பேசிய Dummy CM விஜய் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவை இரத்து செய்துவிட்டு தன் மேலாளர் புது வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளை விட தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் உங்களின் ஆணவத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் CM Saar.
#TVKFails