♦️யோவ் பாலிமர்... மினிஸ்டர் ராஜ்மோகன் மேட்டரை இவ்வளவு பக்கா கிரிஸ்டலா உடைச்சுப் பேசியிருக்காரு. அப்படி இருக்கும்போது, 'முறையாக பதிலளிக்கவில்லை'ன்னு சொல்லி டைட்டில் வைக்க உனக்கு எப்படிப்பா மனசு வந்துச்சு? கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா?
#CMVijay
@polimernews ♦️யோவ் பாலிமர்... மினிஸ்டர் ராஜ்மோகன் மேட்டரை இவ்வளவு பக்கா கிரிஸ்டலா உடைச்சுப் பேசியிருக்காரு. அப்படி இருக்கும்போது, 'முறையாக பதிலளிக்கவில்லை'ன்னு சொல்லி டைட்டில் வைக்க உனக்கு எப்படிப்பா மனசு வந்துச்சு? கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா?
#CMVijay
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
@CMOTamilnadu@TVKVijayHQ
செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?
செய்தியாளர்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது.
உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில
இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே!
அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் தொலைகாட்சிகள் நீக்கம்!
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை சென்னை பத்தரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிகிறது.
ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்.
கடந்த மாதம், அரசு கேபிளிலில் புதியதலைமுறை தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்ததுடன் ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து நீக்கப்பட்ட புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அரசு கேபிள் நிறுவனத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (05.06.26) பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த தொலைக்காட்சிகளின் சார்பாக அரசு தரப்பில் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாளும், ஒளிபரப்பு தொடங்கப்படாததால் மீண்டும் அரசு தரப்பில் கேட்டபோது, அரசு கேபிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு, அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காததால் , அந்த நிறுவனம் சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைகாட்சியின் நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்தபோது, அதிகாரிகள் கூறிய காரணம் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் மீண்டும் தொடர்புகொண்டு பேசியபோது உரிய முறையில் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை குறித்து செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, இதுபோன்ற செய்திகளை வெளியிட்டதன் காரணமாக அரசு கேபிளில் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட கழியாத நிலையில், மக்களுக்கு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்துவரும் தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் செய்தி தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்யும் இதுபோன்ற நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் பத்திரிகையாளர்களை திரட்டி மிகப்பெரிய பேராட்டம் நடத்தப்படும் என்றும் சென்னை பத்தரிகையாளர் மன்றம் எச்சரிக்கிறது.
@CMOTamilnadu@TVKVijayHQ@NewsTamilTV24x7@polimernews@TamilJanamNews