மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டுவரும் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலையை (Bio-CNG Plant) நேரில் பார்வையிட்ட பின்னர், சென்னை மாநகரில் உருவாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை முழுவதுமாக எரிவாயு மற்றும் உரமாக மாற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளைச் சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் மாற்றிட பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மேலும், இப்பணியை தமிழ்நாடு முழுவதிலும் காலக்கெடு நிர்ணயித்து நகர்ப்புறங்களில் செயல்படுத்திடவும் உத்தரவிட்டார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர்வராத நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
@TVKVijayHQ@CMOTamilnadu anna irrespective of party lines, any excessive action against protesting students deserves to be condemned. 🙏🙏
A democracy must listen to its students, not silence them.
One of the best sound-mixed films of the year, featuring a truly outstanding album. A special thanks to Thaman sir for delivering such an exceptional musical experience.
Experience #IdhayamMurali only in theatres. ❤️🎬
@MusicThaman