இந்த நான்கு நாட்களாக போலிப் பெரியாரியவாதிகளும் அதன் தொங்குசதை யூடூப் டூப்புகளும், இணையக் கைக்கூலிகளும் தோழர் @GopiNainar கேட்ட கேள்விக்கு பதிலைத் தவிர எல்லா சங்கித்தனத்தையும்
செய்துகொண்டு தாங்கள்தான் ஆகச்சிறந்த சங்கிகள் என்று மீண்டும் மீண��டும் நிருபணம் செய்கின்றனர்..
நல்லவேளை வயிற்றில் இருக்கும்போதே அந்தப் பெண்குழந்தையின் பழக்கவழக்கம் சரியில்லை என்று சொல்லாமல் போனார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்.. அரசு எந்திரத்தின் இத்தகைய மூளைகள் ஒருபோதும் வளரப்போவதில்லை..
“பல தலைமுறையினரின் உழைப்பை சுரண்டி, வேலைவாய்ப்புக்களை மறுத்து, கற்கவிடாமல் தடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு ���நீதியை இழைத்துவிட்டு... ஒரு தலைமுறைக்கு வேலையையும், கல்வியையும் அளித்துவிட்டு, ‘அதற்கு இதற்கும் சரியாகப் போய்விட்டது; இனி இடஒதுக்கீடு தேவையில்லை' என பேசுவதுதான் இந்த உலகின் ஆகப்பெரும் சமூக அநீதி”
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஆப்ரோ அமெரிக்க எழுத்தாளர் ijeoma Oluo
@beemji @Neelam_Culture
#IjeomaOluo | #neelamsocial
சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சி குறித்து காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் குறைந்தபட்ச கவனம் கூட செலுத்தவில்லை. ஜல்லிக்கட்டு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சென்னை புத்தகக் கண்காட்சியும் முக்கியம். அறிவு பரிமாற்ற செயல்பாடு குறித்தும் அக்கறை வேண்டும்.
Fluid space வழங்கும், ‘காத்திருப்பு’ நிகழ்த்து கலை..
நிகழ்த்து கலைஞர்கள்: விக்கி, லெனின் பாரதி, பெ.மெலடி டார்கஸ்
இடம்: கூகை திரைப்பட இயக்கம், வளசரவாக்கம், சென்னை.
நாள் & நேரம்: 18-01-2025 சனிக்கிழமை மாலை 6.30 மணி. @KoogaiThirai#காத்திருப்பு#The_wait#performance
பாலா அவர்களே.. மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில் உங்கள் ஆணாதிக்க & ஆழ்மன வக்கிரங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள்.. #வணங்கான்#vanangaan#bala
500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக் கொடுப்பது ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு புறவாசலைத் திறந்துவிடுவதேயாகும் @CMOTamilnadu தாராள மனமிருக்கும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள��க்கு முதலில் முறையான ஊதியம் வழங்குகள்..
#SaveGovtSchools #NEP
அமித்ஷாவின் வெறுப்பு பேச்சு:
------------------------
புரட்சியாளர் அம்பேத்கர் மீதான வெறுப்பை வெளிப்படுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்தது!
நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்!
----------------------------
அரசமைப்ப���ச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்திடும் வகையில் மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், காங்கிரசை விமர்சிக்கும் பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். இதன்மூலம் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்துள்ளது. அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
அமித்ஷா அவர்கள் பேசும்போது,
"���ம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்..என்று சொல்வதே ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரைச் சொன்னால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்”
என்று எதிர்க்கட்சியினரைக் கேலி செய்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கேலி செய்வதற்காக அவர் அம்பேத்கரை இழிவுபடுத்தியிருக்கிறார். இது புரட்சியாளர் அம்பேத்கர் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.
திரு. அமித்ஷா அவர்கள் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசமைப்புச் சட்டம் தான். பிரதமர் ம��டி, தான் ‘பிரதமர் பதவி வகிப்பதற்கு அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசமைப்புச் சட்டமே காரணம்’ என்று பலமுறை பேசியிருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது அமித்ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் மீதான அவரது வெறுப்புப் பேச்சுக்கு அவர் நாட்டுமக்களிடைய��� வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
அடுத்து, அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை பாஜகவினர் வைத்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை காங்கிரஸ்காரர்கள் தான் தோற்கடித்து விட்டனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். ஆனால், அம்பேத்கரைத் தோற்கடித்தது காங்��ிரஸ் அல்ல; பாஜகவின் தாய் அமைப்பான
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகக் காரணமான சாவர்க்கரே ஆகும். இதைப் புரட்சியாளர் அம்பேத்கரே தெரிவித்திருக்கிறார். 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் அவர் கமலகாந்த் சித்ரே என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ‘தான் காஷ்மீரைப் பிரிக்க வேண்டும் என்று சொன்னதனால் ஆத்திரப்பட்டு டாங்கேவும் சாவர்க்கரும் இணைந்து சதித்திட்டம் தீட்டி தன்னைத் தோற்கடித்தனர்' என குறிப்பிட்டிருக்கிறார். சாவர்க்கரின் இந்த சதித் திட்டத்தை மூடி மறைப்பதற்காகவே பாஜகவினர் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் மீது பழி போடுகிறார்கள்.
பாஜகவினர் கூறும் அடுத்த குற்றச்சாட்டு, 'அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காங்கிரசே காரணம்' என்பதாகும். ஆனால் அதுவும் உண்மை அல்ல.
புரட்சியாளர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது 'இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை' சட்டமாக்க முயற்சித்தார். அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் இருந்த சனாதன பிற்போக்குவாதிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 100 க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களை நடத்தி அம்பேத்கரை அவதூறு செய்தது. சனாதனிக���ின் எதிர்ப்பின் காரணமாகவே அந்த சட்டத் தொகுப்பை சட்டமாக்குவதற்கு ஜவஹர்லால் நேரு தயங்கினார். இந்நிலையில், சனாதன பிற்போக்கு சக்திகளின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். பின்னர் நேரு அவர்கள் அதே இந்து சட்ட மசோதாவைப் பல பிரிவுகளாக��் பிரித்து சட்டமாக்கினார் என்பது வரலாறு.
1952 இல் பாரதிய ஜனதா கட்சி இல்லை. அது 1980 இல் உருவானது. எனவே, பாஜகவின் முன்னோடிகளான பிற்போக்குவாதிகள் காங்கிரசுக்குள் பதுங்கியிருந்து அப்போது அரசியல் செய்தனர். அவர்களாலேயே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையும் மூடி மறைத்து இன்று பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை வசை பாடுகின்றனர்.
(1/2)
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் ��வலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!
#BabasahebAmbedkar
மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். #மதுரை_மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஏற்பட்டுள்ள அடைப்பை எந்தவொரு தகுந்த உபகரணமுன்றி மனிதர்களை அவ்வேளையில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கது.
#RespectSanitaryWorkers
@mducollector
மசாலா படங்களுக்கு இடையே மனசாட்சியை கேள்விக்குள்ளாக்கும் அற்புதமான இயக்குனரின் அற்பமான வாழ்த்து .எல்லா அடையாள அரசியலிலும் வந்து சேரும் முட்டு இதுதானோ
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழியை போராட்டத்தை திரை வடிவத்தில் காட்டுவது அரசியாலா ? பொருளாதராமா?
அரசியலாக இருந்தால் நிச்சையம் இந்த குப்பையை வாழ்த்தி இருக்க மாட்டீர்கள்.
ஒடுக்கபட்ட மக்களின் விடுதலை பேசும் நாம் ஒரு தேசிய இனத்தை ஒரு குறிப்பிட்ட மத மக்களை தேசிய விரோதிகள் என் காட்சி வடுத்துவதை எப்படி பாராட்ட இயலும் ?.
Reconsider your tweet comrade @mari_selvaraj
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மதுரையில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி தூய்மை பணியாளர்களை
பாதாள சாக்கடையில் இறங்க விட்டு தூய்மை பணியில் ஈடுபடுத்தும் மாநகராட்சி
போக்கு கண்டிக்கத்தக்கது.
#Madurai#drainageCleaning @mducollector