எல்லா கட்சிகளுக்கும் கொடியேற்ற வேண்டுமென்று சொன்னால், கொஞ்சம் சிமெண்டும் செங்கல்லும் ஒரு கொடிக்கம்பமும் வேண்டும். ஆனால்,விடுதலைச் சிறுத்தைகள் கொடியேற்ற வேண்டுமென்று சொன்னால், கொஞ்சம் இரத்தமும் தேவைப்படுகிறது.
- சிந்தனைச்செல்வன்..🔥
Dharmendra Pradhan's resignation
A big victory for student power
He is completely unfit to be the education minister. He was made a minister only to introduce the unscientific RSS education system. He arrogantly refused the funds due to Tamil Nadu. If he is appointed to another department, it will only mean Modi's weakness.
This is the first stone in the downfall of the Modi government!
நீட் வேண்டாம் என்பதல்ல நுழைவுத்தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு
NEET IS NOT JUST AGAINST SOCIAL JUSTICE BUT AGAINST THE PRINCIPLES OF NATURAL JUSTICE
தமிழ்நாடு முழுவதும் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைந்து, விரைந்து சாதி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தல்படி, நமது சமூகநீதித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர் இனத்தவருக்கு இரண்டு நாட்களுக்குள் வட்டாட்சியராலும், பழங்குடியினத்தவருக்கு ஒரு வார காலத்திற்குள் கோட்டாட்சியராலும் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்
- தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மனுதாரருக்கு விவரத்தினை தெரிவிக்க வேண்டும்
- சான்றிதழ் கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலிருக்கும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நமது துறை சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னி அரசு
அமைச்சர் - சமூகநீதித்துறை
தமிழ்நாடு
24.07.26
@CMOTamilnadu@ADWDtamilnadu@TN_Tribal_WD@TNDIPRNEWS

மோடி ஆட்சியில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2026 வரை 148 தேர்வு மோசடிகள் நடந்திருக்கிறது. சுமார் 10 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு வழக்கில்தான் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.
#ResignPradhan
அப்ப CM விஜய் இதப்பத்தி பேசமாட்டாரு பட்டியல் சமூக மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்ல திமுக-க்கு தான் அக்கறை இருக்குன்னு சொல்ல வறீங்களா? அப்ப 8 தலித் அமைச்சரெல்லாம் தலித் மக்களை ஏமாற்றும் வேலையா?
EPS ஆட்சியில் இருக்கும்பொழுது இதேபோன்று ஆளுங்கட்சிய கேள்வி கேட்காம எதிர்கட்சியவே நொட்டிகிட்டு இருப்பாப்ல இடும்பாவனம் கார்த்தி..
தில்லியில் மாணவர்கள் -இளைஞர்கள் மீது காவல்துறை வன்முறைத் தாக்குதல்!
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி 27-07-2026 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்!
------------------------
#நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புது தில்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் ஜூலை 27 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தர்மேந்திர பிரதான் அவர்கள் கல்வி அமைச்சர் ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
“கல்வித் துறையைச் சீரழிக்கும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அண்மையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி நாடாளுமன்றம் நோக்கி பேரணி ஒன்றை அறிவித்தது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் ஆரம்பித்த ஜூலை 20ஆம் நாள் டெல்லியில் அந்தப் பேரணி அறிவிக்கப்பட்டது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் அதில் பங்கேற்றனர். அந்தப் பேரணியைத் தடுப்பதற்கு வரலாறு காணாத அளவில் டெல்லியின் வீதி தோறும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்களையும் இளைஞர்களையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியால் அடித்தும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். சீருடை அணியாத சில குண்டர்கள் தடிகளை ஏத்தி மாணவர்களைத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாயின. காயம்பட்ட மாணவர்களை நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை,கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயங்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதை இதுவரை காவல் துறை தெரிவிக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவும் இல்லை. இதற்காக நீதி கேட்டு பிரதமர் இல்லத்துக்கு முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தியும் காங்கிரஸ் எம்பிக்களும் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மோடி அரசு முற்றிலும் ஒரு சர்வாதிகார அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. ஜனநாயக மாண்புகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன.
போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி அமைச்சர் தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும்; போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்; இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும்; மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 27 ஆம் தேதி திங்களன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம். அதில் சனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
தில்லியில் மாணவர்கள் -இளைஞர்கள் மீது காவல்துறை வன்முறைத் தாக்குதல்!
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி 27-07-2026 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்!
------------------------------------
எழுச்சித்தமிழர் @thirumaofficial அறிவிப்பு
நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புது தில்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் ஜூலை 27 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தர்மேந்திர பிரதான் அவர்கள் கல்வி அமைச்சர் ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
“கல்வித் துறையைச் சீரழிக்கும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அண்மையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி நாடாளுமன்றம் நோக்கி பேரணி ஒன்றை அறிவித்தது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் ஆரம்பித்த ஜூலை 20ஆம் நாள் டெல்லியில் அந்தப் பேரணி அறிவிக்கப்பட்டது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் அதில் பங்கேற்றனர். அந்தப் பேரணியைத் தடுப்பதற்கு வரலாறு காணாத அளவில் டெல்லியின் வீதி தோறும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்களையும் இளைஞர்களையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியால் அடித்தும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். சீருடை அணியாத சில குண்டர்கள் தடிகளை ஏத்தி மாணவர்களைத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாயின. காயம்பட்ட மாணவர்களை நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை,கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயங்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதை இதுவரை காவல் துறை தெரிவிக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவும் இல்லை. இதற்காக நீதி கேட்டு பிரதமர் இல்லத்துக்கு முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தியும் காங்கிரஸ் எம்பிக்களும் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மோடி அரசு முற்றிலும் ஒரு சர்வாதிகார அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. ஜனநாயக மாண்புகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன.
போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி அமைச்சர் தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும்; போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்; இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும்; மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 27 ஆம் தேதி திங்களன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம். அதில் சனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- தொல். திருமா
ஜூலை 23 - மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி, அரச பயங்கரவாதத்தால் பலியான போராளிகளின் நினைவு தினமான இன்று (23.07.26) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேரணியாக சென்று தாமிரபரணி நதிக்கரையில் வீரவணக்கம் செலுத்தினோம்!
@thirumaofficial
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் . இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் . அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.
எங்கெல்லாம் மக்களின் அழுகை குரல் கேட்கிறதோ
அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
_ தோழர் சே❤️
இந்தியாவின் சேகுவேரா
எம்மான்-எழுச்சித்தமிழர்
Thol.Thirumavalavan
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். 20 நாட்களை கடந்து போராளி சோனம் வாங்சுக் உண்ணாநிலை அறப்போராட்டம் மேற்கொண்டார். வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அடைத்து வைத்துள்ளது டெல்லி காவல்துறை.
நேற்று (20.07.26) மக்களவை கூடியுள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணி செல்வதற்கு தோழர் வாங்சுக் விடுத்த அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களின் நாடெங்கிலும் இருந்து டெல்லியில் திரண்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்க கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடியும், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசியும் டெல்லி காவல்துறை வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி முன்பு இதுநாள் வரை பாஜக பேசி வந்த இந்து தேசியவாதமோ மதவாத பரப்புரையோ துளியும் எடுபடவில்லை. தங்கள் எதிர்கால கனவுகளை பாதுகாக்க போராடும் மாணவர்கள், காவல்துறையின் கண்ணீர் புகைகுண்டுகளையும், லத்திகளையும் துணிவுடன் எதிர்கொள்ள வீதியில் இறங்கியுள்ளனர்.
நீதி கேட்டு போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், எம்.பிக்கள் பிரதமர் மோடி இல்லத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மூர்க்கத்தனமாக அடக்குமுறையை ஏவி கைது செய்துள்ளது டெல்லி காவல்துறை. மக்கள் மன்றமான பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் குரலையும் ஒடுக்குகிறது ஒன்றிய பாஜக அரசு.
பாஜகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக இந்நாட்டின் மாணவர்களும் இளைஞர்களும் விழித்துக் கொண்டனர். இனி பாஜகவுக்கு அவர்களே முடிவுரை எழுதுவார்கள்!
அதற்கு முன்பாகவே நீட் தேர்வை பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
21.7.2026
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் . இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் . அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் SC /ST development action plan act -2024 சட்டத்தின்படி அதன் மாநில கவுன்சிலை கூட்ட வேண்டும். அக்கவுன்சிலின் ஏற்பிசைவை பெற்ற பின்னரே நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும் எனும் சட்டப்பூர்வ செயல் முறையை தமிழக அரசு நடைமுறை படுத்திட வேண்டும்.
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோள்.
@CMOTamilnadu
__________________________________
பெறல்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ,
தலைமை செயலகம்
சென்னை.
அன்புடையீர் வணக்கம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்திற்கான சட்டம் 2024 (SC/ST Development action plan Act ) கொண்டு வரப்பெற்று அதை நடைமுறை படுத்துவதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அரசிதழிலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. SC/ST மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை சட்டபூர்வ நடைமுறையாக மாற்றியுள்ள இச்சட்டம் தமிழ்நாட்டின் சமூக நீதிப்பயணத்தில் மிக மிக முக்கியமான மைல் கல்லாகும்.
இச்சட்டத்தின் படி தமிழக அரசு நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன் இச்சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள மாநில மன்றத்தின் ( DAP - State council )ஒப்புதலை பெற வேண்டும்.
இந்த கவுன்சில் மாண்புமிகு முதல்வரின் தலைமையில் கூட்டப்பெற வேண்டும். அதில்
அரசின் பல்வேறு செயலாக்கத்துறைகள் செயற்படுத்தும் நலத்திட்டங்களுக்காக (welfare expenditure)ஒதுக்கப்படும் நிதியொதுக்கங்களில் பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய விகிதாச்சாரப்படி அம்மக்களின் மேம்பாட்டிற்கென நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திட வேண்டும்.
இரண்டாவதாக ஒவ்வொரு துறையும் தமது துறையில் SC/ST மக்களுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்குதல்( Development action plan), நடைமுறை படுத்துதல் மற்றும் கண்காணித்தல் உள்ளிட்டப்பணிகளை செய்வதற்கான institutional arrangements நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்திட்டங்களில் இவ்வாண்டு நடைமுறை படுத்துவதற்கான Development action plan திட்டங்களை pre budget proposal- லாக முகமை துறைக்கு அதாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ( சமூக நீதித்துறை) சமர்ப்பிக்க வேண்டும். இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும 2 ன் வழி இது சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதலை பெற்றுள்ளனவா என்பதையும் இந்த கவுன்சில் கண்காணிக்க வேண்டும்.
அதாவது சட்டப்பேரவையின் நடப்பாண்டு கூட்டத்தொடரில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன் முன்மொழியப்படவிருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் மேற்படி சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள மாநில கவுன்சிலின் ஏற்பிசைவை பெற வேண்டும் என்பதையும் அன்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன்.
இவை அனைத்தும் இச்சட்டத்தில் உள்ள அம்சங்களே என்பதையும் ஆகவே அவற்றை இமியளவும் பிசகாமல் கனிவுடன் நடைமுறை படுத்திட உடனே மாநில கவுன்சிலை கூட்டிட வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வரை நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் அவர்களும் , நானும் ஜூன் முதல் வாரத்தில் அரசு தலைமைச்செயலாளரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள
சிந்தனை செல்வன்
பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
பின் இணைப்பு:
1. இது தொடர்பில் கடந்த 09.06.2026 அன்று தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பித்த மனுவின் நகல்.
2. 2024 SC /ST DAP Act and rules