பைசன் பல தடைகளை உடைத்து முன்னேறும் ஒருவனின் போராட்ட வாழ்க்கை. நம் அனைவரும் ஒரு வகையில் ஏதாவது தடைகளை உடைத்தால் தான் முன்னேற முடியும்
It is a story of hope against odds. opposition may come from anywhere, some individual & some structural
Well made movie!
#Bison#film#movie
#BisonKaalamaadan: மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் @mari_selvaraj.
அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!
"அதுக்கு தானே மக்கள் தேர்ந்தெடுத்துருக்காங்க"
என துணை முதலமைச்சர் பதில் கொடுத்த வீடியோ நேற்று வைரலானது.
அப்டி என்ன செஞ்சசுருக்காருனு தேடிப் பாத்தேன்.
உண்மையிலேயே பிரமிப்பா இருக்கு...😲
(தெரிஞ்சுக்க விருப்பம் இருப்பின் முழுசா படிச்சுருங்க)
ஊரே தீபாவளி கொண்டாடுன அக்டோபர் 20 திங்கள் கிழமை அரசு விடுமுறை நாள்.
கண்ணகி நகர் பகுதியில் ஒக்கியம் மடுவின் இடதுபுறம் கரையில் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்
மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரை இணைக்கின்ற செம்மொழி சாலையில் நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வரும் vent clearance பணிகளை ஆய்வு செய்து இருக்கிறார்.
மேம்பாலப்பணி மற்றும் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் இருந்து மழைநீரை வெளியேற்றக்கூடிய ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவாக்கத்தை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்
அக்டோபர் 21 செவ்வாய்கிழமை
முதல்வேலையாக மழை பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்.
அடுத்து
இந்திரா நகர், காமராஜர் அவன்யூ முதல் தெருவில் அரசு சார்பில், அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள், (தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை மழைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையோடு மீட்டு தங்க வைக்கும் இடம் சென்னையில் பல இடங்களில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்) மற்றும் அதில் தயார் நிலையில் உள்ள சமையலறையை ஆய்வு செய்திருக்கிறார்.
வேளச்சேரி MRTS ரயில் நிலையம் அருகே தாழ்வான இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதைப் பார்வையிட்டு, அதனை வெளியேற்றும் பணியில் உள்ள அதிகாரிகளை on the spot சந்தித்து இருக்கிறார்.
மேலும், சிறு மழை என்றாலே சென்னை வேளச்சேரி பகுதியில் மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்துகிற சூழல் நிலவும். அதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், அங்கு உயரமான பகுதிகளில் Parking செய்வதற்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு இருக்கிறார்.
தென் சென்னை பகுதியில் 1.50 லடசம் குடும்பங்களை காப்பாற்றும் நாராயணபுரம் ஏரியில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை நீர் ஏதும் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து களத்தில் அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்.
பள்ளிக்கரணை ஐ.ஐ.டி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்கும் முகாமை ஆய்வு செய்திருக்கிறார். அங்குள்ள சமையல் கூடத்திற்குச் சென்று, இருப்பில் உள்ள அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்திருக்கிறார்.
தென் சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் தேங்கும் மழை நீரை வேளச்சேரி வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு கொண்டு சேர்க்கும் வீராங்கல் ஓடை தூர்வாரப்பட்டுள்ளதை ஆய்வு செய்திருக்கிறார். அதன் கரையோரங்களில் 1.3 கி.மீ தூரத்துத்துக்கு தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளதை நேரில் சென்று முழு விசிட் அடித்திருக்கிறார்.
ஓடைக்குள் குப்பைகள் தேங்காமல் இருக்க, போடப்பட்டுள்ள கம்பி வலைகளையும் (Chain Link Mesh) ஆய்வு செய்து இருக்கிறார்.
சென்னை ஆதம்பாக்கம் கக்கன் பாலம் அருகே 100 HP Motor மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.
ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை பகுதியில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளோடு ஆய்வு செய்திருக்கிறார்.
வேளச்சேரி பகுதியில், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு இரவில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.
அக்டோபர் 22 புதன் கிழமை
முதல்வேலையாக அவரது சொந்த தொகுதி Chepauk Triplicane, திருவல்லிக்கேணி பகுதி, வி.ஆர் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடத்தில் ஆய்வு செய்திருக்கிறார்.
சிந்தாதிரிப்பேட்டை அய்யா தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் ஆய்வு செய்திருக்கிறார். (அரிசி - மளிகை பொருட்கள் - பிரட்- பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன)
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக, சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளியில் தற்காலிக தங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.
சென்னை அண்ணா சாலை - ஜி.பி சாலையை இணைக்கின்ற பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளையும், மழை நீர் வடிவதற்காக செய்யப்பட்டுள்ள பிற ஏற்பாடுகளையும் நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.
வடகிழக்குப் பருவமழை நேரத்தில் Chennai மக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள ICCC (ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில்) காலை ஆய்வு செய்திருக்கிறார். 1913 Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் இவரே பேசி இருக்கிறார். (வீடியோக்கள் அவரது facebook , X பக்கத்தில் இருக்கிறது). அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையையும் அதே இடத்தில் இருந்து எப்படி complaint resolve ஆகிறது என Followup செய்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடி மதிப்பில் விருகம்பாக்கம் கால்வாயை சீரமைக்கும் பணிகளை அண்மையில் தமிழ்நாடு அரசு துவங்கி இருந்தது. அந்தப்பணிகளை ஆய்வு செய்து, அதன் தற்போதைய நிலை மற்றும் பணியில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளோடு ஆய்வு செய்திருக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கம், ஜெய்சங்கர் லேன் பகுதியில் மழை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து இருக்கிறார்.
சென்னை புறநகரில் முக்கியமான இடம் மேடவாக்கம் ஜங்ஷன் பகுதி (சற்று தாழ்வான பகுதி) சிறு மழைக்கே நீர் தேங்க வாய்ப்பிருப்பதால் அங்கே சென்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
அதிக மழைப்பொழிவால், சென்னை மேடவாக்கம் ஏரியை ஒட்டியுள்ள கரையோர பகுதிகளில் நீர் சூழ்ந்திருந்த நிலையில், அவற்றை வெளியேற்றிட நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அங்கிருந்த பொதுமக்களிடம் நேரடியாக கருத்துக்களையும் கேட்டு இருக்கிறார்.
தன்னோட தொடர் விசிட் க்கு பிறகு, இதான் highlight
"அரசு சார்பா நிறைய வேலை நடக்குது அது ஒருபக்கம் இருக்கட்டும், கடைசிகார்களா நாம சும்மா இருக்க முடியாதுல, மழை நேரத்துல என்ன செய்யப்போறோம்?” என கட்சி நிர்வாகிகள், கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் எல்லாரையும் அறிவாலயத்துக்கு வரவைத்து சந்தித்திருக்கிறார். அவர்கள் எப்படி பெருநகர மாநகராட்சியோடும் தன்னார்வளர்களோடும் இணைந்து நிவாரணப் பணியாற்றானும்னு அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறார்.🔥
(முழுவதையும் பொறுமையாக வாசித்ததற்கு நன்றி)
படிக்கவே இவ்வளவு இருக்கே…
இதெல்லாம் வெறும் 3 நாளில் இவர் ஓடிய ஓட்டம்…😳
Great Effort @Udhaystalin sir 🔥
Keep inspiring us ❤️
Finally,
No matter your party affiliation or personal loyalties, this man’s hard work and commitment deserves huge respect and should be celebrated.
- மில்ட்டன்
23.10.2025
No food option removed in railone app. @amofficialCRIS have no clue about it. @RailMinIndia@RailwaySeva@IRCTCofficial if it is purposefully done it is in favour of catering contractors only. the No Food Preference option is removed on Vande Bharat Express trains.#foodimposition
Are u willing to join as volunteer in Greater chennai traffic police. join the whatsapp group.
சென்னை போக்குவரத்து காவல்துறையில், மழைகாலத்தில் தன்னார்வலர்களாக இணைய விருப்பமா? link
https://t.co/8gBudTfFQx
@ChennaiTraffic#Traffic#chennai#GCTP
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவும், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினர்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்க முடிகிறது. மேலும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்படுகிற குழுவும் கண்காணிக்க இருப்பதன் மூலம் கரூர் துயர சம்பவத்தின் உண்மை பின்னணியும் விரைவில் வெளிவரக்கூடும் என்பதை அனைவராலும் அறிந்து கொள்ளமுடிகிறது.
கரூர் துயர சம்பவத்தில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திமுக தலைமையிலான அரசுக்கு கிடைத்த மாபெரும் சம்மட்டி அடியாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. மேலும், கரூர் துயர சம்பவத்தில் விரைவில் உண்மைகள் வெளிவரவும், உயிர் நீத்தவர்களுக்கு உரிய நியாயம் கிடைத்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
நாளை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளி வருவதை முன்னிட்டு, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன!. 🐿🤡🔥
TVK TVK TVK TVK TVK TVK TVK 🐿🐿🐿