விசாரணை கைதி உயிரி*ப்பு.. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் அதிகளவில் பணிபுரிவதே இதுபோன்ற உயிரி*ப்புகளுக்கு காரணம்.. புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பேட்டி.
#Sivagangai#Police#Attack#PoliceIncident#Protest#Newstamil24x7
*புதிய தமிழகம் கட்சி – தலைமை நிலைய அறிவிப்பு*
நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்��ளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், சம்பவம் குறித்த உண்மைத் தன்மையை கேட்டறியவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் நாளை (10-03-2026, செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்ல இருக்கிறார்கள்.
எனவே, புதிய தமிழகம் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் அனைவர��ம் இளைஞரணி தலைவர் அவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி,
09.03.2026
மானாமதுரையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பி ஆகாஷ் அவர்களின் காவல் நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு பரமக்குடி ஐந்து முனைப்பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக சாலை மறியலில் ஈடுபட்ட போது
மானாமதுரையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் அவர்களின் காவல் நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு பரமக்குடி ஐந்து முனைப்பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக சாலை மறியலில் ஈடுபட்ட போது;
*மானாமதுரைக்கு டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வருகை;*
மானாமதுரை காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த ஆகாஷ் அவர்களின் மரணம் குறித்த உண்மைத் தன்மையை அறியவும், அவரது ��ெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் (09-03-2026, திங்கட்கிழமை) மதியம் 12:55 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்கள்.
எனவே, புதிய தமிழகம் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இளைஞரணி தலைவர் அவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமை அலுவலகம்,
*புதிய தமிழகம் கட்சி*,
09.03.2026
மார்ச் 6, 1995 —
புதிய தமிழகம் கட்சி பிறந்த நாள் மட்டும் அல்ல…
தேவேந்திர குல வேளாளர் மக்களின் அரசியல் விழிப்புணர்வு பிறந்த வரலாற்று நாள்.
@DrKrishnasamy@PTITWing@DrShyamKK
எப்போதும் ராஜ்யசபா தேர்தல் வரும் போதெல்லாம் திமுக ஒரு கூட்டு கணக்கைப் போடும். 2011 இல் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் சேர்ந்த போது அதற்கு சவால் விடும் வண்ணம் தங்கவேலுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுத்துவிட்டால் தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகள் நமக்கு கிடைக்கும் என்று கலைஞர் திட்டமிட்டார். உண்மையில் அது எனக்கு அன்று சொல்லி ஒதுக்கப்பட்ட ராஜ்�� சபா சீட்.! தங்கவேலுக்கே கொடுத்து விட்டார்கள்.
இன்றைக்குக் கடற்கரையோர மீனவர்கள் திமுகவின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களை கணக்கில் எடுக்காமல் மாற்றாக பத்து வருடத்திற்கு முன்பாக தேமு திமுகவிலிருந்து வந்த கான்ஸ்டன்டைன் என்பவருக்கு ராஜ்ய சபா கொடுத்துள்ளார்கள். இந்த கான்ஸ்டைன்டைன் என்பவர் நீண்ட நெடுங்காலமாக திமுகவிலும் கலைஞருடைய அன்பில் இருந்தவரா? இல்லை கலைஞருடன் நெருங்கி பழகியவர் என்பதற்காகக் கொடுத்தார்களா இல்லை மீனவர் ஓட்டுகளைப் பெறுவதற்காக கொடுத்தார்களா? அடிப்படையில் அவர் யார் என்றே தெரியாமல் இப்பொழுது வந்தவருக்குக் கொடுத்துள்ளார்கள்.
தமிழ் தாசன் என்பவர் அண்ணா காலத்தில் இருந்து நீண்ட காலமாகத் திமுகவில் இருக்கிறார். ஆங்கிலமும் தமிழும் கற்றவர்!முரசொலியில் நிறைய எழுதியவர்! அவருக்குக் கொடுக்கலாமே! இப்படி பாரம்பரியமாகத் திமுகவை நம்பி அதற்கான அடிப்படை வேலைகளைச் செய்து அங்கேயே இருந்து கடைசி வரை பணிகளை ஆற்றியவ��்களுக்கு ஏன் இந்த ராஜ்யசபா சீட் போன்றவை மறுக்கப்படுகிறது!?. அதிமுகவில் இருந்து யார் ஒருவர் வந்தாலும் அவரை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் இந்த ஸ்டாலினுக்கு ஏதேனும் சிந்தனைத் தெளிவு இருக்கிறதா? இன்றைக்கு வந்திருக்கும் அதிமுக காரர்கள் தான் ஸ்டாலினை பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் ஐநா சபையிலும் கொண்டு போய் பேச வைத்தார்களா? இந்த ஸ்டாலின் அடிப்படையில் ஒரு புரிதல் இல்லாத மனிதர்! ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்பது மாதிரியே கடைசி வரைக் காட்டிக் கொள்வார். அதற்கு வேறு ��ழுத்தமான காரணங்கள் எதுவும் இருக்காது. தன்னைவிடக் கொஞ்சம் விவரம் தெரிந்தவர் என்றாலே அருகில் அனுமதிக்க மாட்டார். ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று ஆழ்ந்து பார்க்கவோ அவரிடம் என்ன திறமை இருக்கிறது அவரைப் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவும் கூட இல்லாதவர். இப்படி அவர் போக்கில் இருப்பதற்கு காலமும் இயற்கையும்தான் பதில் சொல்ல வேண்டும். அதேபோல் அவர்கள் தங்கை கனிமொழி ஏதோ உலக��்தை அதன் தத்துவத்தை எல்லாம் படித்த மேதை மாதிரி சாணக்கியதந்திரங்கள் உள்ளவர் போல அவரை ��ிகைப்படுத்தி இப்போது எல்லாம் காட்டுகிறார்கள். அவர் ஒரு பக்கம் அரசியல் செய்கிறார். கலைஞரின் பிள்ளைகள் என்றாலே பெரிய அறிவுள்ளவர்கள் மேதைகள் என்பது மாதிரி ஒரு பொய் தோற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். இவர்களை விடப் புரிந்தவர்கள் அறிந்தவர்கள் இயக்கத்தோடு கழகத்தோடு வேலை செய்தவர்கள் சிறைக்குச் சென்றவர்கள் தியாகம் செய்தவர்கள் வரலாற்றை அறிந்தவர்கள் அரசியல் நடைமுறையும் புரிந்தவர���கள் எத்தனையோ பேர் எந்த வாய்ப்பும் இல்லாமல் இன்று வரை இருக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கெடுக்காமல் இவர்கள் இஷ்டத்திற்கு யாருக்கும் ராஜ்ய சபா சீட் கொடுக்கிறார்கள் என்றால் இவர்கள் மனிதர்களே கிடையாது!?
அதிமுகவிலிருந்து வந்தவர்களை விடவும் திமுகவில் ஏற்கனவே இருப்பவர்களும் இதை எல்லாம் கேட்க இல்லாமல்
அடிமைகளாகத் தானே இருக்கிறார்கள். இல்லை நீங்கள் செய்வது தவறு என்று எங்களைப் ���ோன்றவர்கள் சொன்னால் எங்களுக்கெல்லாம் திமுகவில் இடமில்லை.நாங்கள் என்ன ஸ்டாலினைக் கடுமையாகத் திட்டினோமா எதிர்வினை செய்தோமா என்ன துரோகம் செய்தோம்?திமுகவிற்காகத்தானே அவ்வளவு சிரமப்பட்டு உழைத்தோம். ஸ்டாலினுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பது தவறானது தானே நேர்மையாக��ும் அடிப்படைக் கொள்கைக்கு உழைப்பவர்களாகவும் மக்களை சந்திப்பவர்களாகவும் இருந்தது தவறா? இல்லை ஸ்டாலின் தயவு இருந்தால்தான் சாப்பிட முடியுமா? அல்லது அவரதுதயவு இருந்தால் தான் தூங்க முடியுமா? இத்தனை வருட அனுபவத்தில் எ டு இஸட் அவரை அறிந்தவர்கள் நாங்கள். இன்றைய ஜால்ரா பார்ட்டிகள் ஏதோ வானத்தில் இருந்து குதித்து வந்த மன்னாதி மன்னன் மாதிரி
அவரைப் போற்றிப் பாடுகிறார்கள். இதையெல்லாம் பேசுவதற்காக வந்ததாக சொல்லிக் கொண்ட வைகோ இன்றைக்கு அவர் பாதுகாப்பில் ஒடுங்கி உட்கார்ந்து இருக்கிறார். வேறு என்னத்தைச் சொல்வது?
#Rajysabhaelection
#TamilNaduPolitics
#ராஜ்யசபாதேர்தல்
#தமிழகரசியல்
அடேய் Rss சித்தாந்தத்தை முழுவதும் ஆதரித்து வழி நடந்த மனிதனடா!
உள்ளே கொண்டு வாங்கப்பா..!
RSS-ல் இணையலாம் ஆனால் isisல் இணைய கூடாது என்று பொதுவெளியில் கூறியவர்
#கிருஷ்ணசாமி!
ஒரு காலத்தில் முரண்பாடு இருந்தாலும்,இப்பொழுது எல்லாம் தேசியம்,தெய்வீகம் என்ற கொள்கையில் இருப்பவர் இவர்🙏
நாங்குநேரியில் மீண்டும் மீண்டும் தொடரும் கொலை வெறியாட்டங்கள்!
தடுத்து நிறுத்தத் தயங்கும் காவல்துறை!
........................................................................
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தை புதிய தமிழகம் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் (பறையர்), உடையார், நாடார், பிள்ளைமார், பிராமணர், விஸ்வகர்மா எனப் பல்வேறு சமூக இளைஞர்கள் பல வருடங்களாகச் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்கு தடையற்ற வன்���ுறையில் ஈடுபடுவதால், மற்ற சமூகங்கள் தங்கள் சொந்தக் கிராமங்களிலேயே வாழ முடியாமல் ஊரைக் காலி செய்துவிட்டுப் போகும் அவல நிலைகளை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எண்ணற்ற முறை எடுத்துச் சொல்லியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இதன் விளைவாக ஏழை எளிய மக்களும், குறிப்பாக இளைஞர்களும் வியாபாரிகளும், அராஜகப் போக்குக் கொண்ட கும்பலால் எவ்விதமான காரணமும் முன்விரோதமும் இன்றி கொல்லப்படுவதும், கொடும் தாக்குதலுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு சின்னதுரை என்ற பள்ளி மாணவன் கொடூரமாகத் தாக்கப்பட்டு நூலிழையில�� உயிர் தப்பினார். நேற்று நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒன்பது பேர் கொண்ட ஆயுதக் கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி, சரமாரியாகத் தாக்கியதன் காரணமாக, ஜான் மார்க் என்ற ஆதிதிராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்தவரும், திருநாத் கடா என்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆறு பேர் பலத்�� காயமுற்றுள்ளனர்; இரண்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கடந்த வருடம் நடந்த நாங்குநேரி வாகைக்குளம் தீபக் படுகொலையிலேயே உண்மைக் குற்றவாளிகளையும், அவர்களுக்குப் பின்புறமாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்திய போதும், கைது செய்யப்பட்ட சிலரையும் 90 தினங்களில் பிணையில் விடுதலை செய்தார்கள். அவர்கள் அனைவரும் இன்றுவரை தலைமறைவாக இருந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வன்முறைக் கும்பல்கள் அதிகரித்து ஏழை, எளிய மக்கள் மீது இது போன்ற தாக்குதல்களைச் செய்து எதற்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வல��் வருகிறார்கள். சின்னத்துரை மீதான தாக்குதலுக்கு ஆறுதல் அளிக்க சென்றுவிட்டு, நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு நாம் சென்றதை கூட சில வன்முறை கும்பல்கள் எதிர்த்தார்கள்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரே அவ்விடத்தில் இருந்தும், நமக்கு பாதுகாப்பு அளித்து கோவிலுக்கு அழைத்துச் செல்ல முன்வரவில்லை.
நாங்குநேரி பகுதியில் நடைபெறும் இதுபோன்ற அராஜக வன்முறை செயல்களால் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் வனிகர்கள் மனதில் ஒரு அச்சத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்களுடைய உடமையைக் கைப்பற்றுவதும், பிற சமூக மக்களை அப்பகுதியிலிருந்து துடைத்தெறிவதும் தான் அவர்களின் தலையாய நோக்கமாகும். இது குறித்து நாங்கள் பலமுறை ��லியுறுத்தி இருக்கிறோம்; எனினும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; நடுநிலை பேசும் சமூகநீதி பற்றாளர்களும் கண்டுகொள்ளவில்லை. இனியாவது திருநெல்வேலி, நாங்குநேரியில் வன்முறையில் ஈடுபட்டு வரும் வன்முறை கும்பல்களின் செயல்களை அறவே ஒழித்துக் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இச்சம்பவத்தில் மரணமெய்தியவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்��மும், காயமுற்றவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சமும் வழங்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
- நிறுவனர் & தலைவர்,
- புதிய தமிழகம் கட்சி.
- 03.03.2026
நாங்குநேரியில் மீண்டும் மீண்டும் தொடரும் கொலை வெறியாட்டங்கள்!
தடுத்து நிறுத்தத் தயங்கும் காவல்துறை!
..........................................................
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தை புதிய தமிழகம் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் (பறையர்), உடையார், நாடார், பிள்ளைமார், பிராமணர், விஸ்வகர்மா எனப் பல்வேறு சமூக இளைஞர்கள் பல வருடங்களாகச் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்கு தடையற்ற வன்முறையில் ஈடுபடுவதால், மற்ற சமூகங்கள் தங்கள் சொந்தக் கிராமங்களிலேயே வாழ முடியாமல் ஊரைக் காலி செய்துவிட்டுப் போகும் அவல நிலைகளை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எண்ணற்ற முறை எடுத்துச் சொல்லியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இதன் விளைவாக ஏழை எளிய மக்களும், குறிப்பாக இளைஞர்களும் வியாபாரிகளும், அராஜகப் போக்குக் கொண்ட கும்பலால் எவ்விதமான காரணமும் முன்விரோதமும் இன்றி கொல்லப்படுவதும், கொடு��் தாக்குதலுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு சின்னதுரை என்ற பள்ளி மாணவன் கொடூரமாகத் தாக்கப்பட்டு நூலிழையில் உயிர் தப்பினார். நேற்று நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒன்��து பேர் கொண்ட ஆயுதக் கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி, சரமாரியாகத் தாக்கியதன் காரணமாக, ஜான் மார்க் என்ற ஆதிதிராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்தவரும், திருநாத் கடா என்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆறு பேர் பலத்த காயமுற்றுள்ளனர்; இரண்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கடந்த வருடம் நடந்த நாங்குநேரி வாகைக்குளம் தீபக் படுகொலையிலேயே உண்மைக் கு��்றவாளிகளையும், அவர்களுக்குப் பின்புறமாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்திய போதும், கைது செய்யப்பட்ட சிலரையும் 90 தினங்களில் பிணையில் விடுதலை செய்தார்கள். அவர்கள் அனைவரும் இன்றுவரை தலைமறைவாக இருந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வன்முறைக் கும்பல்கள் அதிகரித்து ஏழை, எளிய மக்கள் மீது இது போன்ற தாக்குதல்களைச் செய்து எதற்கும் கட்டுப்படாமல் ���ுதந்திரமாக வலம் வருகிறார்கள். சின்னத்துரை மீதான தாக்குதலுக்கு ஆறுதல் அளிக்க சென்றுவிட்டு, நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு நாம் சென்றதை கூட சில வன்முறை கும்பல்கள் எதிர்த்தார்கள்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரே அவ்விடத்தில் இருந்தும், நமக்கு பாதுகாப்பு அளித்து கோவிலுக்கு அழைத்துச் செல்ல முன்வரவில்லை.
நாங்குநேரி பகுதியில் நடைபெறும் இதுபோன்ற அராஜக வன்முறை செயல்களால��� மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் வனிகர்கள் மனதில் ஒரு அச்சத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்களுடைய உடமையைக் கைப்பற்றுவதும், பிற சமூக மக்களை அப்பகுதியிலிருந்து துடைத்தெறிவதும் தான் அவர்களின் தலையாய நோக்கமாகும். இது குறித்து நாங்கள் பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம்; எனினும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; நடுநிலை பேசும் சமூகநீதி பற்றாளர்களும் கண்டுகொள்ளவில்லை. இனியாவது திருநெல்வேலி, நாங்குநேரியில் வன்முறையில் ஈடுபட்டு வரும் வன்முறை கும்பல்களின் செயல்களை அறவே ஒழித்துக் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இச்சம்பவத்தில் மரணமெய்தியவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சமும், காயமுற்றவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சமும் வழங்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
- நிறுவனர் & ���லைவர்,
- புதிய தமிழகம் கட்சி.
- 03.03.2026
@sengaivinothR டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் வருகையால் தான் இமானுவேல் சேகரன் அவர்களுடைய தியாகம் வெளியில் வந்தது நன்றி மறந்து அவரது குடும்பத்தினர் பேசக்கூடாது..
நாடு போற்றும் அந்த நல்ல மனிதரின் மறைவால் கவலையுறும் அனைவருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கல்.!
......................................................
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், பொதுவுடைமை இயக்கத்தின் முதும்பெரும் தலைவருமான ஐயா நல்லகண்ணு அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு மனிதன் சாதாரணமாக 100 ஆண்டுகள் வாழ்வதே அசாத்தியமானது. அதிலும் தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக இம்மியளவும் பிசக���மல், தன் வாழ்நாளை முழுமையாகப் பூர்த்தி செய்தது எவருடைய வாழ்க்கையோடும் ஒப்பிட முடியாத ஒன்றாகும்.
அவர் ஒரு கட்சியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், அனைத்து உழைப்பாளர்களும் அவரைத் தங்களுக்கான உரிமை மீட்பராகவே கருதி, அவருக்கு உண்டான மதிப்பையும் மரியாதையையும் அளித்து வந்துள்ளனர். 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாம் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டபோது, பல்வேறு தருணங்களில் அவர��டு இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.
அவருடைய இழப்பு பொதுவுடைமைத் தோழர்களுக்கு மட்டுமின்றி, சமத்துவமும் சம உரிமையும் இம்மண்ணில் நிலைநாட்டப்பட வேண்டும் என உளமாற எண்ணும் அனைவருக்கும் பேரிழப்பாகும். நாடு போற்றும் அந்த நல்ல மனிதரின் மறைவால் கவலையுறும் அனைவருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிற��ன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD. Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.02.2026