இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet
இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளார் தி.மு.கழகத் தலைவர் அவர்கள். தவெக ஆட்சி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள். அதுதான் மக்களின் கோரிக்கை!
#TVKFails
யாராலும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி!
நமது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால், 'நான் முதல்வன்' மற்றும் 'புதுமைப்பெண்' திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை ஒளிபெற்றுள்ளது. கல்வியால் உலகை வெல்வோம்!
#VoteForDMK
தலைவர் கலைஞரின் சமூகநீதிச் சட்டத்தால் மருத்துவர் ஆன டாக்டர் கோகிலாமணி அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராக்க உடன்பிறப்புகள் முழு உழைப்பைச் செலுத்துவோம்!
#VoteForDMK
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் அரியலூர் மாவட்டம் கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu!
Let the arrogance of the fascist BJP be brought down!
🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield.
🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land.
🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees.
#SayNoToNDA