We said Kovai will rise, and #KovaiRising indeed !
As we get ready for #TNRising Coimbatore this evening, it feels like the right time to bring back the #KovaiRisingAnthem : )
With #TNRisingCoimbatore, we are repositioning the city itself. It is no longer just a manufacturing powerhouse. It is becoming a high-tech industrial and innovation hub.
This conclave pushes that shift forward with a sharp focus on advanced electronics, auto electronics, aerospace and defence, drones and small aircraft, and digital infrastructure including data centres, and most importantly- GCCs !
Expect a major announcement on that this evening, #Coimbatore !
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?
நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.
உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்?
கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?
உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!
பேரறிஞர் பெருந்தகையின் பெருமைமிகு மாணவர்,முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை முகமாய் ஒளிர்ந்த சுடர்!
நாடாளுமன்றத்தில்
மாநில உரிமைகளுக்காக நாள்தோறும் ஒலித்த குரல்!
நல்லாட்சி நாயகரின் நல்வழிகாட்டி
மேனாள் ஒன்றிய அமைச்சர்
அண்ணன் முரசொலிமாறன் அவர்களின் நினைவு நாளில்
அவர் நினைவுகளை
போற்றி வணங்குவோம்!🙏
#MurasoliMaran
🚨 S.I.R என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயச் சூழல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜக மறைமுகத் தாக்குதல் நடத்துகிறது.
🗳️ நமது வாக்குரிமையைக் காக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. S.I.R படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்யக் களத்தில் தி.மு.கழகம் நிற்கிறது!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுடன் கரம் கோர்த்து நின்று சதிகாரச் சக்திகளின் சதிவலைகளை அறுத்திடுவோம்; ஜனநாயக உரிமையைக் காத்திடுவோம்! 🌄
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
☀️ மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்!
☀️ சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!
குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது.
சொல்லப் போனால்,
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.
* அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!
* சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை.
* மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம்.
-என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, "நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.
*காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம்,
*சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்சநீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம்.
அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்!
#StateRights #TrueFederalism #SupremeCourt #Constitution
“சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!” - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
#BJPHatesTamilnadu
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது.
இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
- கழக துணைப்பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள்
#Governors
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!
கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.
உழவர்களின் நலன் காக்க தனி பட்ஜெட் உருவாக்கி வரலாற்றில் யாரும் செய்யாத சாதனைப் படைத்தவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். வேளாண்மை செழிக்க அவர் தந்த திட்டங்களின் மூலம் பயிர் உற்பத்தி திறனில் இந்தியளவில் முதலிடம் பிடித்து விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு.
மேலும் வேளாண்மை சிறக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோவைக்கு வருகை தரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளார். விவசாயப் பெருமக்கள் மீது அக்கறைக் கொண்டு அந்தக் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் அறிவிப்பாரா?
#DMK4TN
'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
The Union BJP government has denied Metro Rail for ‘Temple City’ Madurai and for ‘South India’s Manchester’, Coimbatore, on flimsy grounds.
A government exists to serve people without bias. Yet the Union #BJP treats #TamilNadu’s democratic choice as a reason to take revenge. Pushing such a political custom, in which BJP ruled states get Metros for smaller Tier II cities while opposition ruled States are deprived, is a disgraceful approach. Tamil Nadu, the land of #SelfRespect, will never accept such a distortion of federal principles.
They attempted to stall the #Chennai Metro, and we overcame those malicious attempts and kept the project progressing. With the same determination, we will secure the #MetroRail that #Madurai and #Coimbatore need for their future growth.
Tamil Nadu will fight! Tamil Nadu will win!
கோவை வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள்
Hon'ble Prime Minister Thiru. @narendramodi, Tamil Nadu has recorded a bumper harvest this year and in view of the #NorthEastMonsoon, I am making following urgent requests to you. I hope you will consider them favourably ahead of your visit to Coimbatore.
1️⃣ Necessary orders may be issued to allow Tamil Nadu to revise the target of 16 Lakh MT of rice for current Kharif 2025-2026 season to the actual production and procurement levels for the (Kharif) season.
2️⃣ After the central teams came to Tamil Nadu for assessing the moisture content on 25.10.2025, orders have not yet been issued by the DFPD, GoI for relaxing the moisture content from 17 % to 22%. This needs to be done urgently.
3️⃣ The existing packing size of 25 kg of Fortified Rice Kernels may be permitted to be increased to 50 kg, and the sample lot size may be increased from 10 MT to 25 MT.
These requests are urgent in nature and are placed in the interest of the paddy #farmers of Tamil Nadu.
சாமானியர்களின் இலட்சியக் கனவுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், ஊக்கத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. திராவிட நாயகர் தொழிற்சாலைகளை மட்டும் உருவாக்கவில்லை; பல தொழில் முனைவோர்களையும் உருவாக்கி வருகிறார்!
#DMK4TN
#TNRising
நம்மை நாமே நாம்தான் என்று நிரூபிக்க நம்மையெல்லாம் நிர்பந்திக்கும் திட்ட நடவடிக்கையே, 'SIR'
நம் குடியுரிமையை கேள்வி கேட்கும், வாக்குரிமையை களவாட நினைக்கும் இந்த மாய வடிவத்தை கவனமுடன் கையாள்வோம் ஜனநாயகத்தை வென்றெடுப்போம்!💪🏻🖤❤️
@mkstalin@Udhaystalin@TRBRajaa@dmkitwchennai
#CMMKStalin
#தமிழ்நாடு_தலைகுனியாது
#தமிழ்நாடுபோராடும்
#தமிழ்நாடுவெல்லும்
#DMK4TN
🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்!
🚻 சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும்!
🤝 தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்பதே என் கனவு. அரசு தன் கடமையைத் தொடர்ந்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்.
🧹 மக்களும் Self Discipline கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமக்காக உழைக்கும் #SanitaryWorkers-க்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரும் நன்றிக்கடன்!
புதுமைப் பெண் திட்டம் தொடங்கி, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், அன்புக் கரங்கள் திட்டம் வரை கல்விப் புரட்சியை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலமே இந்த திராவிட மாடல் ஆட்சியின் நிரந்தர இலக்கு.
#ChildrensDay#DMK4TN