🛢️இடர்ப்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினைப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பெற்றுக்கொள்ள ஆணை! - திராவிட மாடல் அரசின் நடவடிக்கை! #ModijiWhereIsLPG
🚨பொதுமக்கள் கவனத்திற்கு! 📢
S.I.R படிவங்களை பூர்த்தி செய்து டிசம்பர் 4 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மக்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கு உதவிட கழகத் தகவல் தொழில்நுட்ப அணி 24×7 தயாராக உள்ளது.
தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த படிவம் மற்றும் விவரங்கள் கண்டறிவது குறித்து உங்களுக்கு எழும் சந்தேகங்களை @DMKITwing-க்கு மெசேஜ் செய்யுங்கள்!
#DMK4TN #தமிழ்நாடு_தலைகுனியாது
Flash !
எச்சரிக்கையும் பாதுகாப்பும் அவசியம்!
இலங்கையை புரட்டி போட்டுள்ள மழை நமது #டெல்டா பகுதிகளை நோக்கி வந்துகொண்டுள்ளது !
திருவாரூர் மாவட்ட கடலோர பகுதிகளில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் ! அரசு அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ! டெல்டாகாரரான நமது மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கண்காணிப்பு மையத்திற்கு நேரடியாக சென்று நிலவரங்களை கேட்டு அறிந்ததுடன், மக்களின் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையான வீச்சில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கையின் சீற்றத்தை உணர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். புயல் எச்சரிக்கை நீடிக்கும் வரை யாரும் வெளியில் நடமாட வேண்டாம்.
புயல்-மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நீர்வளத் துறையின் சார்பில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் அடைப்புகள் சீர் செய்யும் பணி மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணல்மேல்குடி முதல் நாகூர் வரை புயலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கடலோரப் பகுதி மக்களும், #மன்னார்குடி தொகுதியின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் தங்கள் உடமைகளை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். உங்களுக்கு உதவ திராவிட மாடல் அரசு 24x7 ஆயத்தமாக உள்ளது.
பதட்டத்தை தவிருங்கள். பாதுகாப்பாக இருங்கள்🙏🏾
#DeltaRains
குறள் எண்: 126
கலைஞர் உரை:
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.
#திருக்குறள்
திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், சமூகநீதி கொள்கைகளையும் நகைச்சுவை வழியாக, தன் பாடல்கள் வழியாக மக்களிடையே கொண்டு சென்ற கலைவாணர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று!
#DMKITWINGArivagam
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க, மக்களை இருளில் இருந்து மீட்க 75 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது தி.மு.கழகம் எனும் பேரியக்கம். கருப்பு சிவப்பு என்பது வெறும் வண்ணக்கொடி அல்ல வல்லாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் கொடி. அதனைக் கையில் ஏந்தி தமிழ்நாட்டைக் காக்க கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகள் களத்தில் நிற்கிறார்கள்! 🌄
#DMK4TN
பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை கருத்துக்களில் தீராப்பற்றுக் கொண்ட திராவிட இயக்கச் சிந்தனையாளர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று!
#DMKITWINGArivagam
இந்தியாவின் 52 ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்புவகித்து, கடந்த நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார் மாண்பமை பி.ஆர்.கவாய் அவர்கள். அவர் தனது பணிக் காலத்தில் இந்திய நாட்டுக்கு நல்ல பல நீதிகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார்.
#தலையங்கம்
The Man & The Mission! 🔥
அரசியல் மாண்பைக் கடைபிடித்து மாநில உரிமைகளுக்காக தொடர்ந்துப் போராடும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு செழித்து வளர்கிறது! 📈
#DMK4TN
Is the Union finally realising what #TamilNadu warned about years ago? that NEET destroys school education, fuels coaching centre mafias, and punishes poor & rural students.
Instead of fixing public schooling, the Union Govt handed over our children’s future to private coaching factories.
Now they want to push #NEET into Class XI? Limit coaching hours? Curb dummy schools?
These aren’t reforms, they’re confessions of failure.
#Education should empower students, not break them.
Time for the Union Govt to listen to states, respect school education, and end this unjust NEET obsession.
Article by @manashTOI for @timesofindia
🔗: https://t.co/voCUsyPqvB
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சீர்மிகு தீர்மானங்கள்!🌄
#DMK4TN
குறள் எண்: 127
கலைஞர் உரை:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
#திருக்குறள்
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிட்வா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்போடு இருப்போம்.
#CycloneDitvah
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக, 2025- 2026 ஆம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளை தளர்வு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2025 நவ.30-ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 2025 டிச.1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்!
மாண்புமிகு அமைச்சர் திரு @MRKPanneer அவர்கள்
#DitwahCyclone
இன்றைக்கு முதலாவதாக முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, என்னுடைய பெற்றோரை சந்திப்பதற்கு முன்பே குடும்பத்தில் மூத்தவர்களாக இருக்கக்கூடிய உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
வெல்வோம் 200... படைப்போம் வரலாறு என்பதுதான் நமது இலக்கு. அதுதான் எனது பிறந்தநாள் வேண்டுகோள் செய்தி!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#HBDUdhay
சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது,
காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.
இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!
@Udhaystalin #HBDUdhay
பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சமூகநீதி கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்!
#DMK4TN