EC, Patta, Chitta: மூணுமே முக்கியம்... ஆனா மூணுமே Owner-ஆக்காது!
சொத்து வாங்கும்போது "EC Clear-ஆ இருக்கு, Patta என் பேர்ல இருக்கு, அப்போ Safe தானே?"னு பல பேர் நினைப்பாங்க. இது தான் 1000 பேர்ல 900 பேர் பண்ற மிகப்பெரிய தப்பு.
ஏன்னா இந்த 3 Document-ம் வெவ்வேறு Purpose-க்கு. ஒன்னு இருந்தா மத்தது தேவையில்லைனு அர்த்தம் இல்லை.
1. Encumbrance Certificate / EC - சுமை சான்றிதழ்
- எதுக்கு?:
இந்த சொத்து மேல Loan, Mortgage, Sale Agreement, Court Case எதுவும் இருக்கா-னு Check பண்ண.
யார் கொடுப்பாங்க?: Sub-Registrar Office.
முக்கியம்: EC-ல "Nil Encumbrance"னு இருந்தா மட்டும் போதாது. Sale Deed-ம் Check பண்ணனும். EC வெறும் Transaction History மட்டும் தான் காட்டும். Ownership Prove பண்ணாது.
2. Patta / பட்டா-எதுக்கு?: Revenue Department-க்கு Tax கட்ட யார் பொறுப்புனு Record வச்சுக்க.
யார் கொடுப்பாங்க?: VAO / Tahsildar Office.
முக்கியம்: Patta இருந்தா நீங்க Owner-னு அர்த்தம் இல்லை. Madras HC தெளிவா சொல்லியிருக்கு - "Patta is not a document of title. It is only for fiscal purpose".
Sale Deed இல்லாம Patta மட்டும் வச்சு Court-ல Claim பண்ண முடியாது.
3. Chitta / சிட்டா- எதுக்கு?: அந்த Survey Number-ல எவ்ளோ நிலம், என்ன வகை நிலம், யார் பேர்ல இருக்குனு Land Record.
யார் கொடுப்பாங்க?: VAO Office.
முக்கியம்: Chitta-வும் Patta மாதிரி தான். Revenue Record. Title-ஐ Prove பண்ணாது.
4. அப்போ எது தான் Final Proof?
Registered Sale Deed தான்.
Sale Deed Register ஆனதுக்கு அப்புறம் தான் நீங்க Legal Owner. அதை வச்சு தான் Patta, Chitta-வை உங்க பேருக்கு மாத்த முடியும்.
Simple Formula:
Sale Deed = Owner ஆக்கும்
EC = சொத்து சுத்தமா இருக்கானு Check பண்ணும்
Patta/Chitta = Tax கட்ட யார்-னு காட்டும்
சொத்து வாங்கும்போது 3 Step Follow பண்ணுங்க:
1. EC 30 வருஷம் வாங்கி Encumbrance இல்லனு Check பண்ணுங்க.
2. Sale Deed Register பண்ணுங்க.
3. அதுக்கு அப்புறம் Patta, Chitta Transfer பண்ணுங்க.
இந்த Order மாறினா பிரச்சனை தான்.
இவை வெறும் அரசு ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை சான்றுகள் மட்டுமே.
இந்த ஆவணங்கள் எதற்காகத் தேவை, ஒருவரை முழு உரிமையாளராக்குவது எது என்பது பற்றிய முழு விவரம் கீழே:
சொத்து ஆவணங்களின் பங்குபட்டா (Patta):
நிலத்தின் வரி செலுத்துபவர் யார் என்பதை அரசு ஆவணம் மூலம் உறுதி செய்கிறது.
வருவாய்த்துறை (Revenue Dept.) பதிவேடுகளில் இது இருக்கும்.
இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும் (Patta Transfer).
சிட்டா (Chitta):
இது பட்டாவின் ஒரு பகுதி. நிலத்தின் வகைப்பாடு (நன்செய், புன்செய்) மற்றும் அதன் பரப்பளவு (Extent) போன்ற தகவல்கள் இருக்கும்.
வில்லங்க சான்று (EC - Encumbrance Certificate):
குறிப்பிட்ட நிலத்திற்கு யார் யாருக்கெல்லாம் கடன், அடமானம் அல்லது முந்தைய பரிவர்த்தனை உள்ளது என்ற விவரங்களைக் காட்டும் சான்று.
உரிமையாளர் யார்? (Ownership)
உங்களை நிலத்தின் சட்டப்பூர்வமான முழு உரிமையாளர் (Legal Owner) ஆக்குவது கிரயப் பத்திரம் (Sale Deed) அல்லது விற்பனை பத்திரம் மட்டுமே.
அரசு சார்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registrar Office) முறையாகப் பதிவு செய்யப்பட்ட Sale Deed மட்டுமே நீங்கள் வாங்கிய சொத்துக்கான உண்மையான உரிமைச் சான்று (Title deed).
கூடுதல் எச்சரிக்கைகள்தாய்ப் பத்திரம் (Parent Document):
முந்தைய உரிமையாளர்களின் மூலப் பத்திரங்கள் (Mother Documents) சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
டபுள் டாக்குமெண்ட் (Double Document):
பழைய பட்டாவை மட்டும் வைத்துக்கொண்டு, முறையான கிரயப் பத்திரம் இல்லாமல் ஏமாற்ற வாய்ப்புள்ளது.
நீங்கள் இப்போது ஏதேனும் ஒரு சொத்து அல்லது நிலத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா?
அந்த நிலத்தின் கிரயப் பத்திரம் (Sale Deed) மற்றும் தாய் பத்திரம் உங்கள் கைவசம் உள்ளதா?
பட்டா மாறுதல் (Patta Transfer) தற்போது உங்கள் பெயரில் உள்ளதா அல்லது முந்தைய உரிமையாளர் பெயரிலா?
சொத்து அமைந்துள்ள மாவட்டம் அல்லது வட்டம் (Taluk) என்ன?
சொத்துப் பத்திரங்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க, நீங்கள் Tamil Nadu e-Services of Land Records மற்றும் TNREGINET ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பயன்படுத்தலாம்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல் #EC #Patta #Chitta
CCTV Buying Guidance - #jan2#Jan2026#cctv
ரொம்ப நாளா எழுதனும் னு draft செஞ்சுட்டே இருந்தேன். நிறைய தகவல் தேவைபட்டதால் நிறைய நாள் எடுத்துட்டேன் . பொதுவா CCTV னு ஒரே பதிவுல எழுதிவிட முடியாது . அதனால இதை இரண்டாக பிரித்து Home Security (Single Camera -Indoor and outdoor) மற்றும் நாம் எப்போதும் பார்க்கும் CCTV (multiple cameras – Indoor and Outdoor) என்று தனி தனியாக எழுதறேன். முதலில் நிறைய பேர் கேட்டிருக்கும் Home Security/Single Camera பற்றி மட்டும் இந்த பதிவுல பார்ப்போம்.
இப்போ 2026 ல நீங்க ஒரு Home Security CCTV வாங்க வேண்டும் என்றால் நீங்க என்ன எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் னு முதலில் பார்ப்போம் .
1. Purpose and Coverage : முதல் ல நீங்க என்ன காரணத்துக்காக வாங்கறீங்க னு தெளிவா இருக்கனும் . சில பேர் குழந்தையை பார்த்துக்க (Baby monitor) வாங்குவாங்க , சில பேர் Pets monitor செய்ய வாங்குவாங்க , சில பேர் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்புகாக வாங்குவாங்க . அதனால உங்கள் காரணத்தை புரிந்து தகுந்த மாடல் வாங்க வேண்டும். அதே மாதிரி எவ்ளோ தூரம் cover செய்யனும் னு வாங்கும் முன்னையே தேசிடே செஞ்சிருங்க .
2. Image Quality : இந்த கேமரா MP பார்த்து confuse ஆக வேண்டாம் . நம் தேவையை பூர்த்தி செய்யும் அளவு MP இருந்தால் போதுமானது.
3. Night Vision
4. Storage and Recording Option
5. Remote monitoring: இப்போ வருகிற அனைத்து மாடல்கள் CCTV யும் remote monitoring அதாவது நீங்க எங்க இருந்து வேண்டுமானாலும் உங்க CCTV யில் நடப்பதை பார்த்து கொள்ளலாம் .
6. Motion Detection Alerts : இப்போ வந்திருக்கும் latest மாடல்கள் எல்லாம் Human Identity AI வரைக்கும் இருக்கு . அதாவது உங்க CCTV coverage area ல மனித நடமாட்டம் இருந்தால் அதுவே detect செய்து உங்களுக்கு alert message அனுப்பிவிடும் . இரவு பாதுகாப்புக்கு ரொம்ப பயன் உள்ளதா இருக்கும் .
7. Service : கடைசி point . ஆனா இது தான் முதலில் நீங்க consider செய்யனும். நாளைக்கு சர்வீஸ் னு கூபிட்டா அடுத்த நாளே வந்து சரி செஞ்சு கொடுக்கும் அளவுக்கு service support இருக்கனும் .
பாரதத்தில் பங்களாதேஷி ஊடுறுவல் முஸ்லிம்கள், ரோஹிங்கிய முஸ்லிம்கள் இடையே திடீர் பீதி காரணம்!
SIR டிரைவ் காரணமா? இல்லை அது மட்டுமே காரணம் அல்ல!
வாக்காளர் பட்டியலில் இருந்து, பெயர்களை மட்டுமே SIR நீக்குமே தவிர, கைது, அபராதம், நாடு கடத்தல் இல்லை. ஆக அதனால் ஓடவில்லை.
உண்மையான பூகம்பம் மிகப் பெரிய ஒன்று!
The Immigration and Foreigners Act 2025,
மார்ச் 2025 இல் நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்த இந்த ஒற்றைப் புதிய சட்டம், நான்கு பழைய சட்டங்களுக்குப் பதிலாக ஒரு தெளிவான செய்தியைக் கொண்டு வந்துள்ளது:
இந்தியா இனி ஒரு தர்மசாலை அல்ல.
• முறையான பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல், இந்தியாவிற்குள் நுழைந்தால், 5 ஆண்டுகள் சிறை + ₹5 லட்சம் அபராதம், பிறகு நாடு கடத்தப்படுவார்கள்.
• போலி ஆவணங்களை வைத்திருந்தால் ₹10 லட்சம் அபராதம் மற்றும் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.
* இந்த சட்டத்தின் கீழ் யாராவது சிக்கிக்கொண்டால், எந்த அரசியல் கொம்பனாலும், அவர்களைப் பாதுகாக்க முடியாது.
* இவர்களுக்கு உதவியவர்கள், அரசு அதிகாரியோ, தலைவர்களோ, தொழிலதிபர்களோ, வியாபாரிகளோ, யார் சிக்கினாலும் சின்னாபின்னமாவது உறுதி.
* இவர்களுக்கு வாடகைக்கு வீடு, ஹோட்டல் அறை கொடுத்தவர்கள், தங்கவைக்க ஏற்பாடு செய்பவர்கள், வேலை கொடுப்பவர்கள், எல்லோருமே சட்டத்தில் சிக்குவார்கள்.
ஆவணங்களை உருவாக்கியவர்கள் அலறுகின்றனர். வேலை கொடுத்தவர்கள், தொழில் பாதிக்கப்படும் என பதறுகின்றனர்.
இவர்களை வைத்து வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் விழிக்கின்றனர். அவர்கள் காப்பாற்றவதாக உறுதி கொடுத்தும், நம்ப மறுக்கின்றனர். இன்று உன் ஆட்சி, நாளை பாஜக வராது என என்ன நிச்சயம் என கேட்கின்றனர். ரவுடிகள் 24 மணி நேரம் எங்களை பாதுகாக்க முடியுமா என்று கேட்கின்றனர்.
இதனால் தான் ஓடுகிறார்கள், இவர்களை கொண்டு வந்தவர்களே, தாங்கள் சிக்கக் கூடாது என துரத்துகின்றனர். இனி வேறு வழியில்லை, ஓடுவதே நல்லது என நம்புகின்றனர்.
இதையும் மீறி சிலர் தப்பித்து விடலாம் என கனவு கண்டுக் கொண்டு உள்ளனர். அவர்களை பின்னர் வைத்து செய்யலாம். எங்கே போய்விடுவார்கள். அவர்களை அடிப்பதில், இனி இந்தியா பக்கம் கண்ணெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள் என்பது உறுதி.
ஜெய்ஹிந்த்!
டெபிட்/கிரெடிட் கார்டு இன்சூரன்ஸ்: ஒரு நிஜ க்ளைம் அனுபவம்
நண்பர் @eswaramrth03 விபத்தில் இறந்த தனது உறவினருக்காக டெபிட் கார்டில் இருந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டை வெற்றிகரமாக க்ளைம் செய்துள்ளார். அந்த அனுபவத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பாடங்கள் இதோ:
சம்பவம்:
நண்பரின் உறவினர் சாலை விபத்தில் காலமானார். அவரிடமிருந்த டேர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) எளிதாக க்ளைம் செய்யப்பட்டது. டெபிட் கார்டில் உள்ள இன்சூரன்ஸ் பற்றி அறிந்திருந்ததால், அவர் வங்கிக்குச் சென்று இதுபற்றி கேட்டுள்ளார்.
செயல்முறை மற்றும் சவால்கள்:
வங்கிக்கு தெரியவில்லை: ஆரம்பத்தில், வங்கி ஊழியர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் க்ளைம் செயல்முறை பற்றித் தெரியவில்லை.
தாமதமான பதில்: சுமார் 15 நாட்களுக்குப் பிறகு, வங்கி க்ளைம் செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வழங்கியுள்ளது.
விண்ணப்பம்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கார்டு நெட்வொர்க் நிறுவனத்திற்கு (VISA) அனுப்பப்பட்டது. அவர்களுடன் இணைந்திருக்கும் காப்பீட்டு நிறுவனம் க்ளைம் செயல்முறையை மேற்கொண்டது.
கிடைத்த க்ளைம்: சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, க்ளைம் தொகை டிமாண்ட் டிராஃப்ட் (DD) ஆக குடும்பத்திற்குக் கிடைத்தது.
க்ளைம் கிடைத்ததற்கான முக்கிய காரணம்:
இறந்தவர், கடந்த 30 நாட்களுக்குள் தனது டெபிட் கார்டை ஒரு பெட்ரோல் பங்கில் பாயின்ட் ஆஃப் சேல் (POS) மெஷினில் ஸ்வைப் செய்து பெட்ரோல் வாங்கியுள்ளார். இந்த ஒரு POS பரிவர்த்தனை இருந்ததால்தான் க்ளைம் அங்கீகரிக்கப்பட்டது.
நாம் செய்ய வேண்டியவை:
POS பரிவர்த்தனைகள் அவசியம்: உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டுகளை மாதத்திற்கு குறைந்தது 3 முதல் 5 முறை POS இயந்திரங்களில் (கடைகளில் பொருட்கள் வாங்குவது, பெட்ரோல் போடுவது போன்றவை) பயன்படுத்துங்கள். ATM-ல் பணம் எடுப்பது இதில் அடங்காது.
க்ளைம் தொகை: POS பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து க்ளைம் தொகை மாறுபடலாம். அதிக பரிவர்த்தனைகள் அதிக கவரேஜுக்கு வழிவகுக்கும்.
விழிப்புணர்வு: விபத்து காரணமாக ஒருவர் இறந்தால், அவரது வங்கி ஸ்டேட்மெண்ட்டை சரிபார்த்து, சமீபத்திய POS பரிவர்த்தனைகள் உள்ளதா என உறுதி செய்யுங்கள். இருந்தால், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு "டெபிட் கார்டு இன்சூரன்ஸ் க்ளைம் ஃபார்ம்" கேட்டுப் பெறுங்கள்.
அனைத்து கார்டுகளிலும் இல்லை: வாழ்நாள் முழுவதும் இலவசம் (Lifetime Free) என்று வழங்கப்படும் சில கிரெடிட் கார்டுகளில் இந்த விபத்துக் காப்பீட்டு வசதி இருப்பதில்லை. எனவே, ஆண்டுக்கட்டணம் செலுத்தி நல்ல பலன்களைத் தரும் கார்டுகளைப் பெறுவது நல்லது.
பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம்: இதேபோல், பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான க்ளைமும் எளிதாகக் கிடைத்துள்ளது. இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
பல வங்கி அதிகாரிகளுக்கே இதுபற்றி முழுமையாகத் தெரிவதில்லை. எனவே, இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் பகிருங்கள். சரியான நேரத்தில் சரியான தகவலை வழங்குவது ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
பட்டா மற்றும் சிட்டா – அதைப் பற்றிய முழுமையான விளக்கம்.
நமது நாட்டில் நிலம் என்பது மிக முக்கியமான சொத்து. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது, அந்த நிலம் எப்படி பயன்படுகிறது என்பதனைப் பதிவு செய்வதற்காக அரசு சில முக்கிய ஆவணங்களை வழங்குகிறது. அதில் முக்கியமான இரண்டு ஆவணங்கள் தான் பட்டா மற்றும் சிட்டா.
இவை இரண்டும் எதற்கென்ன என்பது பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வோம்.
1. பட்டா (Patta) என்றால் என்ன?
பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையை அரசு அங்கீகரிக்கும் சட்டபூர்வ ஆவணம்.
அதாவது, அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும் முக்கியமான ஆவணம் இது.
பட்டாவில் அடங்கும் தகவல்கள்:
● நில உரிமையாளர் பெயர்
● நிலத்தின் பரப்பளவு (Acre / Sq.ft / Hectare போன்ற அளவுகள்)
● நிலம் அமைந்துள்ள இடம் – கிராமம், வட்டம், மாவட்டம்
● Survey Number மற்றும் Sub-division Number
● நிலம் விற்பனை ஆனால் புதிய உரிமையாளருக்கு பெயர் மாற்றம் செய்யலாம்
பட்டாவின் முக்கியத்துவம்:
● சொத்து உரிமையை சட்டபூர்வமாக நிரூபிக்க உதவும்
● கடன் பெற, வீடு கட்ட அனுமதி பெற, பட்டா முக்கிய ஆவணம்
● அரசு நலத் திட்டங்களில் பயனடைய பயன்படும்
● நீதிமன்றத்தில் உரிமை தொடர்பான வழக்குகளுக்கு ஆதாரமாக இருக்கும்
2. சிட்டா (Chitta) என்றால் என்ன?
சிட்டா என்பது நிலத்தின் வகை மற்றும் வருவாய் விவரங்களை குறிக்கும் ஆவணம். நிலம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது (உழவுக்கா, வீடுகளுக்கா?) என்பதை இதில் பதிவு செய்கின்றனர்.
சிட்டாவில் உள்ள விவரங்கள்:
● நிலம் நன்செய் (Wetland) அல்லது புன்செய் (Dryland)
● நிலத்திற்கு யார் வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பதிவு செய்திருக்கும்
● நிலத்தின் பயன் நிலை – பயனடைகிறதா அல்லது வெறிச்சோடிய நிலமா
● கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படுகிறது
● அரசுக்கு நில வரி செலுத்தும் பதிவுகள் இதில் அடங்கும்
சிட்டாவின் முக்கியத்துவம்:
● நிலத்தின் பயன்பாட்டை தெரிந்து கொள்ள
● நில வரி கணக்கீட்டில் உதவும்
● அரசு திட்டங்களில் நில வகை அடிப்படையில் உதவிக்கான தகுதியைப் பெற
● நில நிலைமையை நிரூபிக்க பயன்படும்
பட்டா மற்றும் சிட்டா இரண்டும் நிலம் தொடர்பான இரண்டு முக்கிய ஆவணங்கள். ஒரு நிலத்தின் உரிமையை நிரூபிக்க பட்டா தேவைப்படும் போது, அந்த நிலம் எப்படி பயனடைகிறது என்பதைப் புரிந்து கொள்ள சிட்டா பயன்படுகிறது. இவை இரண்டும் ஒரே நிலத்திற்காகவே இருந்தாலும், அவை வெவ்வேறு நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
#LandRecords #Patta #Chita
சென்னை பெங்களூரு புதிய expressway ல பல விபத்துகள் தொடர்ந்து ஒரே பகுதில (கோலார்) நடக்குது, இது கார்ல இருப்பவங்களோட பணம், நகை மற்றும் உடமைகளுக்காக திட்டமிட்டு நடத்தப்படுதுன்னு சொல்றாங்க.
அந்த ரோட்ல போறவங்க அந்த பகுதில போகும் போது கவனமா போங்க.
ஒரு ரவுடி பாலியல் தொல்லை தருகிறான் என ஒரு பெண் தன்னை பாதுகாத்து கொள்ள காவல் நிலையம் சென்றால் அந்த பெண்ணின் மீதே PCR ஆக்ட்டில் FIR பதிவு பண்ணுவது எல்லாம் பேரழிவின் உச்சம்டா...
@CMOTamilnadu இதே போன்ற ரவுடிகள் தான் உங்களை அப்பா என அழைக்க முடியும் ஏன் என்றால் உங்கள் ஆட்சியில் ரவுடிகள் சொல்லை தான் உங்கள் காவல் துறை கேட்கிறது... உங்கள் துறையில் நடக்கும் அவலங்கள் ஏதாவது ஒன்று தெரியுமா? இல்லை எதிர்கட்சி தலைவர் @EPSTamilNadu சொல்வது போல பொம்மை ஆட்சி தானா இது?
@MaridhasAnswers