தென் சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் தேங்கும் மழை நீரை வேளச்சேரி வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு கொண்டு சேர்ப்பதில் வீராங்கல் ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, ரூ.5.6 கோடி செலவில் இந்த ஓடை தூர்வாரப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் 1.3 கி.மீ தூரத்துத்துக்கு ��டுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன.
ஓடைக்குள் குப்பைகள் தேங்காமல் இருக்க, 1.6 மீட்டர் அளவுக்கு கம்பி வலைகளும் (Chain Link Mesh)அமைக்கப்பட்டுள்ளன.
தென் சென்னையில் வெள்ளத்தடுப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணி, நிறைவு பெற்றுள்ளதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
சென்னை ஆதம்பாக்கம் கக்கன் பாலம் அருகே 100 HP Motor மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தோம்.
மேலும் ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை பகுதியில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதனையும் ஆய்வு செய்தோம். #NEMonsoon
வடகிழக்குப் பருவமழையால் கனமழை பெய்து வரும் நிலையில், @chennaicorp - மண்டலம் 13 - வார்டு 177 - வேளச்சேரி பகுதியில், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடத்தில் இன���று மாலை ஆய்வு செய்தோம்.
அங்குள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்து, மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க ஆலோசனைகளை வழங்கினோம். #NEMonsoon
வெள்ளத் தடுப்புப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் - அரசு அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டலில் களத்தில் நின்று பணியாற்றிவருகின்றோம்.
நம் அரசு மேற்கொண்�� வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகளின் துணையோடு மக்களுக்கு உறுதுணையாக களத்தில் நின்று பருவமழையை எதிர்கொள்வோம்; மக்களைக் காப்போம்!
#NEMonsoon
கன மழையை எதிர்கொள்ள ஏதுவாக, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, வி.ஆர் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடத்தில் இன்று ஆய்வு செய்தோம். மேலும், அங்குள்ள சமையல் கூடத்துக்குச் சென்று இருப்பில் உள்ள பொருட்களின் விவரங்களைக் கேட்டறிந்தோம்.
நம்முடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக, சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளியில் தற்காலிக தங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வசதிகளை நேரில் ஆய்வு செய்தோம். #ChepaukTriplicane
சென்னை அண்ணா சாலை - ஜி.பி சாலையை இணைக்கின்ற பகுதியில் மழை��ீர் வடிகால் பணிகளையும், மழை நீர் வடிவதற்காக செய்யப்பட்டுள்ள பிற ஏற்பாடுகளையும் நேரில் ஆய்வு செய்தோம். கன மழையை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்.
வடகிழக்குப் பருவமழை நேரத்தில் மக்க���ுக்கு துணை நிற்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் இன்றைய தினம் காலை ஆய்வு செய்தோம்.
Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் பேசினோம். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். #NEMonsoon
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை நுங்கம்பாக்கம், ஜெய்சங்கர் லேன் பகுதியில் மழை தொடர்பான முன்னேற்ப��ட்டுப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். #NEMonsoon
சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடி மதிப்பில் விருகம்பாக்கம் கால்வாயை சீரமைக்கும் பணிகளை அண்மையில் தொடங்கி வைத்திருந்தோம்.
அந்தப்பணிகளை இன்று காலை ஆய்வு செய்து, அதன் தற்போதைய நிலை மற்றும் பணியில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தோ���். #NEMonsoon
கனமழையை அடுத்து சென்னை மேடவாக்கம் ஏரியின் நிலை குறித்து இன்று ஆய்வு செய்தோம். அதிக மழைப்பொழிவால், ஏரியை ஒட்டியுள்ள கரையோர பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ள நிலையில், அவற்றை வெளியேற்றிட ஆலோசனைகளை வழங்கினோம். அங்கிருந்த பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவ��்களுக்குத் துணை நிற்போம் என உறுதியளித்தோம். #NEMonsoon
சென்னை புறநகரில் முக்கியமான இடமாகத் திகழும் மேடவாக்கம் ஜங்ஷன் பகுதியில் மழை தொடர்பாக சற்று முன் ஆய்வு மேற்கொண்டோம். தாழ்வான பகுதிகளில் இருந்து மழை நீரை வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினோம். #NEMonsoon
தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!
சசிகலா மு��ல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிக��சி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து��்ளேன்.
கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!