மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#Tvk #CMJosephVijay #cmijay #thamilanragulgandhi #vijay
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @tvkvijayhq அவர்களின் ஆசியுடன்
மாண்புமிகு பொதுச்செயலாளர் எங்கள் ஆசான் @bussyanandoffl வழிகாட்டுதலின்படி, அன்புமிகு மாண்புமிகு அண்ணன் @rajmohanofficial அவர்களின் ஆலோசனைப்படி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் அன்புமிகு சட்டமன்ற உறுப்பினர் @polur_tvk_family___ @abishektvk அவர்களுடன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
சேத்துப்பட்டு ஒன்றியம் மற்றும் ஒட்டுமொத்த திருவண்ணாமலை வடமேற்கு மாவட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி 🙏🏻
#tvkvijay #tvkpolur #tvktamilanragulgandhi #tvkspeakertamilanragulgandhi #tvkthiruvannamalai
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு வழிகாட்டுதலில், நமது மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட, பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.09.2026) காலை நடைபெற்ற “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட” விரிவாக்கத் தொடக்க விழாவில் நேரில் கலந்துகொண்டேன்.
மாணவக் கண்மணிகளுக்குச் சத்தான காலை உணவினைப் பரிமாறியதோடு மட்டுமல்லாமல், அவர்களோடு அமர்ந்து அன்போடு உண்டு மகிழ்ந்தேன். குழந்தைகளின் புன்னகையும் மகிழ்ச்சியுமே நமது மக்கள் ஆட்சியின் உண்மையான வெற்றி!
@CMOTamilnadu | @VijayAnbanMLA@TVKITWingMaduri | @BussyAnand
#KamarajarBreakfastScheme #CMJosephVijay #StudentsWelfare #PandianNedunchezhianSchool
#மதுரைவடக்கு #தமிழகவெற்றிக்கழகம்
அய்யா @mkstalin ஏற்கெனவே இதே மாதிரியான கையெழுத்து நாடகத்தை அரங்கேற்றிய ஒரு நடிகர் @Udhaystalin உங்கள் வீட்டிலேயே இருக்கிறார். அவருடைய அனுபவத்தையும், நடிப்புத் திறமையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். முடிந்தால், இந்தக் கையெழுத்து நாடகத்திற்கான திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் அவரிடமே ஒப்படைத்துவிடுங்கள்.
அரசியலில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைவிட, கையெழுத்து போடுவது, அதைச் சுற்றி ஒரு நிகழ்ச்சியை நடத்துவது, அதற்குப் பிரம்மாண்டமான விளம்பரம் செய்வது என நாடகங்கள் தொடர்கின்றன.
மக்களுக்கான அரசியல் என்பது மேடையில் நடிக்கும் நாடகமாக இல்லாமல், களத்தில் செயல்படும் செயலாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே மேடை மாறினாலும், நடிகர்கள் மாறினாலும், நாடகத்தின் பாணி மட்டும் மாறுவதில்லை.
ஏற்கெனவே உங்கள் வீட்டில் இதுபோன்ற ஒரு நாடகத்தை வெற்றிகரமாக நடத்தியவர் இருக்கும்போது, அவரிடம் ஆலோசனை பெறுவதில் என்ன தயக்கம்?
மேடைதோறும் நாடகம் தொடரட்டும். மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! 🎭
#TVK #TamilNaduPolitics #PoliticalDrama #TamilPolitics
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டது.
அப்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
-
The Kumbabhishekam of the world renowned Arulmigu Meenakshi Sundareswarar Temple in Madurai was conducted in a grand and magnificent manner on the 17th September 2026, after a gap of 17 years, and was widely appreciated by people.
Today, the sacred prasadam from the Madurai Meenakshi Sundareswarar Temple Kumbabhishekam was personally presented to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay.
On the occasion, the Hon’ble Chief Minister conveyed his greetings and appreciation for the successful and grand conduct of the Kumbabhishekam.
@CMOTamilnadu | @TVKVijayHQ
விஜய்சேதுபதிக்கு சம்பளம் குடுத்துருக்காங்க.! வாங்குன பணத்துக்கு அவர் வேலை பார்த்திருக்காரு.? - தவெக மாநில வலைதள செய்தித் தொடர்பாளர் தமிழன் ராகுல்காந்தி பதில்.
| Latest interview of TVK social media spokeperson Tamilan Ragul Gandhi |
#Tvk#Cmvijay#Vijaysethupathi#TvkvsDmk #tamilanragulgandhi
இன்று (19.09.2026), மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற CII – Indian Women Network (IWN) vividha Health & Wellness conclave நிகழ்ச்சியில் பெண்களின் திறமை, தொழில் முனைவுத்திறன் மற்றும் பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட போது.
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?
பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இந்நாள் இரசிகர்.
கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?
மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?
அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப் புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?
Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்!
“ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழாவின் சிறப்பையும், அதன் மகத்துவத்தையும் பாராட்டி செய்தி வெளியிட்ட அனைத்து செய்தித்தாள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt thanks to all newspapers and media friends who appreciated and highlighted the grandeur and significance of the Thirukudamuzhukku ceremony of the Arulmigu Meenakshi Sundareswarar Temple, Madurai.
@CMOTamilnadu | @TVKVijayHQ