பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய
திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
Heartfelt Condolences to Shri Ajith Kumar Garu and Family
I am deeply saddened to learn about the passing of Smt. Mohini Mani Garu, beloved mother of renowned actor Shri Ajith Kumar Garu.
I pray that her soul attains eternal peace. May Shri Ajith Kumar Garu find the strength to overcome this profound loss .
I extend my heartfelt condolences to him and his family.
- @PawanKalyan@PIB_India@IPR_AP@pibvijayawada@pibchennai
அன்பு சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் மனவருத்தத்தையும் அளிக்கிறது.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாயின் இடம் என்பது எந்த உறவாலும், எந்த சாதனையாலும், எந்த வெற்றியாலும் ஈடு செய்ய முடியாதது. நாம் முதன்முதலில் உலகை அறிந்ததும் தாயின் கண்களில்தான்; அன்பை உணர்ந்ததும் தாயின் அரவணைப்பில்தான்.
பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பெருமையுடன் கண்டு மகிழ்ந்த அந்த அன்னையின் பிரிவு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரிழப்பு.
இந்தத் துயரமான நேரத்தில், தாயாருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற நினைவுகளே சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு ஆறுதலாகவும் மனவலிமையாகவும் அமையட்டும்.
அன்னையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— D.ஜெயக்குமார்
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இந்திய கார் பந்தய வீரருமான திரு. அஜித்குமார் அவர்களது தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தாயாரை இழந்து வாடும் திரு. அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி..!
இன்றைய தினம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Deeply saddened to hear about the passing of Smt. Mohini Mani Iyer, mother of actor Ajith Kumar. My heartfelt condolences to Shri. Ajith Kumar and his family during this time of immense grief. May her soul rest in peace. 🙏
#AjithKumar#Condolences
அன்புச் சகோதரர் திரு. அஜித் குமார் அவர்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தாயை இழக்கும் துயரம் ஈடு செய்ய முடியாதது; ஒரு மகனின் வாழ்வின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் ஊக்கசக்தி அன்னையின் ஆசிகளே.
வாழ்வின் சிகரங்களைத் தொட்ட உங்களைப் பார்த்து உங்கள் தாயார் பெருமைப்பட்ட தருணங்கள், உங்கள் இதயத்தில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். பிரிவின் துயர் பெரிது என்றாலும், அன்னையின் நற்பண்புகளும் அவர் உங்களுக்கு ஊட்டிய துணிச்சலுமே இந்த சோதனையான காலக்கட்டத்தில் உங்களை தாங்கிப் பிடிக்கும்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வரவும், தாயாரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன். எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ajithkumar
அன்புச் சகோதரர் நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள தனது பெற்றோரின் நினைவாக திரு.அஜித்குமார் அவர்கள் நிறுவிய மோகினி-மணி அறக்கட்டளை (Mohini-Mani Foundation) என்ற அமைப்பு வாயிலாக என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கட்டும்.
அம்மையாரை பிரிந்து வேதனையில் வாடும் திரு.அஜித்குமார் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ரா.சரத்குமார்
ராதிகா சரத்குமார்
- he retired from tests in the middle of the series surprisingly & announced Virat Kohli as permanent captain.
- he announced his white ball retirement unexpectedly when everyone were trying Dalgona Coffee at home during covid
Expect the same for IPL, he is available since last few games & still not coming to the ground to not disturb the XI & not to take any limelight away from youngsters.
One fine day, you will see a retirement post or press conference from him this season, prepare yourself for that!
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial