அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
📌தொடர் மின் வெட்டு
📌 சட்டம் ஒழுங்கு சீர்கேடு
📌 பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக பெருகும் பாலியல் வன்முறைகள்
📌#TVK நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டங்கள்
தேர்தலுக்கு முன் “தூய சக்தி… தூய சக்தி” என்று கூவிய @TVKVijayHQ, தூய சக்தி அல்ல துயரசக்தி!
#வாயை_திறங்க_CM
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
என் தலைமகனே ...
என் தலையாயவனே ...
என் தோழனே...
என் ஏழு ஜென்மத்துக்கும் ஆன முதல் மற்றும் மொத்த சந்தோஷமானவனே ...
நான் அடையா தூரம் நீ அடைவாய் வெகு விரைவில்... Thala Kabi Vaigai பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகனே ... Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Avadi_Nasar அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அமைச்சரவையில் சிறப்பாகப் பங்காற்றிய அண்ணன் நாசர் அவர்களின் மக்கள் பணி தொடர்ந்திட மீண்டும் அவரை சட்டமன்றத்திற்கு அனுப்பிட வேண்டுமென ஆவடி தொகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாட்டை தலைகுனிய விடாமல் காக்க வெல்வோம் 200, படைப்போம் வரலாறு!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
விடியல் ஆட்சி தொடர, விண்ணதிர ஆதரவு தந்த விழுப்புரம் மக்கள்
நமது அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாமல், திராவிட மாடல் ஆட்சியில் குறைசொல்லவும் முடியாமல் அடுத்தவர்களின் மரணங்களைப் பற்றிக் கனவு காணத் தொடங்கியிருக்கிறார் பத்து தோல்வி பழனிசாமி!
ஆனால் அவர் வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்துகிறேன். நான் தி.மு.க. தலைவராகி, அவரது துணையால் இதுவரை தோற்றதே இல்லை. பழனிசாமி அ.தி.மு.க.வுக்குப் பொறுப்பேற்ற பின் அக்கட்சி வென்றதே இல்லை.
மிசா கொடுஞ்சிறையானாலும், கொரோனாவானும் மரணத்தைக் கண்டு அஞ்சும் கோழையல்ல ஸ்டாலின்! எதையும் எதிர்கொள்ளும் கலைஞரின் வார்ப்பு நான்!
என் வருத்தமெல்லாம் ஒன்றுதான்...
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனக் கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட பெருந்தலைவர்களோடு நேரில் பழகி, அரசியல் பயின்ற நான், இந்த தரங்கெட்ட மரண வியாபாரியோடு அரசியல் செய்யும் காலமாக இது இருக்கிறதே...
#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
Morning ride in Chennai Metro: சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன்.
மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்...
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளரான அன்புச் சகோதரர் @PrabhakarRaja88 அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
முரட்டு அடிமைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டு தமிழ்நாட்டை அபகரிக்க முயலும் பாசிச சக்திகளின் சதிகளையும்,அவற்றை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினோம்.
மதவாதிகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான ஆட்சி தொடர கழக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.
#DMK4TN #VoteForTN
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான எழும்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளரான அன்பு சகோதரர் @PrasannaTamilan-விற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டோம்.
சமூக நீதி கொள்கையை அடிப்படையாக கொண்டு திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்திட கழக கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டோம்.
தமிழ்நாட்டின் DNA வை மாற்றத்துடிக்கும் NDA வை வீழ்த்தி தமிழ்நாட்டின் தனித்துவத்தை பாதுகாப்போம்!
வெல்வோம் ஒன்றாக.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
சென்னை, தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் - இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்புச் சகோதரர் @raja_anbazhagan அவர்களுக்கு இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
ஒன்றிய அரசு நிதி நெருக்கடி கொடுத்தபோதும் இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் திராவிட மாடல் முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தோம்.
இதுவரை பாதம் தாங்கி பழனிசாமியாக இருந்து தற்போது ‘பால்டாயில்’ பழனிசாமியாக Promote ஆகி இருக்கும் டெல்லியின் முரட்டு அடிமைகளை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
ஆதிக்கத்தை வீழ்த்தி,அடிமைகளை விரட்டுவோம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து Remote Control-ல் இயக்க துடிக்கும் பாசிஸ்டுகளையும் அதற்குத் துணை போகும் முரட்டு அடிமைகளையும் அம்பலப்படுத்தி, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் மருத்துவர் @Dr_Ezhilan அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டோம்.
5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் செய்த சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறினோம்.
ஆயிரம் விளக்கு தொகுதி தொடர்ந்து ஒளிமயமாகத் திகழ்ந்திட கழகத்தின் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்