பச்சைப்புள்ளங்க, படிக்கிற புள்ளங்க, சின்ன பொண்ணுங்க, வீட்ல இருக்க பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்கன்னு இவங்க எல்லோருக்கும் நடக்குற கொடுமைய சொல்ல முடியல CM சார்...
இந்த வார்த்தைகள் எல்லாம் ஞாபகம் இருக்கா CM சார்... ஆட்சி என்பது வசனம் பேசிவிட்டு ஷூட்டிங் முடிந்தது என்று போகும் விஷயமல்ல.
உறுதியான நடவடிக்கைகளை எடுத்து சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி பெண்களுக்கு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.
#TVKFails
வாயை திறந்து பேசுங்க விஜய் சார்!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு தினமும் படுகொலை, பாலியல் வன்முறைகள் நடக்கிறது.
மின்வெட்டு பிரச்சனையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா அரசு மேகதாது பிரச்சனையை பேசி வருகிறது.
இவை எதற்கும் நடவடிக்கை எடுக்காமல், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் வெறும் டம்மி முதலமைச்சராக இருக்காதீர்கள் CM சார்.
#TVKVijayFails
கடந்த 5 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த வின்ஸ்டார் சிவக்குமார் தவெகவில் நிதி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்துள்ளார்!
அடடே.. என்ன ஒரு மாற்றம்!
#TVKFails
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
#CMJosephVijay
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா?
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது!
தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும்.
#TVKFails
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
MKS Era – TN Breaking Records 🚀
Tamil Nadu records 10.83% growth,
2nd straight year in double digits; beats national average!
#CMMKStalin#TNEconomicGrowth
வறுமை ஒழிப்பில் முதலிடம்.
தேசிய சராசரி 72 புள்ளிகளாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு 92 புள்ளிகளைப் பெற்று வறுமை ஒழிப்பில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இது வெற்று விளம்பரமல்ல, திராவிட மாடல் ஆட்சியின் வியத்தகு வளர்ச்சி!
#VoteForDMK
நியாயத்துக்காக குரல் கொடுத்த மக்களுக்கு துப்பாக்கிச் சூட்டில் பதிலளித்த கொடூரம்! அதை டிவியில் ரசித்த பழனிச்சாமி!
இந்த வேதனையை தமிழ்நாடு மறக்காது!
#AdmkFails