15 ஆண்டுகளாக தடுக்கப்பட்டிருந்த கோவை அண்ணா நகர் பேருந்து சேவை இன்று மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
இது ஒரு பேருந்தின் வருகை அல்ல, 15 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நீதியின் வருகை.
தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலிலும், சமூக நீதி துறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களின் செயல்பாட்டிலும் இன்னும் பல சமூகநீதி முன்னெடுப்புகள் நடைபெறும்.
சிலர் எங்கள் அரசியல் முடிவுகளை விமர்சிக்கலாம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனையும் சமூகநீதியையும் மையமாக வைத்தே இருக்கும்.
விமர்சனங்களை விட செயல்பாடுகளே பேசும்.
மக்களுக்காக...
சமூகநீதிக்காக...
விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் களத்தில் நிற்கும்! ✊🏾🩵❤️
தலைவர் திருமா காட்டும் பாதை — சமூகநீதியின் பாதை." 🔥💯
#tholthirumvalavan #vck #CoimbatoreNews #TNGovt #TNPolitics
@VckBalaji@poomaa_Official@velichamtvtamil@thirumaofficial எங்கள் அண்ணன் இரத்தம் சிந்தி ஊர் ஊராக போய் சேமித்து தனது சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டது.அப்போது தனது தந்தை அவ்வளவு குடும்ப கஷ்டத்திலும் 1 பவுன் நகையை அண்ணன் திருமாக்கு கொடுத்தார்.அதுப்போல ஒவ்வொரு சிறுத்தையும் தன்னால் இயன்றைத்தை கொடுத்து உருவாக்கப்பட்டது அந்ததொலைக்காட்சி.
“வெளிச்சம் தொலைக்காட்சி” @velichamtvtamil தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் ஊர் ஊராக அலைந்து திரிந்து ஓய்வின்றி ஊன் உறக்கமின்றி விடுதலைச்சிறுத்தைகளின் இலட்சோப இலட்சம் தொண்டர்களின் பங்களிப்பை திரட்டி உருவாக்கியது.
திருப்பரங்குன்றம் தீபம் - மதவாத Fringe Elements-ஐ அரசு புறந்தள்ள வேண்டும்!
'பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ன சூழ்நிலை நிலவியதோ அது தொடர வேண்டும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள். இது தான் அரசின் கொள்கை. இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. எந்த மதவாத சக்தியும் உள்ளே நுழைந்து அரசியல் செய்வதற்கு நூறு சதவீதம் அனுமதிக்க மாட்டோம்'
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சருமான திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள் நேற்று (07.06.26) மதுரை செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ' என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு கடந்த ஜூன் 4ஆம் தேதி கேள்வி எழுப்பி உள்ளது.
மக்கள் தொகையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள பிறப்படுத்தப்பட்ட இந்து மக்களின் சமூக - கல்வி - பொருளாதார மேம்பாட்டை முன்னிறுத்தி அவர்களின் வாழ்வாதார போராட்டங்களிலும், அவர்களுக்கு மறுக்கப்படும் சமூகநீதியை உறுதி செய்வதிலும் எந்தக் காலத்திலும் அக்கறை காட்டாத பாஜக - சங்க பரிவார் அமைப்புகள், தங்கள் மதவாத அரசியலுக்கு மட்டும் ' இந்து ' என்ற பெயரில் அவர்களை அணிதிரட்ட முயன்று வருகின்றனர்.
சனாதனிகளின் இந்த சதியை - ஏமாற்று வேலையை நன்கு அறிந்த திருப்பரங்குன்றம் மக்கள், இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் கொள்கை நிலைப்பாட்டுக்கு மாறாக பாஜகவின் குரலாக பேசிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தலில் தக்க பதிலடி தந்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடித்துவிட்டோம் என்று வட இந்தியாவில் பெரும் மதவாத அரசியலை முன்னெடுத்த பாஜகவை, அதே அயோத்தி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் படுதோல்வி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அங்கு சமாஜ்வாதி கட்சியின் முன்னணி தலித் தலைவர்களில் ஒருவரான திரு. அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். இத்தகைய பதிலை தான் தமிழ்நாட்டில் மதவாத பிளவுவாத அரசியலை முன்னெடுத்த பாஜக அணிக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களால் புறந்தள்ளபட்ட 'Fringe Elements'-ஐ நமது தமிழ்நாடு அரசும் அவ்வாறே அணுக வேண்டும். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் நடைமுறையை தொடருவதற்கான சட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். மதவாத சக்திகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருப்போம்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
07.06.2026
@CMOTamilnadu@thirumaofficial@CTR_Nirmalkumar
மதுரையில் சர்வதேச சமண மையமும் , காஞ்சியில் பன்னாட்டு பௌத்த மையமும் அமைக்கப்பட வேண்டுமென சட்டப்பேரவையில் கடந்தாண்டு நான் முன் வைத்த கோரிக்கையை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு அவ்வாறே மதுரையில் சமண மையமும்,
காஞ்சியில் பௌத்த மையமும் அமைக்கப்படுமென உறுதியளித்து பேரவையில் அறிவிப்பாகவும் வெளியிடப்பட்டது.
இன்று தேனியில் தோழர் எலியாசு ராஜாவின் தம்பி புஷ்பராஜ் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்ற நான்,
மதுரை திரும்பி வருகிற போது, எண்பெரும் குன்றம் என அழைக்கப்படுகிற மதுரை மண்ணிலே சமண அடையாளங்கள் மிகுதியாக காணப்படுகிற கீழக்குயில்குடி என்கிற கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளுக்கு தோழர்களுடன் சென்றேன்.
நாகமலை புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கீழக்குயில்குடி கிராமத்தை ஒட்டிய மலை குன்றுகளில் திரும்பிய திசைகளெல்லாம் சமண அடையாளங்கள் புடைப்பு சிற்பங்களாக காணக்கிடைக்கின்றன.
மொத்த மதுரையுமே ஒரு காலத்தில் மாபெரும் சமண மையமாக திகழ்ந்திருப்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
எங்களுக்கு வழிகாட்ட பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் தன் மகன் புத்தமித்திரனுடன் வந்திருந்தார்.
என்னுடன் தோழர் அதிவீரபாண்டியன், தோழர் தமிழ்நிலவன், கீழக்குயிலக்குடி கிராமத்தை சேர்ந்த தம்பி சதீஷ் மற்றும் அவரது சகோதரர் ஆகச்சிறந்த சிற்பக்கலைஞர் சரண்ராஜ், வெற்றி வளவன், ஆதவன், சரவணன், முத்தரசன் மற்றும் பெரியகுளம் மாவட்டச்செயலாளர் சுசி தமிழ்ப்பாண்டியன் அவர்களும், தோழர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இறுதியில் தோழர் கு கா பாவலன் அவர்களும் மகன் தொல்காப்பியனுடன் இணைந்து கொண்டார். தோழர் தமிழ்நிலவனின் மகன்கள் புனிதனும், எழிலரசனும் எங்களுக்கு பேருதவியாக இருந்தனர்.
மறக்கமுடியாத பண்பாட்டுப்பயணம்.
கோட்டக்குப்பம் மீனவர் தலித் இடையேயான பிரச்சனையில் களத்தில் அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்.!
தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளின் போது களத்திற்கெல்லாம் வருவார்களா??? வந்ததே கிடையாது என்பது தான் உன்மை..
முதன் முறையாக நடக்காது என்று நினைத்து எல்லாம் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது..
எல்லா பிரச்சனைகளுக்கும் சமூக நீதித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து தீர்வு கொண்டு வருவது விசிகவின் அதிகாரப்பகிர்வு என்பது சரியானதே என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது..
"யாருடன் கூட்டு சேர்ந்து அதிகாரத்தை பகிர்வது என்று விமர்சிப்போரின் கவனத்திற்கு""
@VanniTamizhVCK
#மீட்பர்_திருமா #திருமா_காலம்
#ambedkar #vckitwing #cmvijay #vijaythalapathy #reservation #Thirumavalavan
கிடங்கல் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் வன்னியரசு ஆய்வு..
பல ஆண்டுகளாக கிடங்கல் பகுதியில் வசிப்பதால் வீடுகளுக்கு பட்டா வழங்க மக்கள் கோரிக்கை!
#VCK | #VanniArasu | #Tindivanam | #PolimerNews
@MaduraiSBala திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் வெளியேறலாம்,
திமுக பாஜகவை ஆதரிக்கலாம் அப்புறம் ஆட்சியை கவிழ்க்கலாம்...
இதெல்லாம் அரசியல்.
ஆனால் திருமாவளவன் அரசியல் செய்தால் அது பச்சோந்தி அரசியல்.
என்னடா உங்க டேஷ் தனம்.
@savi_vck உங்க அக்கறைக்கு நன்றிங்க...
முதலில்
விசிக தலித் கட்சி இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.
அப்பறம் இன்னொன்னு விசிக ஒன்னும் தேஞ்சு போகல.
அதன் வளர்ச்சி இனிதான்....
இது தான் இந்த வெட்கங்கெட்டவனுங்க பேசுற தமிழ் தேசியம், அந்த பொருக்கி கேரளா காரன் ஆனா போலி தமிழ் தேசியம் பேசுற நாய்ங்க அவன் சிறுத்தை கட்சினு பரப்பி விடுறானுங்க அத திமுகவில் உள்ள சில சாதி வெறியனுங்களும் சங்கி மாங்காக்களும் கூட சேர்ந்து பரப்பி விடுறானுங்க..
ஆனா ஒன்று இதே போல ஈனத்தனமான செயலை சிறுத்தைகள் ஒரு போதும் செய்யமாட்டார்கள் என்பது மக்களுக்கு தெரியும்...
@farooki36314679@niranjan2428@rajarajachoza உன்னை அசிங்க அசிங்கமா திட்டிடப் போறேன். அது என்ன தலித் புள்ளிங்கோ? வேற எந்த சாதியிலும் புள்ளிங்கோ ஸ்டைலில் இல்லையா? ஏன்டா இப்படி சாதிவெறி ஊறிப்போ திரியுறீங்க?
@annamalai_k நீங்கள் தனியாக இயக்கம், தனியாக கட்சி ஆரம்பியுங்கள், அதிகாரத்தை கைப்பற்றுங்கள்,இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம்.
ஆனால் ஒருபோதும் மதவாத அரசியலை செய்து விடாதீர்கள்.
தமிழ்நாடு மட்டும்தான் இங்கே தப்பி இருக்கிறது.