தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், பிறந்தநாளை அரசு விழாவாகவும் அறிவித்து பெருமைப்படுத்தியது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு ..
@Udhaystalin
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி-சிறந்த நாடாளுமன்றவாதி முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு. முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழைப் போற்றுவோம்...
நம் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த தியாகிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்.
சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய உயரிய மதிப்புகளை காத்து, ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.
அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
#IndependenceDay
ஓய்வில்லாமல் உழைத்த உத்தமத் தலைவர்
#முத்தமிழறிஞர்_கலைஞர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு நாள்...
தமிழ் உள்ளவரை நீ வாழ்வாய் !
தமிழர் நெஞ்சத்தை என்றும் நீ ஆள்வாய்!
உன் புகழ் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்...
#KalaignarForever
காவேரி நீரை பெற எந்த முயற்சியையும் எடுக்காத தவெக அரசு, எதிர்கட்சித் தலைவரை கைது செய்ய இவ்வளவு முனைப்பா?
நாளை சட்டமன்றத்தில் அண்ணன் @Udhaystalin அவர்களை நேரில் சந்திக்க திராணியற்ற ஆளும் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது...
"மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்."
நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டுகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அப்பா! ❤️
தாய் மண்ணுக்கு தலைமகன் #பேரறிஞர்_அண்ணா அவர்கள் #தமிழ்நாடு என்று சட்டப்பேரவையில் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு வாழ்க! என முழக்கமிட்ட நாள் இன்று(18-07-1967)
#தமிழ்நாடு_நாள்
ஜூலை-15
கல்வி வளர்ச்சி நாள் கல்விக்கண் திறந்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களது பிறந்தநாளான இன்று அன்னாரின் புகழைப் போற்றுவோம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும்,தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக பீரங்கிக்கு உடலை சிதறக்கொடுத்து விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த கட்டாலன்குளத்து காவிய நாயகன் முதல் சுதந்திரப் போராட்ட மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் போற்றி வணங்குவோம்...
மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்கிற தடைக்கல்லை உடைத்தெறிந்த, அண்ணாமலை பல்கலைக்கழகமும்,இந்து அறநிலையத்துறை அமைந்திடவும் காரணமாக அமைந்த
நீதிக்கட்சியின் தலைவரும் - சென்னை மாகாண முதலமைச்சராக பதவி வகித்த பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள்...
கழக இளைஞர் அணி செயலாளராக எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர்- கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களின் பயணம் தொடர்ந்திட இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்...
@dmk_youthwing
இன்று பிறந்தநாள் காணும் @MedicalwingDMK மாநில செயலாளர் பாசமிகு சகோதரர் @Dr_Ezhilan அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...மக்கள் நலப்பணியில் தங்களின் அர்ப்பணிப்பு மேலும் சிறக்க,கழக மருத்துவ அணியை சிறப்பாக வழிநடத்தும் அண்ணன் அவர்கள் வாழிய நீடுழி...
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"
கலைஞர் உரை : ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும் பேறு" என்று பிறரால் புகழப்படுமாறு ஒரு மகன் நடந்து கொள்வதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்...
#FathersDaySpecial
உன் பேனா முனை தலைகுனியும் போது எல்லாம் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது...தமிழ் இருக்கும் வரை, கலைஞரின் பெயரும் புகழும் வாழும்..நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குவோம்.
#Kalaignar103#KalaignarForever#HBDKalaignar103