ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
கடந்த 50 நாட்களாக தினமும் இரவில் மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டுத் துறை அமைச்சர், இதற்கு காரணம் சொல்கிறேன் என்ற பெயரில் ரீல்ஸ் அமைச்சரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வீக்கெண்ட்டுக்கு தன்னை அட்மிட் செய்ய எந்த பொய்யோடு வருகிறார் என்று பார்ப்போம்!
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் ட்ரோன் காட்சி.
காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#Wayanad#landslide#Kerala#PettiKadaiMedia
இந்திய துணைக்கண்டத்தின் ஜனநாயக வரலாற்றில், முதல் சமத்துவ - சமூகநீதி ஆட்சியைத் தந்த பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
நாட்டிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளித்ததில் தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ‘ஆதிதிராவிடர்’ என்னும் பண்பாட்டுப் பெயரை வழங்கும் சட்டம்; அனைத்து சாதி மக்களுக்கும் வழிபாட்டு உரிமையை மீட்டளித்த அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்; கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் சட்ட மசோதா; சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு என நீதிக்கட்சி முதல்வராக இருந்து அவர் ஆற்றிய பணிகளே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதல் படியாக அமைந்தன.
அவர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்.
"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!
நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!
#PanagalRaja
இன்று (28-06-2026) சென்னை, வானகரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாற்றுக் கட்சியினர் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களைத் தி.மு.க.-வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம்:
தாய்க் கழகமாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகிழ்ச்சியோடு, உறுதியோடு, உற்சாகத்தோடு வந்து இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் முதலில் வருக வருக என நான் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தலைமைக் கழகத்தின் சார்பில் தலைமைத் தொண்டனாக உங்கள் அனைவரையும் நான் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து, பவள விழா கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். ஒரு முறை, இரண்டு முறை அல்ல; ஆறு முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, அனைத்து வகைகளிலும் இந்த மாநிலத்தை வளர்த்தெடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியான முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், அரை நூற்றாண்டு காலம் தாங்கிப் பிடித்த தனிப்பெரும் இயக்கத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள்.
அதுமட்டுமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்த கழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதுமட்டுமா, அவர் பொருளாளராக இருந்து செயல்பட்ட இயக்கத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் அவர் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தனிக்கட்சி கண்ட பிறகும், தலைவர் கலைஞர் அவர்களைச் சட்டமன்றத்தில் ஒருவர் பேரைக் குறிப்பிட்டுப் பேசியபோது, அன்றைக்கு சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள், அதைக் கண்டித்தார். என்ன சொல்லிக் கண்டித்தார் தெரியுமா, “உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்; ஆனால் எனக்குத் தலைவர் கலைஞர்தான்” என்று சொல்லி, அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொன்னார். இது வரலாறு!
எனக்கு என்ன பெருமை என்றால், நான் பள்ளிக்கூடத்தில் மாணவனாக படித்துக் கொண்டிருந்தபோது, சென்னை – சைதாப்பேட்டைப் பகுதியில், ஒரு பிரசார நாடகம் நடத்தினேன். அந்த நாடகத்திற்கு யார் தலைமை என்றால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அவரே நேரடியாக அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். அவருக்கு ஒரு சேர் போட்டு உட்கார வைத்தோம். ஆனால், அந்தச் சேரை எடுத்துவிட்டு, தரையில் உட்கார்ந்து அந்த நாடகத்தைப் பார்த்தார். ஏன் என்றால், பின்னால் உட்கார்ந்திருப்பவர்களுக்கு தெரியாது என்று சேரை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, தரையில் உட்கார்ந்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த நாடகத்தைப் பார்த்தார் என்பது வரலாறு!
அன்று நான் ஒரு சாதாரணத் தொண்டனாக - இளைஞனாக இருந்தேன்; இன்று அதே இயக்கத்தின் தலைமைத் தொண்டனாக இருந்து, உங்கள் அனைவரையும் வருக வருக வருக என வரவேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
நம்முடைய முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அவர்களை, நீண்ட காலமாக நான் கவனித்து வருகிறேன். அவருடைய உழைப்பைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அ.தி.மு.க.வில் இணைந்து பல ஆண்டுகள் உண்மையாக உழைத்தவர்; ஓயாமல் உழைத்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அஞ்சாமல் உழைத்தவர்; வேகத்தோடும், விவேகத்தோடும் உழைத்தவர்.
வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளராக, சென்னை 145-ஆவது வார்டின் மாமன்ற உறுப்பினராக, மாநகராட்சியின் துணை மேயராகப் படிப்படியாக உயர்ந்து, சென்னை மாநகரம் முழுவதும் அறிமுகமானவர். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் வென்று, ஊரகத் தொழில் துறை அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். அவர் அமைச்சராக இருந்தபோது, நான் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தேன். நாங்கள் கேள்விகள் கேட்கிற நேரத்தில், பல அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பென்ஜமின் அவர்கள் பதில் சொல்கிறார் என்று சொன்னால், நாங்கள் கொஞ்சம் உஷாராக இருப்போம். ஏன் என்றால், புள்ளி விவரத்தோடு, ஆதாரங்களோடு எதையும் ஆணித்தரமாக அழுத்தமாக எடுத்துச் சொல்லக் கூடியவர். அந்த இளைஞர் சட்டமன்றத்தில் அமைச்சராக இருந்து பதில் சொல்வதை நாங்கள் ரசித்ததுண்டு.
இப்படிப்பட்ட உழைப்பிற்கும் அனுபவத்திற்கும் சொந்தக்காரரான நம்முடைய அருமைச் சகோதரர் பென்ஜமின் அவர்கள் கழகத்தை நோக்கி வந்திருப்பதில், உங்களை எல்லாம் விட நான் அதிக அளவில் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். அவர் ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, முறையாக உறுப்பினராகப் பதிவு செய்து, என்னைப் போன்ற நம்முடைய முன்னோடிகள் முன்னிலையில் வந்து சேர்ந்திருந்தாலும், இன்றைக்கு இந்த வட்டாரத்தில் இருக்கும் தோழர்களை, தாய்மார்களை, சகோதரர்களை - சகோதரிகளை, இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, கழகத்தில் இணையும் நிகழ்ச்சியாக, ஒரு மாபெரும் விழாவாக, இந்த வட்டாரத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் பதிவாக இருக்கும் ஒரு நிகழ்ச்சியாக இதை நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்காக நான் மீண்டும் மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில், இந்த மாவட்டக் கழகத்தின் சார்பில், என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை பென்ஜமின் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
பொதுவாக, ஒரு தேர்தல் முடிந்தவுடன், வெற்றி பெற்ற இயக்கத்தை நோக்கி நிறைய பேர் சேர்வார்கள். எதிர்க்கட்சியில் இருந்து விலகி, ஆளுங்கட்சிக்குத்தான் நிறைய பேர் சென்று சேர்வார்கள். ஆனால் இங்கு என்ன என்றால், எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பதவிக்காக அல்ல; பவுசுக்காக அல்ல; பொறுப்புக்காக அல்ல; நீங்கள் எல்லாம் "கொள்கைதான் முக்கியம்" என்று உணர்வோடு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அதுதான் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம்.
திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக இருந்தால்தான், தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நம்பி இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தத் துறையை எடுத்தாலும், இதுவரை தமிழ்நாடு கண்டிராத வளர்ச்சியை, நம்முடைய தமிழ்நாடு பார்த்தது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாட்டை நாம் உயர்த்தினோம். 'தினமும் ஒரு திட்டம்' என்று சொல்லத்தக்க வகையில் திட்டங்களை உருவாக்கினோம். அனைத்துத் தரப்பு மக்களையும் நாம் கவரும் வகையில் திட்டங்கள் தீட்டினோம். திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்தன.
நமது ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கையால்தான், தமிழ்நாட்டை நோக்கிப் பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்தன; தொழில் தொடங்கினார்கள். அதுமட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புகள் பெருகியது. அண்டை மாநிலங்களில் ஆட்சி செய்யும், அரசியல் ரீதியாக நமக்கு எதிரணியில் இருக்கும் தலைவர்கள் கூட இதனை வெளிப்படையாகப் பாராட்டினார்கள்; சில பேர் பொறாமைப் பட்டார்கள்.
ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரே மாதத்திற்குள்ளேயே, தமிழ்நாடு இன்றைக்கு அதலபாதாளத்திற்குப் போகும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் இந்தப் புதிய ஆட்சியை நம்பித் தமிழ்நாட்டுக்கு வரத் பயப்படுகிறார்கள், தயங்குகிறார்கள்; அதனால், வேறு மாநிலங்களுக்குப் சென்று கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம், சட்டம்-ஒழுங்கைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பாலியல் கொடுமைகள், போதை மருந்து நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டுகள், கொள்ளைகள் மற்றும் அராஜகங்கள் – டி.வி.யை பார்த்தாலே, பேப்பரைப் படித்தாலே இந்தச் செய்திகள்தான் நம் கண்களில் படுகின்றன. அதிலும் குறிப்பாக, நிறைய குற்றங்களில் ஆளுங்கட்சிக்காரர்களே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் வேதனை!
இன்னொரு பக்கத்தில், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் எனப் பல்வேறு பிரச்சினைகள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், “டேக் டைவர்ஷன்” என்று திசைதிருப்பும் வேலைகளில் இந்த ஆட்சியாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர, இவர்களுடைய இந்த டெக்னிக் மக்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது. இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தவறு செய்துவிட்டோம். வாக்களித்தவர்களும் கஷ்டப்படுகிறார்கள்; வாக்களிக்காதவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களே தன்னெழுச்சியாகப் பல இடங்களில் இப்போது போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு அமைச்சர்கள் எங்காவது காரில் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, வழிமறித்துக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்தச் சூழலில், மக்களுக்குத் துணையாக நாம்தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டைக் காக்கும் பொறுப்பும் கடமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் அதிகமாக இருக்கிறது. ஏன் என்றால், நாம் பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை, சீரழிய விடக் கூடாது.
ஒரு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழப்பது என்பது, ஏதோ பெரிய வீழ்ச்சி அல்ல. எத்தனையோ வெற்றியைப் பார்த்திருக்கிறோம்; எத்தனையோ தோல்வியையும் பார்த்திருக்கிறோம். தி.மு.க.வைப் போன்று, வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது; தோல்வி அடைந்த கட்சியும் கிடையாது. அதனால்தான் சொல்கிறேன், தி.மு.க.வின் இருப்பு என்பது வெறும் வாக்குச் சாவடிகளைத் தாண்டி, லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் இதயங்களில் இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவால் 1949-ஆம் ஆண்டு கொட்டும் மழையில் வடசென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், தலைவர் கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, வலிமையான அமைப்போடு இந்த இயக்கம் இருக்கிறது. உண்மைத் தொண்டர்களான உடன்பிறப்புகளின் வியர்வையாலும், இரத்தத்தாலும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது; தொட்டுக் கூட பார்க்க முடியாது.
உடன்பிறப்புகளின் உழைப்பும், நமது இயக்கத்தின் கட்டமைப்பும்தான் கழகத்தின் பெரிய பலம். அதைத்தான் இந்த இயக்கத்தின் தலைமைத் தொண்டனாக நான் அதிகமான அளவிற்கு நம்புகிறேன்.
நீங்கள் நினைத்துப் பாருங்கள்... நாம் எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளைச் செய்து முடித்திருக்கிறோம். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
மகளிர் உரிமைத் தொகை, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் வழங்குவோம் என்று சொன்னோம். அதேபோன்று, ஆயிரம் ரூபாய் மாதாமாதம் 15-ஆம் தேதி ஒவ்வொரு மகளிருக்கும் வங்கிக் கணக்கில் போடப்படுகிறது. அதேபோன்று, பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிர் கட்டணமின்று பயணம் செய்வதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு, அதுவும் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் – மாணவியர்கள், மேற்படிக்குக் செல்லும் வசதியில்லாத குடும்பத்தில் லட்சக்கணக்கானவர்கள் என்பதை அறிந்து, அதற்காக தமிழ்ப்புதல்வன் – புதுமைப்பெண் திட்டத்தின் சார்பில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோன்று, காலை உணவுத் திட்டம், இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்திலேயே எங்கும் கிடையாது. நம்மைப் பார்த்துதான் லண்டன் மாநகரத்திலும், கனடா நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. பல மாநிலங்களிலும் இப்போது நடக்கத் தொடங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து பெயர் வைத்தபோது, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு என்று மூன்று முறை முழங்கி, தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்று சொல்ல வைத்து, அப்போது அண்ணா சொன்னார், “இந்தத் தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் இருக்கும் வரைக்கும், அண்ணாதுரை என்ற என்னுடைய பெயர் மக்கள் மனதில் இருக்கும். அதை யாராலும் மாற்ற முடியாது” என்று சொன்னார். அதுபோன்று, மகளிர் உரிமைத் திட்டமாக இருந்தாலும், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமாக இருந்தாலும், காலை உணவுத் திட்டமாக இருந்தாலும், புதுமைப்பெண் திட்டமாக இருந்தாலும், தமிழ்ப்புதல்வன் திட்டமாக இருந்தாலும், இந்தத் திட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது. அந்தத் திட்டம் இருக்கும் வரையில் இந்த அடியேன் ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும். அதுதான் எனக்குப் பெருமை; அதுதான் இந்த இயக்கத்திற்குப் பெருமை; அதுதான் உங்களுக்கும் பெருமை!
எனவே, தமிழ்நாட்டின் வளத்திற்கும், நலத்திற்கும் உண்மையான காவல் அரண் தி.மு.க.தான் என்ற புகழைக் காப்பாற்றும் வகையில் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; விரைவில் வரலாம்; மூன்று மாதங்கள் கழித்து வரலாம்; ஆறு மாதங்கள் கழித்து வரலாம்; ஏன் என்றால், இப்போது நடைபெறும் ஆட்சி என்பது, மெஜாரிட்டியோடு அவர்கள் வெற்றி பெறவில்லை. மெஜாரிட்டி என்றால் என்ன? 118-ஆவது வர வேண்டும். அவர்கள் வெற்றி பெற்றது 108 தான். தி.மு.க.தான் வெற்றி பெற வேண்டும்; ஸ்டாலின்தான் முதலமைச்சராக வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தீர்கள் அல்லவா... நம்முடன் இருந்த அந்தக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் இன்றைக்கு இந்த வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு ஓடும் வண்டி, எங்கே சென்று நிற்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், எப்போது எது நடந்தாலும் நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; எந்தச் சூழ்நிலையிலும் வரலாம். நாம் அதற்கு நூறு சதவீதம் தயாராக இருக்க வேண்டும்!
எனவே, கழகத்தின் வெற்றிக்கு இந்த நிமிடத்திலிருந்தே உழைக்கத் தொடங்குவோம், பாடுபடுவோம், பணியாற்றுவோம் என்ற உறுதி எடுக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
எனவே, தாய்க்கழகத்தைத் தேடி வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் நம்முடைய இனிய சகோதரர் பென்ஜமின் அவர்களையும், அவரோடு வந்து சேர்ந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வருக வருக வருக என்று வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். உண்மையாக உழையுங்கள்; உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் உங்களைத் தேடி வரும்!
நன்றி, வணக்கம்!
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா? பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக.
- திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் அறிக்கை
தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூகநீதி வரலாற்றில், ஒருவரின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே உரிமைகள் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இஸ்லாமியர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் அந்த போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான்.
ஆனால், இன்று தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளாலும், சட்ட ரீதியான அலட்சியத்தாலும் அந்த அடிப்படைத் தகர்க்கப்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.
இஸ்லாத்துக்கு மதம் மாறிய நபர், பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கில், இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும் G.O.(Ms) No.31, BC, MBC and MW Department, dated 09.03.2024 -ஐ மதுரை கிளை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூகநீதிப் போரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகும்.
இந்தத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தவெக அரசு காட்டிய மெத்தனப்போக்கையும் பார்க்கும்போது, இது மறைமுகமாக பாஜகவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்குத் துணைபோகிறதோ என்று பலமான சந்தேகம் எழுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் Article 25 ஒரு குடிமகன் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் முழு சுதந்திரம் அளிக்கிறது. ஆனால், தற்போதைய தீர்ப்பில், “இஸ்லாமிற்கு மாறிய ஒருவர் வெறும் முஸ்லிம் மட்டுமே, அவருக்குப் பழைய சாதி அடையாளம் கிடையாது” (a convert to Islam is only a Muslim and that’s all there is to it) என்று இட ஒதுக்கீட்டை மறுத்திருப்பது தேன் தடவிய நஞ்சாகவே இருக்கிறது. மதம் மாறுவதால் ஒருவரின் ஆன்மீக நம்பிக்கை மாறலாம்; ஆனால் அவர் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த சமூகப் புறக்கணிப்பும், கல்விப் பின்னடைவும் ஒரு நாளில் மறைந்துவிடாது . இந்த அடிப்படை உண்மையை நீதிமன்றத்தில் நிலைநிறுத்த தவெக அரசு தவறிவிட்டது. இந்தச் சட்டப் பின்னடைவு ஒரு அபாயகரமான அரசியல் மாற்றத்தின் அறிகுறியாகும்.
மேற்படி வழக்கில் விசாரணையில், ஒரு அரசாணையின் (G.O.) செல்லுபடித்தன்மை குறித்த கேள்வி எழும்போது, அதைத் தக்கவைக்கத் தேவையான வரலாற்றுத் தரவுகளையும், Backward Classes Commission வழங்கிய பரிந்துரைகளையும் முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் கடமையிலிருந்து தவெக அரசு தவறியிருக்கிறது. குறிப்பாக, ஒரு Division Bench ஏற்கனவே வழங்கிய தீர்ப்புகளுக்கு மாறாக மற்றொரு அமர்வு கருத்து தெரிவிக்கும்போது, சட்ட விதிகளின்படி இந்த வழக்கை ஒரு Larger Bench-க்கு (பெரிய அமர்வுக்கு) மாற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய அரசியல் பொறுப்பு தவெக அரசுக்கு இருந்தது . அதைச் செய்யாமல் மௌனம் காத்தது, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாஜகவின் பலிபீடத்தில் ஏற்றி வைப்பதற்குச் சமமாகும்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விலகிய பிறகும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் வாதங்களைக் கேட்காமல் அவசரகதியில் வழக்கை முடிக்க நீதிமன்றம் முற்பட்டபோது, இயற்கைநீதியைக் காக்க அரசுத் தரப்பு வலுவாக குரல் கொடுக்கவில்லை. “இஸ்லாத்தில் படிநிலைகள் இல்லை” என்ற தர்க்கத்தை முன்வைத்து, யதார்த்தத்தில் நிலவும் சமூக அடுக்குகளை நீதிமன்றம் மறுத்தபோது, அதைச் சட்ட ரீதியாக முறியடிக்க தவெக அரசிடம் எந்தக் கோட்பாட்டுத் தெளிவும் இல்லை.
2023ம் ஆண்டு நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நீதிபதி சுவாமிநாதன் “அரசியலமைப்பு சட்டம் அப்படியே இருக்க வேண்டுமெனில், அது உருவாக்கப்ட்ட போது இருந்த மக்கட்தொகை விகிதம் அப்படியே பேணப்பட வேண்டும்” என்று பேசினார். அதற்கு தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ”நீதிபதிகள் இத்தகைய மனநிலையில் இருந்தால் அரசியல் சட்டத்தை பாதுகாக்க முடியாது.” என்று விமர்சித்திருந்தார்.
இப்போது ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பின் விளைவாக, மதம் மாறினால் இட ஒதுக்கீடு பறிப்பு என்ற தண்டனை என்ற அச்சுறுத்தலின் மூலம், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தைப் பறிக்கும் பாஜகவின் மறைமுக மதமாற்ற தடைச்சட்டத் திட்டத்திற்கு தவெக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது என்பது தெளிவாகிறது.
அந்த அஜெண்டாக்களுக்கு இணக்கமான முதலமைச்சரின் அரசு, இணக்கமான சட்டத்துறை அமைச்சர் என தவெக அரசு பாஜகவுடன் பேணும் இணக்கம் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ‘கட்டாய மதமாற்ற தடைசட்டம்’ என்ற வகுப்புவாத சட்டத்தை கொண்டு வந்த போது, திராவிட முன்னேற்ற கழகம் முன்னணியில் நின்று போராடி அந்த சட்டத்தை முறியடித்தது.
தற்போது வந்திருக்கிற நெருக்கடியிலும், திராவிட முன்னேற்ற கழகம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வழி நின்று நம் உரிமைகளை தாரைவார்க்கும் தவெக அரசின் கள்ளத்தனமான கூட்டணியையும் அம்பலப்படுத்தி, சமூகநீதியை நிலைநாட்டி. உரிமைகளை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
#TVKFails
கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி @dmk_studentwing சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கோனோர் கைது
ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளதை கண்டித்தும் - இச்செயலில் ஈடுபட்ட மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தி.மு.க. மாணவர் அணிச் சார்பில், இன்று (29.6.2026) தமிழகம் முழுவதும் கழக மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கணகானோர் பெருந்திரளாக கலந்து கொண்டு, அமைச்சரை பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தியும் - ஆளும் த.வெ.க. அரசை எதிர்த்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை ஆளும் த.வெ.க. அரசு கைது செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
ஈரோடு மாவட்டம்
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் தலைமையில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இ.பிரகாஷ், எம்.பி., மற்றும் ஈரோடு மத்திய மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம்
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் சார்பில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர் ஆகிய மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் தலைமையில், மதுரையில் மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு அங்காள பரமேஸ்வரி மஹாலிலும் மற்றும் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் உள்ள வசந்தம் நகர், பழங்காநத்தம் ரோடு, ஜி ஆர் டி மஹாலிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் திரு.ஜெயேந்திரன் மற்றும் திரு.கண்ணன் தலைமையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவதாக கூறி, கிருஷ்ணகிரி டான்சி அருகே திரண்டு இருந்த 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
சென்னை கிழக்கு மாவட்டம்
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், புரசைவாக்கத்தில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 500க்கம் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்திட முனைந்தபோது, அதனை தடுத்தி நிறுத்திய காவல்துறையினரைக் கண்டித்து தி.மு.கவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் பிரியா, மாணவரணி செயலாளர் வீரமணி, தமிழன் பிரசன்னா உள்ளிட்டோரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்தும், அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் வலியுறுத்தியும் அப்போது அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால் பதற்றம் ஏற்பட்டது
சேலம் மத்திய மாவட்டம்
சேலம் மத்திய மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.கோகுல்காளிதாஸ் – மாநகர அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் இரா.இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.இராஜேந்திரன் மாநகர பொருளாளர் எம்எம்.ஷெரீப், பகுதி செயலாளர்கள் கேபிள் ராஜா, மணமேடு மோகன், செந்தில், இப்ராஹீம் மற்றும் எஸ்ஆர்.அன்வர், சரவணன், அருண்பிரசன்னா, முகேஷ், சிவசங்கர், சிங்காரம், சிலம்பரசன், சுந்தர், கார்த்திக், சிவராஜி மாணவர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், கண்ணன், வேங்கையன், கிஷோர், மகநேதிரன் , அருள்பிரகாஷ், ருத்ரகுமார், விக்கி மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரண்டு இருந்த 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சார்பில் இராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணியினர் கலந்து கொண்டனர். .தவெகா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தெற்கு மாவட்டம்
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுக மாணவரணியினர் திரண்டனர். அப்போது, எழும்பூரில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம்
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் தலைமையில், நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம அருகே நெல்லை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மு.அப்துல்வஹாப், எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ம.கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆரப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர் டிபிஎம்.மைதீன்கான், முன்னாள் எம்பிக்கள் ஞானதிரவியம், விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா ஆகிய 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், தினேஷ் ஆகியோர் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் திண்டுக்கல் நாகராஜன், அவைத்தலைவர் காமாட்சி, மாநகரச் செயலாளர் ராஜப்பா ஆகியோர் முன்னிலையில், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, ரவிசங்கர், வேடசந்தூர் ரவிசங்கர், மாநகர மாணவர் அணி அமைப்பாளர் மதுசூதனன், இலக்கண்ணன், அக்பர், முருகானந்தம், பகுதி செயலாளர்கள் ஜானகிராமன், சூசை ராபர்ட் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி வடக்கு மாவட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தலைமையில், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ஈ.ராஜா, எம்.எல்.ஏ., மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பகவிநாயகம், வாசு, ஒன்றிய குழு தலைவர் பொன்.முத்தையாபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், சிவகிரி காந்தி சிலை அருகே 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு வடக்கு மாவட்டம்
ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம் ஜீயான் தியேட்டர் முன்பு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தலைமையில், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் முன்னிலையில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் – ஒன்றிய, நகர, பேரூர்ச் செயலாளர்கள் மற்றம் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
#DismissPowderMinister
“நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
#DMKProtest#GhilliSarath#PettiKadaiMedia
#NewsUpdate “அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும். “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!”
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
#GhilliSarath#MKStalin#DMKProtest#PettiKadaiMedia
முன்னாள் அமைச்சர் - கழக விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் திரு. உ. மதிவாணன் அவர்களது இல்ல மணவிழாவில் பங்கேற்று மணமக்கள் மதி.கதிரவன் - மௌனிகா ஆகியோரின் இல்லறம் மகிழ்ச்சி நிரம்பிய நல்லறமாக விளங்கிட வாழ்த்தினோம்!
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கு செல்லும் முன்பே நிதியுதவி வழங்குவது எல்லாம் தி.மு.கழகம் ஆரம்பித்த நடைமுறை..
இதுதான் First time என Sticker ஒட்ட வேண்டாம்!
#TVKLies