இந்திதான் இந்தியா எனின் அந்நிலை மாற்ற இன்னுயிரை ஈந்தேனும் தமிழ்மானம் காப்போம் என உயிர்நீத்த மொழிக்காவலர்களின் திருவுருவப் படங்களுக்குக் கிண்டி மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினேன்.
இனி ஓர் உயிரையும் இழக்காமல் நம் உரிமையை நிலைநாட்டுவோம்!
#LanguageMartyrsDay
“உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023இல் வீறுநடை போடுவோம்!
புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
#HappyNewYear2023
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்!
புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக!
இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!
#HappyNewYear2023
"அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்!
1/2
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி போட்டிகள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்றன. மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று நடைபெற்ற அதன் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்குக் கோப்பைகளை வழங்கினோம். @regupathymla
இனம், மதம், மொழி, நாடு ஆகியவற்றையெல்லாம் தாண்டி உலகெங்கும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழகத்தின் உரிமைகளையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். #NewYear2023
சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவற்றை ஆதரவற்ற குழந்தைகள்-முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த எளிய வேண்டுகோள்-ஏற்றமிகு மாற்றங்களை ஏற்படுத்தட்டும்.
இட ஒதுக்கீடு குறித்து குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் #pkdk யூ ட்யூப் சேனல் குழுவினர் உருவாக்கியுள்ள #animation பட விளக்கக் காணொளியைத் தோழர்கள் பகிரவும்.
#Reservation#EWS#scst#obc
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
தி.மு. கழக இளைஞர் அணி செயலாளராக மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.
இன்று 14.12.2022 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறைகளின் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட திரு. @Udhaystalin அவர்களை, கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தபோது.
திராவிட மாடல் அரசை வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அமைச்சரவையில் இன்று இணைகிறேன். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு, என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன். அன்பும், நன்றியும்.
துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் இன்று ‘திராவிட மாடல்’ அமைச்சரவையில் ஓர் அங்கமாக ஆகி, அமைச்சர் பொறுப்பை ஏற்க மானமிகு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிந்துரைத்து, அப்பொறுப்பை ஏற்கிறார்!
My hearty congratulations to shri Udayanidhi Stalin assuming the charge as minister in Tamilnadu Government I am confident that he will prove his efficiency in the dept Sports and youth welfare that has been allocated to him I wish him all the best in this new assignment
திராவிடமாடல் ஆட்சியின் திசைக்காட்டி பேரறிஞர் அண்ணா, சமூகநீதி அரசால் நவீன தமிழகத்தை உருவாக்கிய கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில், அமைச்சராக பொறுப்பேற்றதும் இன்று மலர் தூவி மரியாதை செய்தோம். பேரறிஞர், முத்தமிழறிஞரின் வழியில் தலைவர் தலைமையில் கழக-ஆட்சிப் பணியையும் மேற்கொள்வோம்.