Dear @OlaElectric My Ola bike has been at your Pondicherry Service Centre for the past two months, but it is still not repaired or returned. Your service is extremely poor, and I am planning to approach the Consumer Court. Please respond immediately.
2021ல் 2032 ஆக இருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 12,171 ஆக உயர்ந்துள்ளது. இதில் சரிபாதி நிறுவனங்கள் பெண்கள் தலைமையேற்று நடத்துகின்றனர்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#CMStalinInCoimbatore#TNStartup
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!
#கலைஞர்102 🖤♥
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 10000 முகாம்கள் நடத்தப்பட்டு 46 வகையான சேவைகளுக்கு மக்கள் இல்லம் தேடி வந்து தீர்வு காணப்படும்!
உங்கள் அருகாமையில் இயங்கும் முகாம் விவரங்கள் பற்றி https://t.co/P6Ws7Eh4cj இந்த இணையதள பக்கத்தின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.
#உங்களுடன்_ஸ்டாலின்
50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!
இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!
தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது #திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் @TThenarasu உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்!
கழக ஆக்கப்பணிகள், தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க இன்று முதல் ஒவ்வொரு தொகுதியைச் சார்ந்த கழக உடன்பிறப்புகளுடன் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து உரையாட இருக்கிறார்!
#உடன்பிறப்பே_வா
The Indian Constitution mandates that #delimitation must follow the first Census after 2026. The BJP has now delayed the Census to 2027, making their plan clear to reduce Tamil Nadu’s Parliamentary representation.
I had warned about this. It is now unfolding. By siding with the BJP, Palaniswami is not just silent but complicit in this betrayal. It's now clear that he has surrendered to Delhi’s domination.
The people of Tamil Nadu are united as one in their demand for a Fair Delimitation. We need clear answers from the Union Government.
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!
#OraniyilTamilNadu #FairDelimitation #JusticeForTamilNadu
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitation
அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் விரைவான நீதி பெற்று கொடுத்த திராவிட மாடல் அரசு!
பெண்களுக்கு எதிரான குற்றம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னது இன்று நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - கொரோனா பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்!
என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, "#DravidianModel ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! ஒரு கருத்தியலின் ஆட்சி!" என நிறுவியிருக்கிறோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது #DravidianModel ஆட்சி!
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; தொலைநோக்குப் பார்வையோடு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, “நாடு போற்றும் நான்காண்டு! தொடரட்டும் இது பல்லாண்டு!” என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்!
உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் 20 புதிய திட்ட பணிகளை துவங்கி வைத்து, 5 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து சிறப்பித்தார்!
#DMK4TN
The 2013 batch IFS officers, currently in Tamil Nadu for their Mid-Career Training Program, called on the Honourable Deputy Chief Minister of Tamil Nadu, Thiru @UdhayStalin, earlier today.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களை மும்பை புறநகர் மாநிலக் கழகத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#DMK
தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்திடவேண்டும்.
- மாண்புமிகு முதலமைசசர் திரு @mkstalin அவர்கள் அறிவுறுத்தல்
#DMK4TN