கொடுமணலில் 2400 ஆண்டுகளுக்கு மேல் பழமையுடைய தொழிற்பேட்டை வளாகம்...!
புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை 2012 ஆண்டில், #ஈரோடு மாவட்டக் #கொடுமணல் பகுதியில் புதிதாக மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வில் ஏராளமான செய்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மக்கள் வாழிடமாயிருந்த நான்கு அகழாய்வுத் தளங்களில் கண்டறியப்பட்ட #செய்பொருட்கள், அங்கு 2400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய #தொழிற்பேட்டை இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
அந்தத் தொழிற்பேட்டையில்
இரும்புப்பொருட்கள், எஃகுப்பொருட்கள், நெசவுப்பொருட்கள், சங்கு வளையல்கள், ஆயிரக்கணக்கான பல்வகை மணிகள் என கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக்கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
உரோமைப் பேரரசில் புழங்கிய #பொன் (ம) #வெள்ளி நாணயங்கள் பலவும் கண்டறியப்பட்டுள்ளன.
சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம், சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்புகொண்டிருந்தது.
கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு (ம) பலவகை பாசி மணிகள் #எகிப்து, #உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன.
கொடுமணலுக்கும், மேற்குக் கடற்கரையில் #முசிறி துறைமுகத்திற்கும் (இன்று கேரளத்தில் #பட்டணம் என்று அழைக்கப்படும் நகர்) இடையே வணிக வழித் தொடர்பு இருந்தது.
ஏற்றுமதிப் பொருள்கள் முசிறிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்த வளாகத்தில் நூல் சுற்றும் சுடுமண்கதிர், பொன் கம்பி ஆகியவை கிடைத்துள்ளன. 30 தமிழ்ச் சொற்கள் அடங்கிய 130 தமிழிப் பொறிப்புகள் கொண்ட பானைகள் கிடைத்துள்ளன.
'சப மகதை பம்மதன்', சாதன், விசாகி, சிலிகன், உரனன், திசன், 'சம்பன் சுமநன்' முதலிய பெயர்கள் அவற்றில் உள்ளன.
இவ்வகழாய்வை மேற்கொண்ட
புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கா. இராசன் இந்து நாளிதழ்ச் செய்தியாளர் டி.எஸ். சுப்பிரமணியத்திடம் இது குறித்துப் பதிவுசெய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேறெங்கும் இதுபோன்ற தொழிற்பேட்டை வளாகம் கண்டுப் பிடிக்கப்படவில்லை. #கொடுமணல் பெரிய #தொழிற்பேட்டை வளாகம். இங்கு வேளாண் பணி குறைந்த அளவிலேயே நடந்துள்ளது.
சங்ககால ஊர்களான #கொற்கை, #பூம்புகார், #கரூர், #உறையூர், #அழகன்குளம், #பொருந்தல் என்று பல ஊர்களில் அகழாய்வு நடந்திருந்தாலும், கொடுமணலில் கிடைத்ததுபோல் வேறெங்கும் #தமிழி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானைகள் கிடைக்கவில்லை.
'சம்பன் சுமநன்' என்ற தமிழிப் பொறிப்பு பொ.மு 3-ஆம் (அ) 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம். 'சம்பன் சுமநன்' என்ற பெயருள்ள பெரிய பானை நான்கு தளங்களுள் ஒன்றின் இரண்டாம் அடுக்கில் கண்டறியப்பட்டுள்ளது.
முதல் அடுக்கில் #சம்பன் என்ற பெயர் பொறித்த பானை கிடைத்துள்ளது. பல பானைகளில் #சம்பன், #சுமநன் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இதை வைத்துப் பார்க்கும்போது #சம்பன் தந்தை, #சுமநன் மகன் என்று முடிவுசெய்யலாம். இந்தத் தொழில் வளாகம் #சம்பன் குடும்பத்தைச் சேர்ந்ததெனலாம்.
கொடுமணலில் இரண்டு பெருங் கற்காலக் #கற்பதுக்கைகள் அகழப்பட்டன. ஒரு #கற்பதுக்கை #கல்வட்டம் சூழ அமைந்திருந்தது. அதன் உள்ளே இரண்டு தடுப்புகள் இருந்தன. தடுப்புகளும் மேற்கூரையும் கருங்கல்லால் அமைக்கப்பட்டிருந்தன.
#கல்வட்டம் நெடுங்கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. உயரமான கற்கள் சிதைந்திருந்தன. உள்வட்டம் சுவர்போல் அமைந்துள்ளது. முன் தடுப்பில் துளையிடப்பட்டுள்ளது.
இரண்டு தடுப்புகளுக்கும் பொதுப்பாதை உள்ளது. மனித எலும்புகள் தடுப்புகளில் இருந்தன. இறப்புச் சடங்குப் பொருள்களான நான்கு கால் ஜாடி, வளையல் தாங்கி, இரும்புப் பொருள்கள், மணிகள் உள்ளே இருந்தன. கற்பதுக்கையின் வெளியே உடைந்த பானைகளும் கலயங்களும் கிடந்தன.
இரண்டாவது கற்பதுக்கையில் ஒரு முதன்மைத் தடுப்பும் இரண்டு துணைத் தடுப்புகளும் உள்ளன. ஒவ்வொன்றும் கற்கூரையுடன் உள்ளன. முதன்மைப் பகுதி சிறந்த கல்லாலும் பிற பகுதிகள் எளிய கற்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சுற்றியிருந்த கல்வட்டத்தில் இப்போது கற்கள் இல்லை. ஒரு தடுப்பு, தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. அதில் துளை உள்ளது. மற்ற இரண்டிலும் வட்ட வடிவத் துளைகள் உள்ளன. தடுப்பின் உள்ளே மணிகள் கிடைத்துள்ளன. உள்ளே துளைப்பகுதியில் அம்பு முனைகளின் தொகுப்புப் பதியப்பட்டுள்ளது. இது எதற்காக அமைந்துள்ளது என்று தெரியவில்லை என்கிறார் கா. இராசன்.
கொடுமணலில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒய். சுப்பராயலுவை இயக்குநராகக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை ஆகியவற்றின் துணையோடு 1985, 1986, 1989, 1990ஆம் ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொண்டு 48 குழிகளைத் தோண்டியது. 1/2
அரியலூர் செந்துறை வட்டம், கடம்பூர் பெண் நந்தினியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி பின்பு கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து பெண்ணின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து சிசுவை வீசி சென்றனர்.. என்ற சம்பவம் தெரியுமா? அதை யாராவது கேட்டிங்களா? @grF6qFEJQDhvD8j
ரோம் இளவரசர்க்கு இரும்பு உருக்கும் உத்தியை கொடுமணல் ஆபரணசாலையில் சாம்பான் சுமணன் என்ற உலகின் சிறந்த ஆபரண வர்த்தகரே சேரமன்னரின் வேண்டுகோளை ஏற்று கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
#tamilarunmaigal#paraiyar#throwback#history
இங்க நிறைய பேர் இவன மாதிரி தான் கமெண்ட்ல கம்பு சுத்துவானுங்க போஸ்ட் போட்டு சமூக நீதி பேசுவானுங்க போய் பாத்தா சொந்த சாதியில கல்யாணம் பன்னிட்டு இங்க வாய் சவடால் விட்டுனு இருப்பனுங்க....
இங்க சாதி இருக்குனு சொல்லுறவன விட சாதி இல்லனு சொல்றவன் தான் danger...
நாங்குநேறி சாதிவெறி தாக்குதல்ல கைதானவங்க தீம்காவாமே? இதே பா.ஜ.க வா இருந்திருந்தா சனாதனம் இந்துத்துவம் என சகட்டு மேனிக்கு புர்ச்சி பேசி இருப்பாங்க தலித்திஸ்ட்… ஒரு நல்ல வாய்ப்பு போய்டுச்சே…!
@ErimalaiMR@airportmoorthy