எழுச்சி கொள்!
புரட்சி செய்!
திருச்சி நோக்கி புறப்படு..!
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு
மாசி 09 | 21-02-2026 | திருச்சி
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
திரள்வோம்! திரள்வோம்!
திருச்சியில் திரள்வோம்!
தீந்தமிழ் இனத்தீரே..!
https://t.co/7t37LHmja4
https://t.co/pz7J0c9TfH
திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான போதை சிறார்களின் கொலைவெறித் தாக்குதல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கான தலைகுனிவு!
@CMOTamilnadu@mkstalin
திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தம்பி சிராஜ் மீது, போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது. திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது. அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது.
வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவது, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்குற்றமோ அதே அளவிற்கு, குடும்ப வறுமைக்காகப் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் தாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகிவருகின்றன. சொந்த இரத்த உறவுகள் கூடச் சிறு சிறு முன்பகைக்காக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகும் சமூகப்பேரவலம் நிகழ்வதற்கு அரசு விற்கும் மதுதான் அடிப்படை காரணமாகிறது. அதுமட்டுமின்றி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர்ந்து கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மது மற்றும் கஞ்சா போதையில்தான் நடைபெறுகிறது. எனவே அரசு மது விற்பனையைத் தடைசெய்தாலே தமிழ்நாட்டில் நடைபெறும் 95% கொடுங்குற்றங்கள் நடைபெறாமலேயே தடுத்து நிறுத்த முடியும். அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் காரணமாகத் திகழும் மது விற்பனையைத் தடை செய்வதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்? கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன்? அதிமுக ஆட்சியில் குட்காவுக்கு எதிராக சட்டமன்றம் வரை பேசிய திமுக, தன்னுடைய ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை குறித்து வாய் திறவாதது ஏன்?
‘போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம்’ என்று காணொளி பேசினால் மட்டும் போதைப்பொருட்கள் புழக்கம் ஒழிந்துவிடுமா? அல்லது தமிழ்நாட்டு இளைஞர்கள் அதைப் பயன்படுத்தாமல் தடுத்திடத்தான் முடியுமா? இளம் சிறார்கள் போதையில் கொடூர ஆயுதங்களுடன் தாக்கிய காணொளிக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? மது, கஞ்சா போதையைக் கட்டுப்படுத்தாது இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு பலி கொடுக்கப்போகிறது? பட்டப்பகலில் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாத நாட்களே இல்லை என்னும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு போதைப்பொருட்கள் புழக்கத்தால் முற்று முழுதாகச் சீரழிந்துள்ள நிலையில், திமுக அரசு கஞ்சா விற்பனையைத் தடுக்காததும், மது விலக்கை நடைமுறைப்படுத்த மறுப்பதும் ஏன்? மக்களின் நலனைவிட மதுவினால் வரும் வருமானம்தான் திமுக அரசிற்கு முதன்மையானதா? இதற்குப் பெயர்தான் திராவிட மடலா? வெட்கக்கேடு?
ஆகவே, வடமாநில தொழிலாளி தம்பி சிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதல்போல இனி ஒரு கொடூர நிகழ்வு நடந்திடாமல் தடுத்திடவும், சீரழியும் தமிழிளம் தலைமுறையைக் காத்திடவும், மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதோடு, கஞ்சா விற்பனையை முற்று முழுதாக தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் மேடையில் திடீரென புகுந்து இந்த அரசின் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு சொத்தை விற்று இருக்கிறார்கள் அதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்!
CM செல்லுக்கு பல முறை கேட்டும் எந்த பயனும் இல்லை! @mkstalin@Udhaystalin@DrSenthil_MDRD
@candleways ராமசாமி நாய்க்கனின் தகப்பன் வெங்கிட்டுவும் சின்னத்தாயும் பரம்பரை பணக்கார ர்கள் அல்ல, ஒரு துண்டு பூர்வீக நிலம் கூட இல்லாத வந்தேறி வடுக அன்றாடங்காய்ச்சிகள். தமிழர்களை சுரண்டி காசு வந்தது, ராமசாமிக்கு விபச்சாரிகளோடு பழக்கம் வந்த பின்னர் தானாம் 😗
மூத்த தமிழ்த்தேசியவாதி எழுகதிர் ஆசிரியர் பெருமதிப்பிற்குரிய ஐயா அருகோ அவர்களின் இல்லம் சென்று உடல் நலம் விசாரித்து மருத்துவ உதவி செய்தார் அண்ணன் சீமான்..
இருக்கை நுனியில் திராவிடம் (திமுக), இறுமாப்போடு ஆரியம் (பாஜக)
----------------------------------------------------------
மேடைதோறும், ஆரியத்தை எதிர்ப்பதுதான் திராவிடம் என்று முழங்குவார்கள். ஆனால், செயல்பாடுகளோ ஆரியத்திடம் மண்டியிடுவது தான் திராவிடம் என்பதைத் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
கடந்த சில நாட்களாக திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு அவர்களை அமலாக்கத்துறைச் சுற்றி வளைத்தது போல செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன. அதன் தொடர்ச்சியாக, இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கிறார் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு அவர்கள். அதற்க்கான செய்திக்குறிப்பை வெளியிட்டது திமுக தரப்பு அல்ல. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே அவருடைய X தளத்தில் வெளியிடுகிறார். அந்தச் சந்திப்பிற்கான படத்தில் ஆரியத்தை எதிர்த்து நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக திராவிடத்தை நிலைநாட்டும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர், இருக்கையின் நுனியில் இருக்கிறார், அதுவும் பல் இளித்துக் கொண்டு. மனுவைப் பெரும் ஆரியத் தரப்பைச் சார்ந்த பாஜக ஒன்றிய அமைச்சர் முறைத்த வண்ணம் இருக்கிறார்.
திமுக ஒரு கேடுகெட்ட கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்த நிலைக்கும் கீழ் இறங்குவார்கள் என்பதை வரலாறு 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் நிருவிக்கொண்டே இருக்கிறது. சர்க்காரியா விசாரணையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்தது முதல், உதயநிதியின் முதல் வட்டத்தில் அமலாக்கத்துறை கை வைத்தவுடன் அவசர அவசரமாக முதல்வரே தில்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்தது வரை, இதைத்தான் காலாகாலமாக திமுக தனது நடைமுறையாகவே வைத்துக் கொண்டிருக்கிறது.
தாங்கள் ஊழலை ஒழிக்க வந்தவர்கள், தாங்கள் தான் தூய கட்சி என்பது போல் சொல்லிக் கொள்ளும் பாஜக, ஏன் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்கிறது? இத்தகைய சந்திப்புகள் நடந்த பிறகு, அதற்கு முன் நடந்த அமலாக்கத்துறை நடவடிக்கைகள் முடங்குவது ஏன்? பாஜகவிற்கு இதைச் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேட வேண்டியது இந்தியா முழுவதும் பாஜகவை ஆதரிக்கும் மக்கள் தான். குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த 18% தமிழ்நாட்டு மக்கள் தான்!
இதை எதிர்க்க வேண்டிய அதிமுக, பாஜகவின் மடியிலேயே அமர்ந்து கொண்டிருக்கிறது.
திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும், அறிவித்துக் கொண்டு அரசியலில் நுழைந்த நடிகர் விஜய் அவர்கள், கரூர் நிகழ்விற்குப் பிறகு திமுக எதிர்ப்பையும், அப்போது பாஜக அவருக்கு ஆதரவாக நின்றதையும் கண்டு, அன்று முதல் இன்று வரை பாஜக என்ற சொல்லையே விஜய் உச்சரிக்கவில்லை. இதுவே அவருடைய முதல் பெரிய சமரசமாகப் பார்க்கப்படுகிறது.
இப்படி எல்லா பக்கமும் சமரசங்களுக்குள்ளான பொழுதும், சமரசம் இல்லாமல், சமரசம் செய்யும் அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக உறுதியாக தொடர்ச்சியாக களத்தில் நிற்கும் ஒரே அரசியல் சக்தி, நாம் தமிழர் கட்சி கட்சியும் அண்ணன் சீமானும் மட்டும் தான். தமிழ் மக்கள் இதை உணர்ந்தே இருக்கிறார்கள். எத்தனை கருத்துத் திணிப்புகள் வெளியிட்டாலும், 2026இல் அது எதிரொலித்தே தீரும். #NTK4TN
சன் டிவியில் ஈழத் தமிழன் வாகீசனுக்கு வாய்ப்பு வழங்கியதோடு “ அழகிய தமிழ் மகன்” விருதும் அளித்துள்ளனர்.
தமிழன் அழியும்போது “மானாட மயிலாட” நடத்தியவர்களின் இந்த மாற்றத்திற்கு சீமான் காரணமா?
புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்று இருக்கும் மூத்த தமிழ்த்தேசியவாதி எழுகதிர் ஆசிரியர் ஐயா அருகோ அவர்களை இன்று காலை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் அண்ணன் சீமான். ❤️💛