தமிழர் வாழ்வியலில் யானை...!
இன்றைய காலகட்டத்தில் கோயில்களில் யாசகத்திற்கு தும்பிக்கையை நீட்டி வாழ்த்திக் கொண்டிருக்கும் யானைகள், ஒரு காலத்தில் பல பேரரசுகளுக்கு வித்திட்டவை. பண்டைய தமிழ் மன்னர்களின் படைகளின் நால்வகைப் படைகளில், யானைப்படை மிகவும் சிறப்புற்று விளங்கின.
யானைகளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவு பெருங்கற்காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. பல பாறை ஓவியங்களில் யானைகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளது. யானைகளைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியத்தில்
பரவலாகக் காணப்படுகிறது.
அதன் சிறப்பியல்புகள், மதம் பிடித்தல், அன்போடு பழகுதல் எனப் பல இடங்களில் யானைகள் பற்றிய பாடல்கள் உள்ளன. சங்கக் காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை பல பேரரசுகளும் சிற்றரசுகளும் தங்கள் படையில் யானைப் படைகளை பராமரித்து வந்துள்ளார்கள்.
அரசன் வெற்றி பெற்ற காலத்தில் பட்டத்து யானையின் மீது அமர்ந்து நகர்வலம் வருவது, யானைகள் மீது அமர்ந்து பறை அறிவித்தல் எனப் பல்வேறு வேலைகளுக்கு யானைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
■ முதலாம் பரமேசுவர வர்மன், சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தியனுடன் நிகழ்த்திய போரில் யானைப் படைகளின் பங்களிப்பையும், பரமேசுவர வர்மனின் பட்டத்து யானை #மகிவர்ணாம் என்ற பெயரைக் கொண்டது என்றும், அதன் மேல் அவன் அமர்வதற்காக அமைக்கப்பட்ட #அம்பாரம் குறித்தும் '#கூரம்_செப்பேடு' குறிப்பிடுகிறது.
■ பல்லவர்களும் அவர்களது பகைவர்களும் யானைப் படைகளைக் கொண்டிருந்தமையை '#உதயேந்திரம்_செப்பேடுகள்' குறிப்பிடுகின்றன. அபராஜித பல்லவனின் கல்வெட்டொன்று அவன் சோழ மன்னனுடன் நடத்திய சிற்றாற்று போரில் யானைப் படையின் துணையுடன் வென்றதைக் குறிப்பிடுகிறது.
■ பல்லவர்களைப் போன்றே சோழர்களும் யானைப் படையைக் கொண்டிருந்தனர். சுந்தரச் சோழனின் பட்டத்து யானையின் போர்க்கள ஆற்றலை '#அன்பில்_செப்பேடுகள்' குறிப்பிடுகின்றன.
■ ராஜாதித்யன் என்ற சோழ இளவரசன், போர்க்களத்தில் யானையில் வீற்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதைப் பெரிய '#லெய்டன்_செப்பேடுகள்' குறிப்பிடுகின்றன.
■ முதலாம் ராஜராஜ சோழனின் யானைப் படையைக் கவித்துவமான மொழியில் '#கரந்தைச்_செப்பேடு' வர்ணிக்கிறது.
■ முதலாம் ராஜேந்திர சோழன் தன் யானைக் கூட்டங்களை ஆற்றில் நிறுத்தி, அவற்றைப் பாலம்போல் பயன்படுத்தியதாகத் '#திருவாலங்காடு_செப்பேடுகள்' குறிப்பிடுகின்றன. இவரின் யானைப் படையைக் 'கன்னியாகுமரிக் கல்வெட்டுகள்' குறிப்பிடுகின்றன.
போரில் தோல்வியுற்ற மன்னர்களின் யானைகளை வெற்றி பெற்ற மன்னர்கள் கைப்பற்றிக் கொண்டனர். மன்னர்களுக்கிடையே பரிமாறப்படும் அன்பளிப்புப் பொருட்களில் ஒன்றாக யானை விளங்கியது. பாண்டிய மன்னர்களிடமும், சேர மன்னர்களிடமும் அதிக அளவு யானைப்படை இருந்துள்ளது.
ஒற்றை உயிரினமான யானைக்குத் தான் எத்தனை எத்தனை பெயர்களை தமிழர்கள் வைத்திருக்கிறாரகள்?
#வாரணம்
#இபம்
#வேழம்
#களிறு
#தும்பி
#வல்லிலங்கு
#தந்தாவளம்
#கரி
#மாதங்கம்
#நாகம்
#வழுவை
#கயம்
#தூங்கல்
#கும்பி
#ஆம்பல்
#கைம்மா
#தோல்
#நால்வாய்
#மந்தமா
#சிந்துரம்
#கரையடி
#பூட்கை
#மருண்மா
#வயமா
#எறும்பி
#குஞ்சரம்
#மதகயம்
#புகர்முகம்
#புழைக்கை
#கரேணு
#போதகம்
#தந்தி
#ஒருத்தல்
#அத்தி
#உவா
#மதாவளம்
இவைகளையெல்லாம் சங்க இலக்கிய நூலான "சூடாமணி நிகண்டு " சொல்கிறது. யானைகளுக்கு தமிழ் தந்த வெவ்வேறு பெயர்கள் இத்தனை.
அது மட்டும் தானா...?
அது யானையை பற்றி மேலும் விவரிப்பதைப் பாருங்கள்... 1/2
கடல் கடந்த தமிழும், வணிகமும் - #தாய்லாந்து நாட்டில் கிடைத்த #தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகளும்...!
தொல்தமிழர் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவினார்கள் என்பதற்கான பல சான்றுகள் உள்ளன.
2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே #தாய்லாந்து (#சியாம்) நாட்டில் தடம்பதித்ததற்கான சுவடுகள் ஏராளம் உள்ளன. தாய்லாந்திற்கு அண்மைக்காலத்தில் தான், அங்குள்ள #தாய் என்ற இன மக்களின் பெயரால் அது #தாய்லாந்து என பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
■ வாட்நா மியாங் கோயில் கல்வெட்டு...
தாய்லாந்தில் உள்ள 'நக்கோன்ஸி தம்மாரத்' என்ற நகர அருங்காட்சியகத்தில் 'தகு வாபா' என்னுமிடத்தில், 'வாட்நா மியாங்' என்ற கோயிலில் பொ.பி 8-9 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் திருமாலுக்கு குளம் வெட்டி கோவில் கட்டிய செய்திகள் சொல்லப்படுகிறது.
இவ்வணிகக்குழுவினர் மணிக்கிராமத்தைச் சேர்தவர்கள் எனவும், அவர்களுக்கு #சேனாமுகம் என்ற பாதுகாப்புத் தமிழர்படை துணையாக இருந்தது எனவும், #மணிக்கிராமத்தார் அந்தக்குளத்துக்கு #அவனி_நாரணன் என பெயர் வைத்தனர் எனவும் அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக்கல்வெட்டைக் வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் ஆய்வுசெய்து, இது மூன்றாம் நந்திவர்ம பல்லவ மன்னனின் காலத்துக்குறியதாக இருக்கலாம் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி நந்திவர்மனின் பட்டப்பெயர்களில் #அவனி_நாரணன் என்பதும் ஒன்றாகும். இதன் காரணமாகவே அங்கு வெட்டப்பட்ட குளத்திற்கு #அவனி_நாரணன் என பெயர் சூட்டியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
■ பூ கே தாங் பானை ஓடுகள்...
2006 ஆம் ஆண்டு தாய்லாந்தில், 'பூ கே தாங்' என்னுமிடத்தில் நடந்த அகழ்வாரய்ச்சியின் போது பொ.பி 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த #தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், #தமிழி எழுத்துக்கள் தான் என்பதைத் தமிழ்நாடு தொல்லியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனும், வாசிங்டன் பல்கலைக்கழப் பேராசிரியர் ரிச்சர்ட் சாலமனும் உறுதி செய்தனர். இங்கு கிடைக்கப்பட்ட பானை ஓடுகளில் #துறவு என பொறிக்கப்பட்டிருந்தது.
■ தமிழி பொறிக்கப்பட்ட தொடுகல்...
தாய்லாந்தில் 'க்லோங் தோமிடேரியன்' என்னுமிடத்தில் பொ.பி 3-4 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த #தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட #தொடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தொடுகல்களில் #பெரும்பட்டன் என பொறிக்கப்பட்டிருந்தது. #பெரும்பட்டன் என்பது கைவினை கலைஞர்கள் (அ) கொல்லர்களை குறிப்பதாகும்.
#கொல்லர்கள் இத்தொடுகல்லினை தங்கள் தொழிலிற்காக பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடுகல்லின் மூலம் சங்ககாலத்திலேயே தமிழகத்தைச் சேர்ந்த பல பொற்கொல்லர்கள் (ம) கைவினை கலைஞர்கள் தாய்லாந்திற்கு குடிப்பெயர்துள்ளது தெரியவருகிறது.
அதுமட்டுமின்றி இவ்விடத்திலேயே தமிழகத்தைச் சேர்ந்த சதுரவடிவ செப்பு நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நாணயத்தின் ஒருபுறம் புலி சின்னமும், மற்றோரு புறம் குதிரை (ம) யானையுடன் கூடிய தேர்ச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயம் பொ.பி 1 முதல் 3-ம் நூற்றாண்டைச்சேர்ந்த சங்ககால சோழர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே அகழாய்வில் மற்றொரு பொ.பி 6-ம் நூற்றாண்டைச் சேந்த வட்டவடிவிலான செப்பு நாணயமும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்நாணயத்தின் ஒருபுறம் #எருது நின்ற நிலையிலும், மறுபுறம் #பாய்மரக்கப்பல் துடுப்புடன் கடலில் பாய்வது போலவும் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் பல்லவர்கால நாணயங்களில் எருது சின்னம் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றின் மூலம் இந்த நாணயங்கள் சங்ககாலத்திருந்தே தாய்லாந்தில் வணிகத்தின் மூலம் புழக்கத்திலிருப்பது தெரியவருகிறது. இவைகள் மட்டுமின்றி தமிழர்களால் பொறிக்கப்பட்ட நிறைய #தமிழ் கல்வெட்டுகளும் தாய்லாந்தில் காணப்படுகின்றன.
- நன்று.
கடல் கடந்த தமிழும், வணிகமும் - #வியட்நாம் நாட்டில் #தமிழி எழுத்துப் பொறித்த கல்வெட்டு...!
தொல்தமிழர் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவினார்கள் என்பதற்கான பல சான்றுகள் உள்ளன.
வியட்நாமில் 'வியட் மே-சன்' என்னுமிடத்தில் ஒரு பாறை உள்ளது. இப்பாறையின் இரண்டு பக்கத்திலும் #தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் #திருமாறன் என்ற பாண்டிய மன்னன் #வியட்நாம் நாட்டை ஆண்டான் என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.
இக்கல்வெட்டின் ஆட்சி ஆண்டு முதலிய விவரங்கள் கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டதின் காரணமாக கிடைக்கவில்லை.
இருப்பினும், எழுத்து அமைப்பின் அடிப்படையில் இக்கல்வெட்டு பொ.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தொல்லியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்தக்கல்வெட்டில் தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக்குவியல் மற்றுமுள்ள அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாகவும்;
எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதாகவும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் "இது வீரனுக்கு தெரியட்டும்” என்று கல்வெட்டு வரிகள் பாதியில் முடிகிறது.
இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது.
ஆனால் #வியட்நாம், #கம்போடியா, #லவோசு ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய தமிழ் சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிறது.
தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க கால மன்னன் 'நிலந்தரு திருவிற் பாண்டியன்' என்று தொல்காப்பியத்தின் முன்பகுதியில் 'சிறப்புப் பாயிரம்' எனத் தலைப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ள #பனம்பாரனார் பாயிரம் கூறுகிறது.
பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “திரு பாண்டியன்” “திருமாறன்” என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஒரு கூற்றுள்ளது
- நன்று.
கடல் கடந்த தமிழும், வணிகமும் - தென் அராபிய ஓமனில் தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு...!
#தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு ஒன்று தென் அராபியாவில் உள்ள ஓமனில் #கோர்ரோரி (Khor Rori) பகுதியில் #சும்குரம் (#Sumhuram) என்ற ஊரில் 2006 ஆம் ஆண்டுக் கிடைத்தது. அதில் "ணந்தை கீரன்" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொ.பி முதல் நூற்றாண்டுக்கு முந்தையதாகக் கருதப்படும் இது, வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துள்ளது. தமிழகத்தின் பண்டைக் கடல் வணிகம் எகிப்து - செங்கடல் பகுதிகளுக்கிடையே மட்டுமின்றி அராபியப் பகுதிகளிலும் நடந்து வந்ததை இது நிறுவுகிறது.
#ஓமன் பகுதியில் அகழாய்வு செய்த இத்தாலியக் குழு இந்தப் பானை ஓட்டைக் கண்டெடுத்தது. அகழாய்வில் ஈடுபட்ட அலெக்சியா பாவன் (Alexia Pavan) என்னும் இத்தாலியத் தொல்லியலாளர், "கேரளப் பட்டண இந்தியக் கடல் வணிகமும், தொல்லியல் தொழில்நுட்பமும்" என்ற தலைப்பில் கொச்சியில் நடந்த பன்னாட்டுப் பீங்கான் தொல்பொருள் ஆய்வரங்கில் அதைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
தொல்லியல் சார்ந்த பன்னாட்டு ஆய்வரங்கில் பானைகள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன. கேரள வரலாற்று ஆய்வு மன்ற இயக்குநர் பி.ஜே. செரியனும், இலண்டன் பிரிட்டீஷ் அருங்காட்சியக ரோபர்ட்டா டோம்பரும் இணைந்து ஆய்வரங்கை நடத்தியுள்ளனர்.
புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. இராசன், இந்தியத் தொல்லியல் துறை மண்டல இயக்குநர் டி. தயாளன், தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத்தலைவர் வி. செல்வக்குமார் ஆகியோர் மேற்குறிப்பிட்ட பானை ஓட்டைப் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பானை ஓடு #சும்குரம் நகரத்தின் மிக முக்கியமான குடியிருப்புப் பகுதியில் கிடைத்தது. இது சமையல் பாத்திரத்தின் கைப்பிடியாக இருக்கலாம் என்றும், இதன் காலம் பொ.பி முதல் நூற்றாண்டுக்குச் சற்று முன்னதாக இருக்கலாம் என்றும் அவ்வாய்வரங்கில் கலந்துகொண்ட முனைவர் பாவன் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விடத்தில் பேரளவில் தமிழகப் பொருள்களான மணிகள், காசுகள், பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் தென் அராபியக் கடற்கரைக்கும் இருந்த நெருங்கிய உறவை இவை வெளிப்படுத்துகின்றன என்று பாவன் கருதுகிறார்.
■ தனியார் பெயர்...
பேராசிரியர் கா. இராசன் "ணந்தை கீரன்" என்கிற ஆள் பெயர் இரண்டு கூறுகளைக் கொண்டது என்கிறார். #அந்தை மூத்தோரைக் குறிக்கும் மரியாதை ஒட்டு. இதைக் #குழந்தை_சம்பன், #அந்தை_அசுதன், #கொற்றந்தை எனத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணலாம்.
#கீரன் ஓர் ஆளின் பெயர். தமிழ்ச் சங்க காலப் புலவர்களில் 20 பேருக்கு மேல் #கீரன் என்ற பெயரில் உள்ளனர். எனவே உடைந்த பானை ஓட்டில் உள்ள பெயர் புகழ்பெற்ற ஒரு பெருவணிகரின் பெயராக இருக்க வேண்டும் என்று இராசன் கருதுகிறார்.
பொதுவாக இந்தியர்களின் வணிகத் தொடர்பு எகிப்தியப் பகுதிகளுடன் தான் இருந்தது. செங்கடல் துறைமுகங்களான "குவெசிர் அல் காதிம்" (Quasir al-Qadim), "பெரெனிகே" (Berenike) ஆகியவைதான் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
#காதிம் நகரில் நடந்த அகழாய்வில் #கணன் (கண்ணன்), #சாதன் (சாத்தன்), பானை ஓரி என்ற பெயர்களைத் தமிழி எழுத்தில் பொறித்த பானை ஓடுகளும், #பெரெனிகே நகரில் #கொற்றபுமன் (கோற்பூமான்) என்று தமிழி எழுத்தில் பொறித்த பானை ஓடும் கிடைத்துள்ள செய்தி 1990க்கு முன்னரே வெளிவந்தது.
#கோரோரி கண்டுபிடிப்பு தென்னிந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து நடந்த வணிகம், அராபியா முதலிய நாடுகளுடனும் நிகழ்ந்துள்ளதை நிறுவுகிறது என்கிறார்.
மணப்பொருள்களான #மிளகு, #இலவங்கம் முதலியவற்றோடு #குதிரை வணிகமும் இந்தப் பகுதியில் அப்போது நடந்திருக்கலாம் என்று இராசன் கருதுகிறார்.
பைசா பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த அகழாய்வுகள் அரேபியப் பகுதிகளுடன் தமிழகம் பண்டைய மணப்பொருள் வணிக உறவுகளோடு, பண்பாட்டு உறவுகளையும் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகின்றன என்கிறார்.
#தமிழி எழுத்துப் பற்றி நடந்துள்ள ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது #கோர்ரோரி எழுத்துப் பொறிப்பு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது என்கிறார் கேரள வரலாற்று ஆய்வு மன்ற இயக்குநர் முனைவர் செரியன்.
இந்தக் கல்வெட்டுச் சான்றானது வரலாற்றுக்கு முந்தைய கால (எழுத்து வரலாறு தொடங்கிய கால) ஊழியில் இடம்பிடித்துள்ளதை அவர் சுட்டுகிறார்.
எகிப்துக்கும், அரேபியாவுக்கும் நடுவில் உள்ள செங்கடலின் கரைகளில் உள்ள #கோர்மோஸ், #பெரெனிகே மற்றும் இலங்கையில் சில இடங்களில் மட்டுமே இந்தியாவுக்கு வெளியே தமிழில் பொறிப்புகள் கிடைத்துள்ளன.
■ இசுலாமுக்கு முந்தைய காலம்...
இந்த வகையில் இசுலாமுக்கு (பொ.பி 600க்கு) முந்தைய காலத் துறைமுக நகரமாக இருந்த #கோர்ரோரி சிறப்பிடம் பெறுகிறது. இது தென் அரேபியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள வணிகத் தொடர்பை நிறுகிறது என்கிறார் செரியன். 1/2
பழந்தமிழரின் இயற்பியல் தொழில்நுட்பம்...!
பொ.பி. 16-ஆம்நூற்றாண்டு வாக்கில் வடிவமைக்கப்பட்ட #சூரியக்கடிகை (Sundial) தொழில்நுட்பத்திற்கான ஆதாரம், பொ.பி. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த #நெடுநல்வாடை மிக அழகாக குறிப்பிடுகிறது சிந்திக்கத்தக்கது.
வானநடுவரையாகிய சூரிய வீதிக்குச் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட கோலினைச் சுற்றி வட்டம் அமைத்து, கிழக்கு மேற்கில் வரையிட்டு, அதில் விழும் நிழல் அளவைக் கொண்டு காலத்தைக் கணிக்கும் தொழில்நுட்பத்தை நம் முன்னோர் அறிந்திருந்தனர்.
பழங்காலத்தில் மனிதன் நிழலைக் கொண்டே நேரத்தைக் கணித்தான். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே #சூரியக்கடிகை. இக்கருவியில் ஒரு தளத்தின் மேல் செங்குத்தாகக் கோல் ஒன்று இருக்கும். இக்கோலின் நிழலைக்கொண்டே சூரியன் இருக்கும் கோணமும், நாழிகையும் கணக்கிடப்படுகின்றன.
மேலும், இன்று #அண்டவெளி ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும் தொலைகாட்டி வில்லைகளை 'தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டு படிமம்' என்று #கபிலர் குறிப்பிட்டுள்ளார் என விஞ்ஞானி நெல்லை சு.முத்து அவர்கள் கூறுகிறார்.
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது" என #ஔவையார் கூறியுள்ளார்.
இங்கு ‘ஆழ்கடல் நீர், ஆழ அமுக்கி' எனும் சொற்றொடர்கள் வேறொரு நுட்பமான அறிவியல் உண்மையையும் தெளிவாகக் கூறுகிறது.
அதாவது, ஆழத்தைப் பொறுத்து நீரின் அழுத்தம் அதிகமாகும். இச்சொற்றொடர்கள் மூலம் ‘ஆழத்தைப் பொறுத்து அழுத்தம் மிகுகின்றது” என்ற அறிவியல் உண்மையை #ஒளவையார் கூறுகிறார்.
நீர்ப் பொருள்களின் சுருங்காத்தன்மையைப் #பாஸ்கல் கண்டறிந்து கூறுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே #ஒளவையார் இக்கருத்தைக் கூறியுள்ளார்.
- நன்று.
ஆழ்ந்த இரங்கல்.
புலவர்.செ.இராசு அவர்கள் காலமானது மிகத்துயரமானது.
தமிழின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான புலவர் இராசு அவர்கள் 2.1.1938 அன்று பிறந்தவர். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், கல்வெட்டியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். எண்ணற்ற வரலாற்று நூல்களை எழுதியவர். கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் எனும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
பேரூராதினப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பணிச் செம்மல் போன்ற பல பட்டங்கள் பெற்றவர்.
தமிழ் நாடு அரசு உ.வே.சா. விருதை முதல்முறையாக இவருக்கு வழங்கி தன்னை பெருமைப்படுத்திக் கொண்டது.
ஆய்வுகளில் அவரது பங்களிப்புகள் போற்றக் கூடியன.
இவரது மறைவு தமிழ் உலகுக்கு மிகப்பெரிய பேரிழப்பு..
வாளால் வெட்டி அடக்கம் செய்தல்...!
குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தாலோ, இறந்தே பிறந்தாலோ அவற்றை வாளால் வெட்டியே புதைப்பது அக்காலத்திய பழக்கமாகும். குழந்தை வடிவம் பெறாமல், குறை வடிவமாக வெறும் சதைப் பிண்டமாக இருந்தாலும் இப் பழக்கத்திலிருந்து தப்ப இயலாது என்பர்.
இவ்வாறு வெட்டிப் புதைக்கும் பழக்கம் இன்னொரு பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. 'பிறந்தோர் யாவரும் - சிறப்பாக ஆடவர் யாவரும் - நாட்டுக்காகப் போர்க்களத்தில் உயிரைவிட வேண்டும்' என்று சங்ககால மக்கள் கருதினர். இந்த உணர்வு, உலகின் பல்வேறு நாடுகளிலும் வீரயுகக் காலத்தில் இருந்ததை வரலாறு பேசுகிறது.
இவ்வாறு இறந்தால்தான், துறக்க இன்பம் - வீர சுவர்க்கம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர். ஆகவே, போர்க்களத்தில் இறக்கும் வாய்ப்பினைப் பெறாது, குழந்தைப் பருவத்தில் இறந்தாலும், முதுமையுற்று இறந்தாலும், இறந்த பின்னர் சங்ககாலத் தமிழ்மக்கள் வாளால் வெட்டித்தான் புதைத்தனர்.
நோயினால் இறந்தோரை, போர்க்களத்தில் உயிரை விடாத குற்றம் நீங்கும்படி, பசும்புல்மீது கிடத்தி, அறநெறியில் வாழும் நான்மறை முதல்வர்கள், ‘வீரமே துணையாகப் போர்க்களத்தில் இறந்தோர் செல்லுமிடம் செல்க' எனக் கூறி, வாளால் வெட்டிய பிறகு அடக்கம் செய்வது பண்டைத் தமிழரின் பழக்கமாகும்.
இக்காலத்தில், முதியோர் இறந்தால் இவ்வாறு செய்வது இல்லை. ஆனால், குழந்தை இறந்துவிட்டால், இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு முன்பு, சிறு கத்தியாலோ, காட்டு முள்ளினாலோ கைவிரல்களில் ஓரிடத்தில் சிறப்பாக நுனி விரலில் கீறி அடக்கம் செய்வதைக் காணலாம்.
சில சமூகங்களில் காதிலேனும் மூக்கிலேனும் கீறி அடக்கம் செய்யும் வழக்கம் இருந்துவருகிறது. இதனைப் பண்டைக் காலப் பழக்கத்தின் 'எச்சமிச்சம்' எனலாம்.
- நன்று.
பழந்தமிழர்கள் கொண்டாடிய புதுப்புனல் விழா...!
பேராறுகளில் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டு இருந்தாலும், நீர்பெருகிப் புதுநீர் வருவது இயல்பு என்பதை எல்லோரும் அறிவார்கள். அவ்வாறு #புதுநீர் வரும்பொழுது மக்கள் திரண்டு சென்று பார்த்து மகிழ்வதை இக்காலத்தில் காண்கிறோம்.
ஆனால், பழைய காலத்தில் #புதுப்புனல் வரும்போது மக்கள் விழாக்கோலம் பூண்டு அங்குச் சென்று வழிபாடு செய்து, பிறகு நீராடி மகிழ்வது வழக்கம் என்பதைப் பழந்தமிழர் இலக்கியங்கள் கூறுகின்றன. (கோப்புக்காட்சி: பொன்னியின் செல்வன்).
'கழாஅர்ப் பெருந்துறை'யில் #ஆட்டனத்தி என்பவன் விழாக் காலத்தில் நீராடினான் எனப் #பரணர் குறிக்கிறார். 'விழவின் ஆடும்' என்னும் சொற்றொடர் அவரால் தரப்படுகிறது. இந்த
ஆட்டனத்தியின் அழகு காரணமாகக் காவிரி நங்கை அவனை அணைத்துக் கொண்டாளாம். அப்பொழுது அவனுடைய காதலி அவனுடன் விழா நீராடியவள், அவனைக் காணாமல் தேடத் தொடங்கிப் பிறகு பெற்றாளாம்.
இவ்வாறு இந்நிகழ்ச்சியைப் #பரணர் தம் பாடலில் பாடும்போது 'விழா'வைப்பற்றிக் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சி காவிரியில் நடைபெற்றதாகும்.
#பரிபாடல், வையைப் புதுப்புனல் வந்தகாலை மக்கள் மகிழ்ந்து விழாவெடுத்ததைச் சித்திரிக்கிறது. வையையில் புனல் பெருகியதை அறிந்த மகளிரும், அவர் கணவன்மார்களும் விழாக்கோலம் பூண்டு #வையை நோக்கிப் போயினர். பூ, தீ போன்ற ஆராதனைப் பொருள்களை மகளிர் ஏந்திச் சென்றனர். பிறகு மைந்தரும், மகளிரும் நீரில் மகிழ்ந்து நீராடினர்.
பெண்கள் தொய்யில் அழிய, வளை அலைய, மேகலைகள் உதிர, சந்தனம் அழிய ஆடினர். அப்பொழுது அவர்கள் தம் கணவன்மாரோடு நெருங்கி ஆடியதால், இருவருடைய அணிகலன்களும் ஒன்றோடு ஒன்று மாட்டிக்கொண்டன. இவ்வாறு ஆணும், பெண்ணும் மகிழ்ச்சியுடன் புதுப்புனல் விழாக் கொண்டாடினார்கள். 1/n
தமிழ் மன்னர்களின் பிறந்தநாள் விழாவும், உலாப் போதலும்...!
அரசனது பிறந்தநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டது. அது #பெருமங்கலம் என்று தொல்காப்பியத்தில் பெயர் பெற்றது. அந்நாளில் அரசன் சிறைக் கோட்டத்தைக் காலி செய்வான்; சில வரிகளை நீக்குவான்; பலவகைத் தானங்களைச் செய்வான்.
முதலாம் இராசராசசோழன் சதய நாளில் பிறந்தவர். ஆண்டுதோறும் அந்தநாள் கொண்டாடப்பட்டது. அவர் சேரநாட்டுத் திருநந்திக் கரையில் இருந்த சிவன் கோவிலில் சதய நட்சத்திர நாளைக் கொண்டாட ஒரு சிற்றூரையே தானமாக அளித்தார் .
போரில் சிறந்து விளங்கிய தலைவர்களுக்கும், வீரர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அரசன் தனது ஆட்சி மண்டபத்திலிருந்து கொண்டு #ஏனாதி, #மாராயன் போன்ற பட்டங்களையும், மோதிரம் முதலிய பொருள்களையும் வழங்கிச் சிறப்பிப்பது வழக்கம்.
பிற்காலச் சோழர் காலத்தில் பிற உயர் அலுவலர்க்கும் #அரையன், #பேரரையன் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
சங்க இலக்கியங்களில் ஒவ்வொரு நிலத்திற்கும், ஒவ்வொரு பெயர்...!
பொதுவாக மழைநீரை மட்டும் எதிர்நோக்கி இருக்கும் நிலத்தை #புன்செய் என்பர். இந்நிலத்திற்கு 'மானாவாரி நிலம்' என்ற பெயரும் வழங்குகிறது. இதற்கு நேர்மாறாக ஆறு, ஏரி முதலான நீர்ப் பாசனம் கொண்ட நிலத்தை #நன்செய் என்று கூறுவர். இந்த இரு வகையான நிலங்களையும் சேர்த்து #நிலபுலம் எனச் சொல்வதுண்டு.
நிலத்தில் தொடர்ந்து பயிர் செய்தலைச் #செய்கால் (எட்டையப்பள்ளு, 85) என்பர். தொடர்ந்து பயிரிட்ட நிலம், சிறிது காலம் பயிரிடாமல் விட்டால் அதைக் #கரம்பு என்பர் (கம்பராமாயணம் 33:4). 'தரிசு நிலம்' என்பது மக்கள் வழக்கு.
புன்செய் நிலத்தை #காடு என்று சொல்வதுண்டு. அந்நிலத்தில் வளமுடைய செம்மண் இருப்பதால் அதைச் #செம்புலம் (குறுந்தொகை, 40:4), #செஞ்சுவல் (புறநானூறு.120:1), #பூவல் (அகநானூறு, 194:3) என்று கூறினர். இன்றும் செம்மண் நிலத்தைச் #செங்காடு என்று கொங்கு நாட்டில் வழங்குவர்.
சிந்துவெளி வரிவடிவம் மற்றும் குறியீடுகளை #தமிழி எழுத்துக்களுடன் ஒப்பிட்டு, தொடர்ந்து ஆய்வு செய்துவந்த ஆய்வாளர், திரு. பூரண சந்திர ஜீவா அவர்களின் மறைவு குறித்து அறிந்து வருந்துகிறேன்.
தனது உடல்நலத்தை பொருட்படுத்தாமல், அயராது ஆய்வுப் பணிகளை செய்து வந்தவர். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#அங்கணம் என்னுமோர் அரிய சொல்...!
திருக்குறளில் #அவையறிதல் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் தந்திருக்கும் அருமைக் குறள்.
‘அறிவாலே தம் இனத்தவர் அல்லாதவர் கூடியிருக்கும் அவையில் ஒன்றையும் பேசுதல் கூடாது. அவ்வாறு பேசுமொழிகள் தூய்மையில்லாத முற்றத்தில் விழுந்த அமுதினைப் போன்றதாகும்' என்பது இக்குறட்பாவின் பொருள்.
#அங்கணம் என்னும் சொல்லை வள்ளுவர் இக்குறட்பாவில் எடுத்தாண்டுள்ளது சிறப்பானது.
அன்றைய #திருநெல்வேலி மாவட்டத்தில் #அங்கணம் என்னும் சொல் புழக்கத்தில் இருந்த சொல்லாகும். ஓடு வேய்ந்த வீடுகளில் #அடுக்களை என்னும் சமையல் செய்கின்ற பகுதியில் தென்மேற்குப் பகுதியில் #அங்கணம் அமைந்திருக்கும். தரையிலிருந்து சற்று பள்ளமாக இவ்வங்கணத்தை அமைத்திருப்பர்.
இதனை சமையல் செய்த பாத்திரங்களைத் துலக்குவதற்குப் பயன்படுத்துவர். பெண்களின் குளியலறையாகப் பயன்படுத்துவதும் வாடிக்கை. பல ஆண்டுகளாகப் பயனில் இருந்த இச்சொல் புதிதாகக் கட்டிய வீடுகளின் வருகையால் மக்களின் பேச்சு வழக்கிலிருந்து விடை பெற்றுக்கொண்டன.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் #திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்றிருந்தால் 'அம்மா பால் கெட்டுப்போன மாதிரித் தெரியுது' என்று பிள்ளைகள் சொன்னால்;
தாய், பாலை வாங்கி மோந்து பார்த்து விட்டு ‘ஆமா பால் திரிந்து விட்டது அங்கணத்தில் கொட்டிடு' என்று கூறுவார். #அங்கணம் என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் இருந்த சொல்லாகும்.
தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாவும், திருமுழுக்குப் பெயரும்...!
முடி சூடிக்கொண்ட பின்னரே ஒருவன் சட்டப்படி அரசனாகிறான்; ஆட்சி உரிமையைப் பெறுகிறான். அதனாற்றான் முதலாம் இராசாதிராசன் #கொப்பம் போர்க் களத்தில் இறந்தபோது இளவரசனான அவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் அப்போர்க்களத்திலேயே முடி சூடிக்கொண்டான். இதனை நோக்க, முடிசூட்டு விழா அரசியல் சிறப்பு வாய்ந்தது, சட்டதிட்ட முக்கியத்துவமும் வாய்ந்தது என்பதை அறியலாம்.
முடி சூடிக்கொள்பவனுக்கு இன்ன வயது இருக்க வேண்டும் என்னும் வரையறை இல்லை. சங்க கரிகாற் சோழன் ஐந்து வயதில் முடி சூட்டப்பெற்றான் என்று ஒரு பழம்பாடல் கூறுகிறது.
'தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்' பகைவரை வென்று மீண்ட பொழுது, 'தாலி களைந்தன்றும் இலனே' என்று இடைக்குன்றூர் கிழார் என்ற புலவர் வியந்து பாராட்டினார்.
அதாவது, கண்ணூறு (திருஷ்டி), குறை (தோஷம்) முதலியன தாக்காதிருப்பதற்குப் பிள்ளைப் பருவத்தில் கழுத்தில் கட்டப்படும் #ஐம்படைத்தாலி, இளைஞனானதும் நீக்கப்படுதல் மரபு. அரசனான நெடுஞ்செழியன் அதை நீக்கவில்லை என்பது, அவனது மிக்க இளமையைக் குறித்தவாறாம். எனவே, அவன் சிறுவனாக இருந்தபொழுதே அரசனானான் என்று கருதுதல் தகும்.