இன்றைய தினம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், இயற்கை பேராசான், அமரர் நம்மாழ்வார் அவர்களின் மாணவர்கள் திரு. சபரிநிவாஸ் இளங்கோவன் மற்றும் திரு. கணேசமூர்த்தி முத்துசாமி நடத்தி வரும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனமான, Mudfield Natural Farming நிறுவனத்துக்க���ச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
ஐயா நம்மாழ்வார் அவர்களால் உந்தப்பட்டு, தங்கள் பெருநிறுவன வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்துக்காக, தங்களை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல தடைகளைக் கடந்து, இன்று, இயற்கை விவசாயத்தில் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக, தங்கள் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
விவசாயிகள��� ஒருங்கிணைத்து, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயிற்சியும் அளித்து, இன்று 800 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில், இயற்கை விவசாயம் செய்ய வைத்து சாதித்திருக்கிறார்கள். அத்தோடு நில்லாமல், அவர்களின் விளைச்சலை சந்தைப்படுத்துதலிலும் உதவியாக இருந்து, தமிழகம் முழுவதும் இன்று இயற்கை உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
பாரம்பரிய அரிசி ரகங்களான, தூயமல்லி, கி���்சிலி சம்பா, காட்டுயானம், கருங்குற���வை, பூங்கார், ரத்தசாலி, பால் குடவாழை, குள்ளக்கார் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நெல் வகைகளை, விவசாயிகள் பயிரிட உதவியாக இருக்கிறார்கள்.
நஞ்சில்லா உணவு என்ற உயரிய நோக்கத்தோடு செயல்படும், திரு. சபரிநிவாஸ் இளங்கோவன் மற்றும் திரு. கணேசமூர்த்தி முத்துசாமி மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை விவசாயம் தொடர்பான அவர்கள் தொடர்முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவும் எனது வாழ்த்துக்கள்.
@annamalai_k தங்கள் வாழ்த்து எங்களுக்கு மிகப்பெரியது அண்ணன். 3 மாதங்களுக்கு முன்புதான் எங்கள் தாணிய கிடங்கு சூராவளியும் மழையும் சேர்ந்து வந்த காரணத்தால் பெருத்த நஷ்டமடைந்து மீண்டும் மீண்டுவந்து கொண்டிருந்தோம். இந்த சூழலில் வரு��ையும் வாழ்த்தும் நிச்சயம் எங்களையும் விவசாயிகளையும் உயர செய்யும்
அனைவருக்கும் ஆடிப்பெருக்கு தின வாழ்த்துக்கள்.
புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நேற்று இரவு பெய்த மழையினால் மழைநீர் நாம் சீரமைத்த கால்வாய்கள் மூலமாக கவிநாடு ��ண்மாய்க்குள் வந்து கொண்டிருக்கிறது.
நீரின் சத்தத்தை கேளுங்கள்😍
நீரின்றி அமையாது உலகு!
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#BounceBackDelta #SaveWater #Cauvery #MegaFoundations #WaterCrisis #SDG