நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
From ruling the hearts of millions on screen to earning the trust of the people & leading from the front, your journey is truly one of a kind 🔥
▶️ https://t.co/6jlna7nPvx
Wishing the Hon’ble Chief Minister @CMOTamilnadu C. Joseph Vijay sir a very Happy Birthday ♥️
#HBDCMJosephVijay
Happy Birthday @TVKVijayHQ
மக்களின் நம்பிக்கையை சுமந்து நடக்கும் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சி, மக்களின் நலன் என உங்கள் பயணம் மேலும் சிறக்கட்டும்.
வாழ்க வளமுடன்! 🎉
#HBDCMJosephVijay
அன்பிற்கினிய @TVKVijayHQ ,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உறுதியுடனும் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள். தங்களின் பயணம் மேலும் சிறக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பங்களிக்கவும் மனமார்ந்த வாழ்த்துகள்.
"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
நேற்றைய ஜெயம் ரவியின் அழுகைக்குப் பிறகு தான் தெரிகிறது மேடைக்கு மேடை அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கேன்னு சொல்லும்போது அந்த வார்த்தையின் வலியின் ஆழம் இப்ப புரிகிறது🥹 @TVKVijayHQ
கச்சத்தீவை வைத்து பலர் அரசியல் செய்தாலும்.. தளபதி விஜய் மட்டும் தான் எனது மண் எனக்கு வேண்டும் தொணியில் உணர்வுபூர்வமாக கேட்டார்..
முதல்வர் விஜய் கச்சத்தீவு விஷயத்தை பொறுமையாக கையாள வேண்டும் இங்கிருக்கும் தமிழர்கள் கேட்பதை செய்ய தயாராக உள்ளோம் - இலங்கை MP Archchuna
@CMOTamilnadu
திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் ஆஜர்படுத்தி அதிரடி காட்டிய எஸ் பி 👌🏻
TVK power 🔥
இனி காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நேர்மையாக தங்கள் பணிகளை செய்ய முடியும்💪🏻