தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறை இன்று நாம் உரையாற்றிய நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், சென்னை SIET மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், குடும்பத்தினருடன் சென்று, நமது வாக்கினைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினோம்.
வாக்களிப்போம், ஜனநாயகத்தையும்- அரசியலமைப்பையும் காப்போம்!
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து விட்டு சொந்த வீட்டுக்கு வந்த உணர்வோடு இன்றைய தினம் நம் #ChepaukTriplicane தொகுதிக்குட்பட்ட,திருவல்லிக்கேணி பகுதி 119, 119 அ, 120, 120 அ வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்தித்தோம்.
திராவிட மாடம் 2.0 ஆட்சியை எதிர்நோக்கியுள்ள நம் தொகுதி மக்கள் நம்மை அவர்கள் வீட்டு பிள்ளையாக ஆரவாரத்துடனும்,எழுச்சியுடனும் வரவேற்றனர்.
நம் மக்களின் எழுச்சிமிகு வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்தோம்.
நம் தொகுதி மக்களின் நம்பிக்கையை என்றும் காப்போம்.
மதவாத பாசிச கூட்டணியை வீழ்த்தி,மக்கள் நலன் காக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெல்ல செய்வோம்.
மீண்டும் உதிக்கட்டும் உதயசூரியன்!
#DMK4TN #ChennaiWithDMK
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் @V_Senthilbalaji & கோவை வடக்கு தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் செந்தமிழ் செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
CBI,IT,ED உள்ளிட்ட திரிசூலங்களை எதிர்கட்சிகள் மீது ஏவி விட்டு மிரட்டி அடியப்பணிய வைத்து விடலாம் என்கிற பாசிசவாதிகளின் முயற்சி அடிமை கூட்டத்திடம் வேண்டுமானால் எடுபடலாம் செந்தில் பாலாஜி போன்ற கழகத்தின் தீரர்களிடம் ஒருபோதும் எடுபடாது என்பதை உறுதியாக எடுத்துரைத்தோம்.
தமிழ்நாட்டு மக்களை பிரிக்க நினைக்கும் பாசிச கூட்டத்தை தீரத்துடன் எதிர்த்து போராடி தமிழ்நாட்டை காக்க உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவளிக்குமாறு அன்போடும்,உரிமையோடும் கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும்,தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரர் @gauthamponmudy அவர்களுக்கு ஆதரவாக, இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
ஐந்தாண்டு கால ஆட்சியில், திருக்கோவிலூருக்கு திராவிட மாடல் அரசால் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும் அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தோம்.
மக்கள் விரோத பாசிசவாதிகளையும்,அவர்களின் பாதம் தாங்கிகளையும் வீழ்த்தி, மீண்டும் கழகக் கூட்டணியை வெற்றி பெற செய்வோம்.
உதயசூரியன் உதிக்கட்டும்,பாசிச இருள் மறையட்டும்!
@KPonmudiMLA #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
மன்னை மண்ணின் மைந்தர் அன்புச் சகோதரர் @TRBRajaa அவர்களுக்கு மன்னார்குடியில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே, உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில், விண்ணை எட்டும் சாதனைகளுடன் மன்னை ‘மின்னும்’ மன்னையாக உயர, நாம் ஆற்றிய பணிகள் சொல்லி, திராவிட மாடல் 2.0-வில் செயல்படுத்தப்போகும் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு உரையாற்றினோம்.
அடிமைத்தனத்திற்கும் துரோகத்திற்கும் பெயர் பெற்ற #NDA கூட்டணியை வீழ்த்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய, முத்தமிழறிஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலிருந்து சூளுரைத்தோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் சகோதரர்
@ManachanallurSK அவர்களுக்கு நம் வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
அரசியல் உரிமை, நிதி உரிமை, மொழி உரிமை என அனைத்து உரிமைகளையும் பறிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜகவையும்- அவர்களுக்கு பாதம் தாங்கும் முரட்டு அடிமைகளையும் வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தோம்.
மண்ணச்சநல்லூரின் மேம்பாட்டுக்குத் #திராவிடமாடல் அரசு தொடர வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
கொட்டும் மழையில் கழகம் தொடங்கப்பட்ட பெருமைக்குரிய இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @DrSubair_Khan அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.
ஆதிக்கவாத டெல்லி அணிக்கும் சுயமரியாதை மிக்க தமிழ்நாடு அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போரில் பாசிஸ்டுகளையும் அவர்களின் அடிமைகளையும் வீழ்த்தி வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டுமென உரையாற்றினோம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான சைதாப்பேட்டை தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் -மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்களுக்கு வாக்கு சேகரித்தோம்.
கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டலில் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மகத்தான சாதனைகள் செய்து தமிழ்நாட்டின் மருத்துவக்கட்டமைப்பை உறுதியுடன் நிலைக்கச் செய்ததோடு, தன் சைதை தொகுதியின் வளர்ச்சிக்கும் அயராது உழைத்து வரும் அண்ணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென மக்களிடம் அன்புடன் கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாட்டை கூறுபோட துடிக்கும் பாசிசவாதிகளையும், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் அடிமை கூட்டத்தையும் தோற்கடித்து வெல்வோம் ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK
#NDA-வின் Double Engine செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கு புதுமைகள் அற்ற புதுச்சேரியே சாட்சியாக உள்ளது.
இன்றைய தினம் புதுச்சேரியில் அண்ணா சிலை அருகே நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, காலாப்பட்டு , கதிர்காமம், ராஜ்பவன் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்களுக்கு ஏப்ரல் 9 அன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளைச் செலுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#SPAForPondy #VoteForDMK
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறோம். இன்றைய தினம் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @kvmuthuramaling அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசின் சாதனைகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள், #NDA கூட்டணியின் துரோகங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி உரையாற்றினோம்.
#திராவிடமாடல் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் சிறக்கட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #VoteForDMK
தமிழர்களைப் பிளவுபடுத்த நினைக்கும் மதவாத சக்திகளுக்கு எதிராக கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் ஓரணியில் திரண்டு நிற்கிறது மதநல்லிணக்க மண்ணான தமிழ்நாடு.
இந்த நிலை தொடர மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாடெங்கும் வெற்றி பெற வேண்டுமென, முதுகளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @RRajakannappan அவர்களை ஆதரித்து வாக்காளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
மே 4 அன்று முதுகளத்தூரில் மீண்டும் உதயசூரியன் வென்று #திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
@kvmuthuramaling
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #VoteForDMK
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடந்த ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில் செய்துள்ள சாதனைகளையும், அதற்கு காரணமான திட்டங்களையும் பட்டியலிட்டு, கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் @PitchandiK அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
இந்தியாவிலேயே No.1 மாநிலமாக Double Digit-ல் வளரும் தமிழ்நாட்டுக்கு Double Engine என்ற டப்பா என்ஜின் தேவையில்லை என்பதை எடுத்துக்கூறி, அடுத்து வரும் 29 நாட்களும் கழகக் கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டுமென உரையாற்றினோம்.
#வெல்வோம்_ஒன்றாக @evvelu #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் பட்டியலை, பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களில் வைத்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள், இன்று மரியாதைச் செலுத்திய போது நாம் உடனிருந்தோம்.
234 தொகுதிகளிலும் நம் கூட்டணி வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்து - திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திடுவோம் என்ற இலட்சியத்துடன் தேர்தல் பணியாற்றிடப் புறப்படுவோம்.
தலைவர் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்ய பாக வாரியாக #களத்தில் இளைஞர் அணி எனும் முன்னெடுப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் கிளை-வார்டு-பாக @dmk_youthwing நிர்வாகிகளைக் கொண்டு மேற்கொள்ள உள்ளோம். இந்த முன்னெடுப்பு குறித்து, உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநிலம் முழுவதும் மாவட்ட-மாநகர - ஒன்றிய - நகர - பகுதி -பேரூர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
அந்த வகையில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட-ஒன்றிய-நகர -பேரூர்களைச் சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை சிவகங்கையில் இன்றய தினம் நடத்தினோம்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கும் ஜனநாயகப் போரில் #NDA எனும் மக்கள் விரோத கூட்டணியை வீழ்த்தி, கழகத்தை ஏழாவது முறையாக அரியணை ஏற்றுவோம் - வரலாறு படைப்போம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான வெற்றிக்கூட்டணியின் முன்கள வீரர்களாகச் செயலாற்றப்போகும் @dmk_youthwing-ன் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் கோவையில் நடத்தினோம்.
வட்டம், கிளை, பாகம் வரை நியமிக்கப்பட்டிருக்கும்
நம் இளைஞர் அணி நிர்வாகிகளைக் கொண்டு வீடுவீடாக மேற்கொள்ளப்போகும் ‘#களத்தில்_இளைஞர்_அணி ’பிரச்சாரப் பயணம் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, டெல்லியில் இருந்து Assemble செய்யப்பட்ட NDA கூட்டணியின் துரோகங்களையும், ஐந்தாண்டுக்கால 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்திடுமாறு உரையாற்றினோம்.
அடுத்து வரும் 32 நாட்களும் கழகத்திற்காகக் கடமையாற்ற களத்தில் இளைஞர் அணிச் செயல் வீரர்கள் தயார்! 2026-ல் மீண்டும் கழக அரசு அமைய அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, பெரியாரிய சிந்தனையாளர் - சமூகநீதி காவலர் அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவை பெரம்பலூரில் இன்று தொடங்கி வைத்து, அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டோம்.
மேலும், அய்யாவின் நூற்றாண்டு மலரை வெளியிட்டோம்.
தந்தை பெரியார் வழியில் சமூக நீதி - சுயமரியாதை - பகுத்தறிவு சிந்தனைகளை வாழ்நாள் முழுவதும் பரப்பிய ஆனைமுத்து அய்யாவின் புகழ் ஓங்கட்டும்.
@sivasankar1ss@dmk_raja #PrabahakaranMLA @kannankosaka1 #ChinnappaK