மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் முன்னிலையில் 17-வது சட்டமன்றப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சியை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள்.
#CMJosephVijay
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
'Trans Rights Now Collective' இயக்கத்தின் நிறுவனர் - இயக்குநர், பதிப்பாளர், எழுத்தாளர் மற்றும் திருநர் செயற்பாட்டாளர் தோழர். கிரேஸ் பானு அவர்களுடன், நேற்று தலைமைச் செயலகத்தில் திருநங்கை, திருநம்பிகள் சமூக - பொருளாதார மேம்பாடு குறித்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடினோம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
#CMJosephVijay
ஏழை எளிய மாணவர்களுக்குப் பயனளிக்கும் ‘தளபதி விஜய் இலவச பயிலகம்’ - 834-வது நாள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கழகப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கு. ஜெகதீஸ்வரி அவர்களின் உத்தரவின் பேரிலும், தளபதி விஜய் இலவச பயிலகம் இன்று 834-வது நாளை எட்டியுள்ளது.
இப்பயிலகம், கல்வி கற்க வசதியற்ற 109 ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் விளங்கி வருகிறது. @CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
சென்னை பன்னாட்டு விமான நிலைய முனையத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான “கோ-ஆப்டெக்ஸின்” நேரடி விற்பனை நிலையத்தை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் இன்று (15/06/2026) திறந்துவைத்தார்!
#TVKVijay
நாமக்கல் மாவட்டத்தில் 2025 -26 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், அப்பள்ளிகளின் ஆசிரியர் பெருமக்களுக்கும் இன்றைய தினம் அரசு சார்பில் பாராட்டு விழா ராசிபுரம் பாவை கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர்கள் திருமதி @viji06pv, திரு. @logintvk , மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு சி.எஸ்.திலீப், திரு பொ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு லி.மதுபாலன் IAS ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி உரையாற்றினோம்.
"பாடப்புத்தகங்களோடு நின்று விடாமல்... தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், சக பாலினத்தை மதிக்கும் பண்பு ஆகியவற்றை ஆசிரியர்கள் இன்னும் அதிகமாய் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் கடமை காவல்துறைக்கு முன்பே ஆசிரியர்களுக்கு உண்டு. பள்ளிகளில் உள்ள நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்த ஊக்குவித்து, பாடப்புத்தகங்கள் தாண்டிய மற்ற புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
சின்ன குழந்தையாக உங்கள் கைகளில் ஒப்படைக்கப்படும் மாணவர்களை... நல்ல மதிப்பெண்களோடு மட்டுமல்ல- சமூகத்தில் மதிப்புமிக்க பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பும் ஆசிரியர் சமுதாயத்திடம் தான் உள்ளது" என்று உரையாற்றினோம்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl | @tnschoolsedu |
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
நேற்று (14.06.26), அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெருந்துறையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ திரு ஆனந்த் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வின் போது, மருத்துவமனை கட்டிடங்களின் முறையான பராமரிப்பு, சுத்தமான கழிப்பறை மற்றும் நோயாளிகளுக்கு திருப்திகரமான வகையில் உயர்தர சிகிச்சை அளித்திட மருத்துவர்கள், உரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட செயல்பட வேண்டுமென்று மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வலியுறுத்தப்பட்டது. இதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம் என்று முதல்வர், ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பாக உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனை கேண்டீனில் விலை பட்டியல் இல்லாதது, உணவு பொருட்கள் தவிர மற்ற பொருட்களும் விற்பனை செய்தது, சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் (RO) வழங்காதது குறித்து ஒப்பந்ததாரரிடம் உரிய விளக்கம் கேட்க மருத்துவமனை முதல்வரிடம் மாண்புமிகு அமைச்சர் கேட்டுக் கொண்டதை அடுத்து இன்று ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை (Show cause notice) அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் கேண்டினில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களில் இருந்து மாதிரிகள் (Food samples) எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இம்மருத்துவமனையில் புதிதாக மேலும் ஒரு கேண்டினும், பல்பொருள் அங்காடியும் வைப்பதன் மூலம் நோயாளிகளுக்கும், உடன் வருவோருக்கும் கூடுதல் வசதிகளும், அதேசமயம் மருத்துவமனைக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் வகையில் புதிய டெண்டர் கோரும்படி மாண்புமிகு அமைச்சர் கேட்டுக் கொண்டதை அடுத்து அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் எடுக்கப்படும் என மருத்துமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
#CMJosephVijay
இராமநாதபுரம் மாவட்டம்,தேவிப்பட்டினம், தேர்போகிகிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீரத் தீரச் செயலைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.48 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மனித வள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சர் திரு. டி. சரத்குமார் அவர்கள், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி ரீட்டா ஹரிஷ் தக்கர், IAS, சிறப்புச் செயலாளர் திருமதி அ. சுந்தரவல்லி, IAS உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றும் வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் தமிழ்நாடு அரசு என்றும் உயர்வாக மதித்து கௌரவித்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. எஸ். ராமகிருஷ்ணன், செயலாளர் திரு. எஸ். சங்கர ராமன், செயற்குழு உறுப்பினர் திரு. அன்பு ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் சார் அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழ்நாட்டில் இருந்து புனித ஹஜ் யாத்திரை பயணமாக 6363 நபர்கள் சென்று இருந்தார்கள் அதன் தொடர்ச்சியாக ஐந்தாவது விமானத்தின் மூலம் இன்றைய தினம் 402 ஹாஜிமார்கள் புனித ஹஜ் யாத்திரை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் வருகை தந்தார்கள் அவர்களை மனமகிழ்ச்சியுடன் வரவேர்த்ததோடு அவர்களுக்கு நினைவு பரிசையும் வழங்கினேன்