வெற்றிமாறன் அண்ணே.. 1200 மதிப்பெண் எல்லாம் 2018-லயே மாற்றி 600 மார்க் கொண்டு வந்தாச்சு னா.. கடமைக்கு ஏன் னா இந்த மேடைக்கு போறீங்க.. ரெண்டு பொருள உருவி, மாள ஒன்னு போட்டா சரியா போதுன்னு பேசுறது தான் நமக்கு சரி னா.. நீட் எல்லாம் வேணாம் னா.. படிக்கிற பசங்க அதுவா புழைச்சிக்கும் னா...
தருமபுரி மாவட்டம் - காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி ஜம்பேரி ஏரியிலிருந்து சென்றாயன அள்ளி ஏரிக்கும், சென்றாயன அள்ளி ஏரியிலிருந்து தொன்னயன அள்ளி ஏரி வரை, எனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் நிதியிலிருந்து ரூ 18.10 லட்சம் மதிப்பீட்டில் 200 MM HDPE பைப்லைன் அமைத்து, ஏரிகளில் நீரேற்று மூலம் நீரை நிரப்பி விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் திட்டத்தை துவக்கி வைத்த போது.!
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல் பற்றி விசாரணை தேவை!
திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த அவல நிலைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற நடத்தை தான் காரணமாகும். மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சிவகாமியம்மாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற கடைசி வரை மருத்துவமனை முயன்றிருக்க வேண்டும். அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் கூட, அந்த மூதாட்டியின் உடலை மரியாதையுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்க முடியும்.
ஆனால், அதை செய்யாத நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், உயிருக்கு கடுமையாக போராடிக் கொண்டிருந்த நிலையிலேயே சிவகாமியம்மாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி அவரது மகன் பாலனிடம் கூறியது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். மருத்துவமனையிலிருந்து சிவகாமியம்மாளை அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்து விட்டதால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாத பாலன், தமது தாயாரின் உடலை மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார். இப்படி ஒரு நிலை ஏற்படுவதை மருத்துவமனை நிர்வாகம் தவிர்த்திருக்க வேண்டும்.
சிவகாமியம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக அவரது மகன் பிடிவாதம் பிடித்ததால் தான், வேறு வழியின்றி அனுப்பி வைக்க நேரிட்டதாக மருத்துவக் கல்லூரி முதன்மையர் ரேவதி கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தின் பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நிலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. நோயாளிகளின் உறவினர்களே பிடிவாதம் பிடித்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அதை அனுமதிக்கக் கூடாது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து எத்தகைய சூழலில் சிவகாமியம்மாள் அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். சிலர் சென்டிமெண்ட் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் விரும்பினால், மருத்துவப் பணியாளர்களின் கண்காணிப்பில், உரிய வசதிகள் கொண்ட அவசர ஊர்தி வாயிலாக மட்டுமே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதை மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
“உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அளித்த உத்தரவாதத்தை 1000 நாட்கள் ஆகியும் நிறைவேற்றினோமா என்பதை நேர்மை, மனசாட்சியுடனும் ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்.”
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
யாரை திருப்தி படுத்த
வன்னியர் சமூகத்திற்கு
இவ்வளவு பெரிய துரோகத்தை
திமுக அரசு செய்கிறது.
தன்னை சமூகநீதி ஆட்சியாளர்
என பீற்றிக்கொள்ளும்
தமிழக முதல்வரே
வன்னியர் இடஒதுக்கீடு
என்ன ஆச்சு...
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
அதிகாரம் ஏதுமில்லாத சமுதாயம் வன்னியர்களே!
அரசு செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், துணை வேந்தர்கள், பத்திரிகை முதலாளிகள் என அதிகாரமிக்க இடங்கள் எதிலும் போதிய எண்ணிக்கையில் இடம்பெறாமல் அனைத்திலும் ஓரங்கட்டப்பட்டிருப்போர் வன்னியர்களே!
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
பிறர் பங்கை எடுத்துக்கொள்வதும், அதை வேடிக்கை பார்ப்பதும் துரோகம். வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் பாமக தலைவர் சொல்வதைக் கேளுங்கள்.
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
உச்சநீதிமன்ற தீர்ப்பு 31.03.2022👇
"வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது"
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் ஆன பின்னரும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு அளிக்க மு.க. ஸ்டாலின் மறுப்பது ஏன்?
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
திருவண்ணாமலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் மாநில மாநாட்டில், மருத்துவர் அய்யா மற்றும் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி ஆகியோருடன் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.! @drramadoss | @Sowmiyanbumani
திமுக தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு இருக்கும்
அமைச்சர் @Kayalvizhi_N அவர்களுக்கு இந்த அவமானம் தேவையா?
@PMKAdvocateBalu@TNPSC_Office
மோசடி பண்ணது மட்டும் அல்ல, கமிஷனர் அலுவலகத்தில் தர்ணா பண்ணாங்க...
யாருக்கும் அந்த தைரியம் வராது. மோசடி பண்ணிட்டு கமிஷனர் அலுவலகத்தில் தர்ணா பண்ணா சும்மா விடுவாங்களா?!?
அதை எப்படி திரித்து சொல்கிறான் பாருங்கள்
.@ipspolicetn .@EOWSCAMBUSTER
இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் @CMOTamilnadu
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவிக்கு சித்திரவதை: கொடுமை செய்த, பின்னணியில்
உள்ள அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்!
பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி என்பவரின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்ற பட்டியல் சமுதாய சிறுமி, கடந்த 8 மாதங்களாக தாங்க முடியாத வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஆண்டோ மதிவாணனின் மனைவி மெர்லின் என்பவர், ரேகாவின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் மாணவி ரேகாவின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிறுமி என்றும் பாராமல் ரேகாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.
மாணவி ரேகா மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவரது கனவு. அதை நனவாக்கும் நோக்குடன் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவர், மேற்படிப்புக்கு நிதி திரட்டும் நோக்குடன் தான் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆனால், அங்கு மனித உரிமைகளை மதிக்காமல் 16 மணி நேரம் வரை ரேகா வேலை வாங்கப்பட்டிருக்கிறார்; அதற்காக அவருக்கு எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை என்பதுடன் அடிக்கடி அடித்தும், உதைத்தும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மாணவிக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்ட நிலையில், அதற்காக அவருக்கு மருத்துவம் கூட அளிக்காத திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் குடும்பம், அவரை உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கச் செய்து விட்டு தப்பி விட்டது.
மாணவி ரேகாவை மனிதராகக் கூட மதிக்காமல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய ஆண்டோ மதிவாணன் - மெர்லின் ஆகியோர் மீது நீண்ட இழுபறிக்குப் பிறகு தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் மீது தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அனைத்து திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்புவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது.
மாணவி ரேகாவை கொடுமைப்படுத்தியவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்பவர்கள் மீதும் வழக்கு நீட்டிக்கப்பட வேண்டும். அனைவரிடமும் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் கைது செய்யப்பட வேண்டும். வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl