முதலமைச்சர் விஜய் அரசின் காவல்துறையால் உறக்கமின்றி அலைக்கழிக்கப்படும் ஊடகவியலாளர் விஜயன்.
ஊழலை ஒளித்து வைத்து, ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்டும் தவெக அரசின் செயல்பாட்டுக்கான அப்பட்டமான சாட்சியம்.
அரசுக்கும் காவல்துறைக்கும் வன்மையான கண்டனங்கள்.
வருகின்ற 20.07.2026 அன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (16.07.2026) தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி எழுப்புவது குறித்தும், தமிழ்நாட்டின் குரலை வலிமையாக ஒலிக்கச் செய்வது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
#monsoonsession #parliament #DMK
@arivalayam | @katpadidmk | @Udhaystalin | @KanimozhiDMK | @dmknorthvellore | @DMKITwing
நாகர்கோவிலில் தவெக அரசின் காவல்துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பத்தினரை, கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஊழலை ஒளித்து வைத்து
ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும்
விஜய் அரசு
பழநி கோயில் அறக்கட்டளையின் 100 கோடி ரூபாய் சொத்துகளை 2 கோடி ரூபாய்க்கு அவசர அவசரமாகத் தனியாருக்குப் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் அம்பலப்பட்டிருக்கிறது விஜய் அரசு. நீதிமன்றமும் இந்த மோசடியைக் கண்டித்து, பத்திரப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக பெண்கள் உள்ளிட்ட பதிவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதுடன், விநோத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது விஜய் அரசு. அதாவது, ஊழல் விவகாரத்தை ஒளித்து வைத்துவிட்டு, அது பற்றி பேசியவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒழிக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே த.வெ.க அரசு இப்படித்தான் செயல்பட்டு வருகிறது. முந்தைய கைது நடவடிக்கைகளில் சட்டவழியில் வென்றது போலவே, இந்த வழக்கிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். யோக்கியர்கள் போல மேக்கப் போட்டுத் திரியும் ஆட்சியாளர்களின் உண்மையான கொடூர முகம் இன்னும் நன்றாகத் தெரியட்டும்.
முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது தொடர்பாக கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் பேட்டி.
ஆதாரமில்லாமல் அரசியலுக்காக தொடரப்பட்ட வழக்கு என்ற வாதத்தை ஏற்று முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்
திமுக மீது களங்கம் சுமத்துவதற்காகப் பயன்படுத்திய ‘ஆட்சியைக் கவிழ்க்க’ என்ற வார்த்தையை நீக்கி பின்வாங்கிய தவெக அரசு.
இன்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் திரு. செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர்க்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா அவர்கள் தன்னிடம் ஒரு நபர் ‘நீங்கள் சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது அதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும். உங்க கொறடா என்ன சொன்னாலும் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் உங்களுக்கு நாங்கள் முப்பத்தைந்து கோடி ரூபாய் தருகிறோம்’ என்று சொல்லி ஒரு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் தரப்பு வாதாடும் போது முன்வைத்தது, 26 ஆம் தேதி ஜூன் மாதம் ஏறக்குறைய இரவு பத்து மணிக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக பெயர் குறிப்பிட்டு இருந்தாங்க. ஆனா இருபத்தி ஒன்பதாம் தேதி வரைக்கும் அந்த சட்டமன்ற உறுப்பினர் அது குறித்து எந்த புகாரும் யாரிடமும் தரவில்லை. இரண்டு நாட்களாக எப்படி புகார் அளிக்கலாம் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தலாம் என யோசித்து புகாரை உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.
நாங்க எடுத்து சொன்னது திரு. செந்தில்பாலாஜி அவர்களோ இல்லை அவர்களின் தம்பி அசோக்குமாருக்கும் இதில் தொடர்பு என நேரடியான சாட்சியங்கள் எதுவும் இல்லை. எல்லாருமே காவல்துறையினர்கிட்ட கொடுக்கப்பட்ட நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத, அனுமதிக்கப்படக் கூடாத ஒரு ஒப்புதல் வாக்குமூலம். அதில்தான் இவங்க பெயர் எல்லாம் எழுதி எடுத்துட்டு வந்திருக்காங்க. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக செய்துள்ளரகள் என கூறினோம். அரசு தரப்புல என்ன சொன்னாங்கன்னா, ஒரு நாள்ல திருநாவுக்கரசும், திரு. செந்தில்பாலாஜி அவர்களும் ஒரே நாள்ல ஈரோட்டுல இருந்திருக்காங்க. ஒரு இடத்துல இல்ல. இரண்டு பேரும் ஒரே நாளில் ஈரோட்டுல இருந்திருக்காங்க என்பது தான் அதை தவிர அவங்ககிட்ட எந்த சாட்சியமும் இல்ல. முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், திரு. செந்தில் பாலாஜி குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது களங்கம் விளைவிக்கும் வகையில். நேற்று வரைக்கும் அரசுத் தரப்பில் இருந்து அரசைக் கவிழ்க்கும் எண்ணத்தோடு இது செய்யப்பட்டது அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க.
அப்படியே செய்திகளும் வெளியிட்டன. ஆனா சபாநாயகரை அனைத்து கட்சியும் இணைந்து தான் தேர்ந்தெடுத்தது. அப்படியே சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துல வாக்களிப்பது என்பது Automatic ஆ stopping the government ஆகாது. அதனால் அரசை கவிழ்க்க முடியாது. நாங்க சபாநாயகர் தேர்தல்ல ஆதரிச்சு ஒருமித்த கருத்தோடு தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி இருக்கும் போது அரசை கவிழ்க்கறதா சொல்வது எல்லாம் புகார்ல அவங்களே எழுதி கொண்டது. அந்த புகார்லயே வந்து அந்த திருநாவுக்கரசு அரசை கவிழ்க்கனும்னு எங்கேயும் சொன்னதாக தகவல் இல்லை.
ஆனால் காவல் துறையினரும், அரசு செய்திக்குறிப்புகளிலும் அரசை கவிழ்க்கும் என்ற வார்த்தையை சேர்த்து எழுதிக்கிட்டே வந்தாங்க. இதை நாங்க நேத்து principle செஷன்ஸ் கோர்ட்டில் எடுத்து வாதிட்ட உடனே இன்று திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கும், திரு. அசோக்குமாருக்கும். ஜாமீன் மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட counter affidavit இல் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள். அப்ப அந்த மொத்த முதல் தகவல் அறிக்கையுமே நீர்த்து போய். சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களே இல்லாம இருப்பதால் நீதிமன்றம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிபந்தனை ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள்.
இன்று(03.07.2026), டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற வர்த்தக நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று போக்குவரத்துத்துறை சார் அமைப்புகள், வான்வழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருளாதார மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விழுமியங்களைக்குறித்து துறைசார் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்தோம்.
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
இன்று(01.07.2026), பிறந்தநாள் காணும் வேலூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவரும், மேனாள் மக்களவை உறுப்பினருமான அருமை அண்ணன் திரு. தி.அ. முகம்மது சகி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்!
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
கழக இளைஞரணி செயலாளர் @dmk_youthwing , மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@Udhaystalin அவர்களை அவரது இல்லத்தில் எனது மனைவி திருமதி.சங்கீதா கதிர் ஆனந்த் அவர்களுடன் நேரில் சந்தித்து, எனது மகள் செந்தாமரை - தீபக் நிச்சயதார்த்த விழா அழைப்பிதழ் வழங்கி இவ்விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்திடுமாறு அழைப்பு விடுத்தோம்.
@mkstalin | @katpadidmk | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
'தூய சக்தி' 'வாஷிங் மெஷின்' சக்தியானது! இது தான் ஊழலை ஒழித்த டம்மியின் இலட்சணம்!
நாங்கள் ஊழலற்ற தூய்மையான ஆட்சியைத் தருவோம் என்று மேடைக்கு மேடை எழுதிக் கொடுக்கப்பட்ட சினிமா வசனம் பேசி தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்யின் மாற்று அரசியல் சாயம் இன்று முழுமையாக வெளுத்துவிட்டது!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை ED வழக்கு, குட்கா ஊழல் CBI வழக்கு, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு, அரசு முத்திரையையே போலியாகத் தயாரித்து மோசடி செய்ததும், அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டதுமான கிரிமினல் வழக்குகளில் சிக்கிய என ஊழலின் உச்சத்தில் இருக்கும் விஜயபாஸ்கர்களைப் புனிதர்களாக மாற்றும் வாஷிங் மெஷினாக மாறிவிட்டது நிழல் முதல்வர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தவெக!
#TVKFails
பொய்யை மட்டுமே பேசும் அமைச்சர் @CTR_Nirmalkumar கவனத்திற்கு!! 🚨
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், நேற்று கழக உடன்பிறப்புகளையும் பொதுமக்களையும் சந்தித்து உரையாடிய தருணம்.
#TVKFakeNews
நாக்பூர் மற்றும் குஜராத் முதலாளிகளின் மீது என்றுமே த.வெ.க. ஊதுகுழல்களுக்கு குறையாத விசுவாசம் உள்ளது! தொழில் முன்னேற்றத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை திராவிட மாடல் உருவாக்கிய வரலாற்றை இருட்டடிப்பு செய்ய தகிடுதத்தம் செய்கிறார்கள்!
@mkstalin@katpadidmk@Udhaystalin@arivalayam@dmkathiranand@DMKITwing
ஐயர் :
அம்பி.
Mr.Powder : என்ன சாமி.
ஐயர்;
இங்க விபூதி தான் கிடைக்கும்.
அந்த powder போட்டுட்டு ,
நான் கொடுத்த விபூதி தான் அதுன்னு என்ன மாட்டி விட்டுடாதடா அம்பி .😂😂😂
இன்று(28.06.2026), வேலூர் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு.G.P.கமல் ராஜ் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி மகிழ்தேன்.
உடன் முன்னாள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.@GymMla ஓன்றிய பெருந்தலைவர், ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
இன்று(30.06.2026) வேலூர் வடக்கு மாவட்ட ரோட்டரி சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.சுரேஷ் ரங்கநாதன் அவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்தி சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
உடன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam