தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்றேன்.
நாளை வேட்புமனு தாக்கல் நடைபெற இருக்கிறது.
அனைவரும் வருக.
நாள்-16.09.2026
நேரம்-காலை 10.00 மணிக்கு
இடம்-தாராபுரம் முருகன் கோயிலில் இருந்து பொள்ளாச்சி சாலை வரை
ஐ.நா, சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகளின் பங்கேற்புடன் யாழில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாநாடு!
நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்து.
#Tamil#Eelam#EelamTamils#LKA#WorldwideTamils
அண்ணன் சீமான்: “நான் இருக்கும்வரை பரந்தூரில் விமான நிலையம் கட்ட முடியாது”
தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் இன்று (24.08.2026), பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக அறிவித்தது.
#ntk#seeman#parandur
சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? இதுதான் தவெக அரசு மாநில உரிமைகளைக் காக்கும் முறையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குப்பூரில் அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?
யாருடைய உத்தரவின் பேரில் அரசுப் பள்ளியில் வட மாநிலத்தவர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்?
தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்களுக்குப் புரிதல் குறைபாடு ஏற்பட்டு அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா?
நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தபோதே நம் நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமென்று அமெரிக்க முதலாளிக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது? என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதைப்போலவே தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய அளவிலான போட்டித் தேர்வில் வெல்ல வேண்டும் என்று வடமாநிலத்தவருக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது?
அண்மையில் இப்பள்ளியில் பயின்ற 5 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நிலையில், அதனைக் கெடுப்பதற்காகவே வட மாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை இப்பொழுது அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் நியமனம் தொடங்கி ஆசிரியர் பணி நியமனம் வரை வெளிமாநிலத்தவர்களுக்குக் கொடுத்துப் பறிப்பது என்ன நியாயம்?
தமிழ்நாட்டில் இத்தகைய தேர்வு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவும், திறனும் வாய்ந்த ஆசிரியர் பெருமக்களே இல்லையா? பல இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று, பல ஆண்டுகளாக வேலையின்றி வீதியில் போராடிக் கொண்டிருக்கும்போது, வட மாநிலத்தவரை தமிழ்நாட்டில் ஆசிரியர்களாக நியமிப்பது ஏன்?
தூய்மைப்பணியாளர்கள், நடத்துநர்கள், ஆசிரியர்கள் என்று அடுத்தடுத்து அரசுப் பணியிடங்கள் அனைத்துமே தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுவார்கள் என்றால் அரசுத்துறைகளின் வேலைதான் என்ன? அனைத்துமே தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில், அரசுக்கு பொதுப்பணி, போக்குவரத்து, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என்று தனித்தனி துறைகள் எதற்கு? தனித்தனி அமைச்சர்கள் எதற்கு? இது என்ன மாதிரியான மாற்று?
ஏற்கனவே, முதலமைச்சரிடம் முதன்மையாக எந்தத் துறைகளும் இல்லை. அனைத்து முக்கியத் துறைகளும் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் மூன்று நான்கு முதன்மையான துறைகளை வைத்துள்ளார்கள். எல்லாத் துறைகளையும் அமைச்சர்களிடம் அளித்துவிட்டால் முதலமைச்சரின் வேலை என்ன? ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிடுவது மட்டும்தானா?
வேளாண்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். நீர்வளத்துறைப் பற்றிக் கேள்வி கேட்டால் அறநிலையத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். சுற்றுலா குறித்த கேள்விக்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் பதில் சொல்கிறார். யாருக்கு எந்த அமைச்சகம்? யார் எந்தத்துறையின் அமைச்சர் என்பதே இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படவில்லை. இப்போது அமைச்சர்களுக்கும் எந்த வேலை இல்லை என்ற அளவிற்கு, அனைத்து துறைகளின் பணிகளுமே தனியார் நிறுவனம் மூலம் வடமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் பணிநியமனங்கள் அனைத்தும் வடமாநிலத்தவரைக் கொண்டு நிரப்பப்படுவதை, தமிழிளம் தலைமுறைப்பிள்ளைகள் இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இத்தகைய கொடுமைகள் தொடர்ந்தால் விரைவில் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் இருப்பாளி ஊராட்சியின் மேட்டுப்பட்டி ஏரி மற்றும் அம்மம்பாளையம் எரிகளில் மண் அள்ளப்படுவதைத் தடுத்து எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கவும், ஏற்கனவே, அளவுக்கு அதிகமான மண் அள்ளி ஏரியை பாழ்படுத்தி விட்டதால் புதிய மண் சேரும் வரையில் மண் அள்ள இவ்விரு எரிகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று 17/08/2026 சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில் நேற்று 16.08.2026, மதுராந்தகம் ஏரிக்கரையில் 2000 பனை விதைகள் நடப்பட்டது.
நாம் தமிழர் கட்சி எல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல...
ஆமா ஆமா..
இன்று (16.08.2026) துறையூர் சட்டமன்றத் தொகுதி ஆலத்துடையான்பட்டி ஏரிக்கரையில் 400 பனை விதைகள் நாம் தமிழர் கட்சியின் தம்பி தங்கைகளால் நடப்பட்டது.
மன நிறைவான நாள்!
#குமரி மாவட்டத்தின் 95% மாணவர்களுக்கு கிடைக்காத அரிய வாய்ப்பாக, விவசாயத்தின் மேன்மையை மாணவர்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து 3-வது ஆண்டாக குமரி மாவட்டத்தின் முதல் ஐஎஸ்ஓ 9001: 2015 தரச் சான்றிதழ் பெற்ற எமது #கஞ்சிக்குழி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில
அறுவை சிகிச்சை முடிந்து .. மருத்துவமனையில் உள்ளர்.. இன்னும் ஒரு மாத காலம் மருத்துவமனையில் இருக்கவேண்டுமாம்..
ஒரு பக்க கை, கால் சரியா செயல்படவில்லை.. மருத்துவர்களால் பிசியோதெரபி கொடுக்கப்பட்டு வருகிறது ..
இயன்ற உதவியை உறவு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி இருப்பாளி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி ஏரி மற்றும் அம்மங்காட்டு ஏரி ஆகிய இரண்டு எரிகளில் மண் அள்ளப்பட்டது தொடர்பாக கடந்த 2 வாரங்களாக கிராம நிர்வாக அலுவலர், Field BDO ஆகியோரிடம் அழைப்பேசி வாயிலாக விளக்கம் கேட்டு கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதிகாரிகள் யாரும் முறையான பதில் கொடுக்காததால், நேற்று ( 12/08/2026) கள ஆய்வுக்கு வந்திருந்த வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோரிடம் நேரில் சென்று முறையிட்டு, நாம் முன் வைத்த ஒரு கேள்விக்குக் கூட சரியான பதில் அவர்களால் கொடுக்க முடியாமல், இதற்கு மேல் மண் அள்ளப்படாது எனக் கூறி சென்ற பின், ஏரியை ஆக்கரமித்து இருந்த 50 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் JCB வாகனங்களை நாம் தமிழர் கட்சி உறவுகள் வெளியேற்றினர்
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி வேலாயுதம் போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும். ஆனால் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமையாகும்.
மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? தம்பி வேலாயுதம் போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை தவெக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்?
ஆகவே, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பாண்டிச்சேரி தவிர்த்த வெளி மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல 3 மாத இடைக்காலத் தடைக்கே கடிதம் எழுதிட்டாங்க கேரளம்.
அப்படினா எவ்வளவு மலைகளை இங்க இருந்து உடைச்சி கொண்டுப்போய் இருப்பானுங்க ......
கேரளாவில் மலை இல்லையா...
தமிழர்கள் இளிச்சவாயர்கள்...