ஒரு நடிகருக்காக அப்பா விசில் அடிச்சிருக்கார். அதே நடிகருக்காக இன்னைக்கு மகனும் விசில் அடிக்கிறான். இதைவிட ஒரு நடிகருக்கு என்ன பெரிய வெற்றி வேணும்?
ஒரு வரி… ஆயிரம் அர்த்தங்கள்
அத்தியாயம் 5 | தலைமுறைகள் மாறினாலும் மாறாத விசில்
“உன் அலும்ப பார்த்தவன்… உங்க அப்பன் விசில கேட்டவன்…”
படம்: ஜெயிலர் (2023)
பாடல்: ஹுக்கும்
இசை, குரல்: அனிருத்
வரிகள்: சூப்பர் சுப்பு
இந்தப் பாடல் வெளியானப்போ எல்லாரும் அனிருத் கொடுத்த மியூசிக்குக்கும் ரஜினியோட மாஸுக்கும் கொண்டாடினாங்க.
ஆனா எனக்கு இந்த ரெண்டு வரிகளுக்குள்ள இருக்கிற விஷயம் ரொம்பப் பிடிக்கும்.
ஒரு நடிகருக்கு ரசிகனா இருக்கிறது சாதாரண விஷயம்தான். ஆனா ஒரே நடிகரை அப்பாவும் ரசிச்சு, மகனும் ரசிச்சு, பேரனும் ரசிக்கிறதெல்லாம் அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
ஒரு காலத்துல ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர்ல நின்னு விசில் அடிச்ச ஒரு அப்பா, இன்னைக்கு தன்னோட மகன் அதே ரஜினியைப் பார்த்து விசில் அடிக்கிறதைப் பார்க்கிறார்.
அப்பாவுக்கு ரஜினி என்றதும் முரட்டுக்காளை, பில்லா, தில்லு முல்லு, படிக்காதவன் மாதிரியான படங்கள் ஞாபகத்துக்கு வரலாம்.
மகனுக்கு அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, சிவாஜி மாதிரியான படங்கள் ஞாபகத்துக்கு வரலாம்.
இன்னைக்கு இருக்கிற இளம் தலைமுறைக்கு எந்திரன், பேட்ட, ஜெயிலர் மூலமா ரஜினியோட மாஸ் பிடிச்சிருக்கலாம்.
ஒவ்வொருத்தருக்கும் பிடிச்ச படம் வேற. பிடிச்ச வசனம் வேற. பிடிச்ச ரஜினி ஸ்டைல் கூட வேற.
ஆனா திரையில ரஜினி வரும்போது கிடைக்கிற அந்த உற்சாகம் மட்டும் தலைமுறை தாண்டியும் தொடர்ந்துகிட்டே இருக்கு.
இதுல இன்னொரு அழகான விஷயம் இருக்கு.
சின்ன வயசுல அப்பா கூட ரஜினி படம் பார்க்கப் போன ஒருத்தர், வளர்ந்த பிறகு தன்னோட குழந்தையையும் கூட்டிக்கிட்டு ரஜினி படம் பார்க்கப் போறார்.
அந்தத் தியேட்டர்ல படம் மட்டும் ஓடல. ஒரு குடும்பத்தோட பழைய நினைவுகளும் சேர்ந்து ஓடுது.
அப்பா ரசிச்ச ஒரு நடிகரை மகனும் ரசிக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. எல்லாருக்கும் தனித்தனி ரசனை இருக்கும்.
ஆனா அப்படி இயல்பாவே ஒரே நடிகர் மீது மூணு தலைமுறைக்கும் விருப்பம் உருவாகும்போது, அது ரசிகன் நடிகர் உறவைத் தாண்டி ஒரு குடும்ப நினைவாகவே மாறிடுது.
ரஜினியோட வெற்றியை வசூல், சாதனை, பட்டம் இதெல்லாம் வச்சு பேசலாம்.
ஆனா பல வருஷங்களா அவரைத் திரையில பார்த்து வளர்ந்த ரசிகர்களோட அன்பை எந்தக் கணக்குலயும் முழுசா அளந்திட முடியாது.
இந்த வரிகள்ல எனக்கு இன்னொரு விஷயமும் தோணுது.
ஒரு காலத்துல தன்னை ரசிச்ச ரசிகன் இன்னைக்கு வயசாகியிருக்கலாம். அவனோட தலைமுடி நரைத்திருக்கலாம். அவன் வாழ்க்கையில எவ்வளவோ மாற்றங்கள் வந்திருக்கலாம்.
ஆனா திரையில தனக்குப் பிடிச்ச நடிகரைப் பார்க்கும்போது அவனுக்குள்ள இருக்கிற அந்தப் பழைய ரசிகன் இன்னும் அப்படியே இருக்கான்.
அதுதான் சினிமாவோட அழகு.
சூப்பர் சுப்பு எழுதிய இந்த வரிகளை அனிருத் பாடும்போது ஒரு மாஸ் பாடலுக்கான உற்சாகம் கிடைக்குது.
ஆனா அந்த வரிகளுக்குப் பின்னாடி இருக்கிற பல தலைமுறை ரசிகர்களோட பயணத்தை நினைச்சுப் பார்த்தா இன்னும் அழகா இருக்கு.
ஒரு நடிகரோட உண்மையான சாதனை, எத்தனை வருஷம் சினிமாவுல இருந்தார்ங்கிறதுல மட்டும் இல்லை. எத்தனை தலைமுறையோட நினைவுகள்ல இடம் பிடிச்சிருக்கார்ங்கிறதுலயும் இருக்கு.
உங்க வீட்டுல அப்பா, மகன், பேரன் என மூணு தலைமுறையுமே ரசிக்கிற நடிகர் யார்? ரஜினி படத்தை முதன்முதலா யார் கூட தியேட்டர்ல பார்த்தீங்க?
#ஒருவரிஆயிரம்அர்த்தங்கள் #Jailer #Hukum #Rajinikanth #Anirudh #TamilCinema
To everyone who has cheered, celebrated and been part of these moments with me, these memories are yours too.
It's lovely to see them come together at the @MumbaiCricAssoc museum, where generations of cricket lovers can revisit them and create their own memories.