பயங்கரமான ஆல்பமாக இருந்தாலும் நிச்சயம் ஒரு பாட்டாவது சுமாராக இருக்கும்... ஆனால் ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் பயங்கரமாக இருந்தது இந்த படமாக தான் இருக்கும்...
இந்த படம் ஹிட் ஆக காரணமே படத்தோட பாடல்கள் தான்... இப்ப வரைக்கும் பல பேரின் Playlist இல் இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் இருக்கும்...
முரளி கிருஷ்ணா இயக்கத்தில் குணால், மோனல் மற்றும் கரண் இணைந்து நடித்த படம் இது... காதலர் தினம் என்ற வெற்றியை தொடர்ந்து குணால் நடிப்பில் வெளியான படம்...அவரின் கடைசி வெற்றி படமும் இதுதான்.. சிம்ரன் தங்கையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் மோனல் ...
சோகம் என்னவென்றால் இந்த இணை இப்போது நம்முடன் இல்லை... இருவருமே தங்கள் உயிரை தானே பறித்தவர்கள்.. எனக்கு விவரம் தெரியாத காலத்தில் இவங்க ரெண்டு பேரும் நிஜமான காதலர்கள் எனவும் அது நடக்காமல் போக இருவரும் த*ற்*கொ"*லை செய்து கொண்டார்கள் எனவும் நினைத்து கொண்டிருந்தேன்...
இசை பரணி... பெரியண்ணா படத்தில் கவனம் ஈர்த்த பரணி இந்த படத்துக்கு இசை... ஒவ்வொரு பாடலும் காலத்துக்கும் நின்று பேசக்கூடியவை ...
"துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்"
"திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு"
"திரும்ப திரும்ப காற்றே காற்றே"
"ஏன் அசைந்தாடும் காற்றுக்கும்''
என ரொமாண்டிக் ட்ராக் எல்லாமே சம்பவம் செய்த பாடல்கள்...
மற்றொரு பக்கம்
"காதல் பண்ணாதீங்க காதலே பண்ணாதீங்க"
மற்றும்
அன்றைய ஆஸ்தான ராம்ஜி-க்கு " நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்" வேற லெவல் 👌🏻...
பாடல்கள் வைத்தே ஹிட் அடித்த இந்த கூட்டணி மீண்டும் அடுத்த வருடமே இணைந்த படம் "பேசாத கண்ணும் பேசும்"... குணால்,மோனல் இணை பரணி இசையில் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் படம் பெரிதாக கைக்கொடுக்கவில்லை...
குறிப்பாக மோனல் இ*ற*ந்த பின் வெளியான படம் அது...
"பார்வை ஒன்றே போதுமே" படம் நிறைய பேருக்கு ஞாபகம் இல்லாமல் இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் கேட்காதவர்கள் இருக்க வாய்ப்பேயில்லை...
உங்களுக்கு இந்த படம் எவ்வளவு பிடிக்கும் ?? இந்த படத்தில் உங்கள் ஃபேவரைட் பாடல் எதுவென்று கமெண்ட் இல் சொல்லுங்கள் ❤️...
ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!!
இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது..
#letsspreadlove#AV33🎬