புளி ஏப்பமும் பசி ஏப்பமும்
🗣️ 'நான் முதல்வன்' திட்டம் என்பது, வெற்றி பெற்ற மாணவர்களைத் தன் கணக்கில் எழுதிக்கொள்ளும் பிரில்லியண்ட் டுடோரியல் போன்றதுதான் என்று சமீபத்தில் ஒருவர் சொல்ல, பல பெரிய மனிதர்கள் அதே நக்கலுடன் அதைத் தங���கள் பக்கங்களில் போட்டுச் சிரித்தார்கள்.
புளியேப்பம் விடுபவனுக்கும் பசியேப்பம் விடுபவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
🛠️
ஆங்கிலத்தில் 'Enabling' என்று ஒரு சொல் உண்டு; அதாவது, ஒரு செயலை அவர்களாகவே செய்துகொள்ளும் தகுதியை உருவாக்குவதும், அதற்கான கருவிகளை எட்டும்படி தருவதுமே உண்மையான உதவி.
என் இருபதுகளில் குடிமைப்பணித் தேர்வுக்குப் படித்தபோது, பகல் வேலை முடிந்து இரவில் ஒண்டுக்குடித்தன வீட்டில் நான் கண்விழித்துப் படித்தால், குழந்தையும் மனைவியும் முதிய பெற்றோரும் தூங்க முடியாது. அதனால் சொந்தப் பணத்தில் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, இரவெல்லாம் அங்கேயே படித்துவிட்டு, காலையில் குளிக்க மட்டும் வீட்டுக்கு வந்து அலுவலகம் சென்ற அந்த நாட்களின் வலியும், இதையெல்லாம் மீறி குடிமைப்பணித் தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கப் பட்ட பாடும் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும்.
🎯
இப்படியொரு சூழலில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றிபெற வழியமைத்துத் தரும் ஒரு தொலைநோக்குத் திட்டத்தை விமர்சிக்க, மடையர்களாக மட்டும் இருந்தால் போதாது; பிறர் வாய்ப்பைக் குறிவைக்கும் கயவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்தக் காணொளியில் பேசும் கூலித்தொழிலாளி-தையல்வேலை செய்யும் பெற்றோருடன் குடிமைப்பணித் தேர்வில் வெற்றிபெற்ற இந்த இளைஞனின் பேச்சைக் கேளுங்கள். அதைவிடச் சிறப்பாக, ‘காலத்தால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்கிற குறளைச் சொல்லி, அப்படியானால் 'நான் முதல்வன்' திட்டத்தில் எங்கள் குடும்பம் பெற்ற இந்தப் பெரிய உதவி எத்தனைப் பெரிது என்று அழகாக வி��க்கும் அந்தத் தாயின் பேச்சையும் கேளுங்கள்.
மடையர்களும் கயவர்களும் வயிறெரிந்தால் நல்லதுதான்.
#NaanMudhalvan #CivilServices #TamilNadu #EducationForAll #Empowerment
🎓 உங்கள் பிள்ளைகளோ, இளம் நண்பர்களோ இந்த ஆபத்தான 3 தவறுகளைச் செய்கிறார்களா?
ஒரு சுமாரான மாணவனாக இருந்த நான், கற்றலில் செய்துகொண்டிருந்த 3 பெரிய தவறுகளைத் திருத்திய பிறகுதான், ஒரு IFS அதிகாரியாக உயர முடிந்தது. என் வாழ்க்கையை மாற்றிய அந்த அறிவியல் உண்மைகளை இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வீடியோவை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்பதோடு, மாணவர்கள், இளைஞர்களுடன் பகிர வேண்டும்.
அவர்கள் இ��்தத் தவறுகளைச் செய்கிறார்களா என்று பாருங்கள்:
- 'புத்திசாலி மூளை', 'சுமாரான மூளை' போன்ற விஷயங்களை நம்புவது.
- Highlight செய்வது, மீண்டும் மீண்டும் வாசிப்பது போன்ற பயனற்ற முறைகளைப் பின்பற்றுவது.
- தொடர்ந்து அதிக நேரம் படிப்பது வெற்றி தரும் என்று நினைப்பது.
இந்தத் தவறுகளைத் திருத்துவது எப்படி? முழு வீடியோவையும் பாருங்கள்.
நான் சரியான முறையில் கற்கும்போது, என் மூளைக்கு உதவுகிறேன்; நான் தவறான முறையில் கற்க முயலும்போது, என் மூளையைக் குழப்புகிறேன். இதுதான் என் கற்றல் அணுகுமுறை: நான் ஒரு மூளைப் பய���ற்சியாளன்.
இந்த எளிய அணுகுமுறை, உங்கள் அன்புக்குரியவர்களின் கற்றல் முறையை மாற்றி, அவர்களின் இலக்குகளை அடைய உதவும். இந்த வீடியோவை அவர்களுடன் பகிர்ந்து உதவுங்கள். ✨
#HowToLearn #StudyTips #ForStudents #ShareWithStudents
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
ஒரு புதிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்வது எப்படி? (புதிய நண்பர்களுக்காக):
- மொழி கற்றலின் ஐந்து அடிப்படை விதிகள் என்ன?
- குழந்தைகள் மொழி கற்பதற்கும் பெரியவர்கள் கற்பதற்கும் உள்ள வேறுபாடுகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது?
- ஏன் பாரம்பரிய மொழி கற்கும் உத்திகள் பெரிய பலன்கள் அளிப்பதில்லை?
- இன்றைய சூழலில் மொழி கற்க உள்ள புதுக் கருவிகள் எவை? (பல இலவசமாகக் கிடைக்கின்றன)
- மொழி கற்பதை விளையாட்டாக அணுகுவது எப்படி?
***
உலகில் முதன்முறையாக நெடிய மொழி வரலாற்றில் சீன மொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு செய்தவன் நான். ஆனால், மொழி கற்றலுக்கு எனக்குமான உறவு ஆரம்பத்தில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. ��து ஆங்கிலம் கற்பதிலிருந்து துவங்கியது.
சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வத்தால் தமிழ் வசமானது. ஆனாலும் பள்ளியில் தமிழில் சராசரி மதிப்பெண் தான். வாழ்க்கை சடாரென்று திசை மாறி +1இல் இங்கிலிஷ் மீடியம் சேர்ந்ததும் கை கால் உதறியது. கல்லூரிப்படிப்பும் போராட்டமாகத் தொடர்ந்தது. தமிழ் மேடைகள் மனஉறுதி தந்தன. ஆனால், மொழிப் பாடங்களிலும் சேர்த்து, ஒரு சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனாகவே தொடர்ந்தேன்.
மற்ற பாடங்களோ மொழிய��, விஷயம் சப்ஜெக்ட்டில் இல்லை, கற்கும் முறையில் இருக்கிறது என்று புரிந்தபோது, “ச்சீ! இதுக்கா பயந்தோம்!?” என்று விட்டுப்போனது.
அதன் பிறகு, மொழியிலும் ஏறு முகம் தான்.
இந்திய அயலுறவுப் பணியில் சேரும் அலுவலர்கள் ஒரு கட்டாய அயல் மொழியைக் கற்க வேண்டும். எனக்கு வாய்ப்பிருந்த நான்கைந்து மொழிகளில் சீன மொழியைத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் இரண்டு: 1. எனக்குச் சீனமொழி துளியும் தெரியாது. 2. அத��� உலகின் மிகக் கடினமான மொழிகளில் ஒன்று என்று சொன்னார்கள்.
பிறகு நடந்தவை, வரலாறு. எனது ஐந்து நூல்களில் இரண்டு சீனமொழியை அறிமுகப்படுத்துவன. மீதி இரண்டும் சீனமொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்புகள். அதில் முதலில் வந்த ‘கவித்தொகை: சீனாவின் சங்க இலக்கியம்’ என்கிற நூல் தான் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பில் வந்த முதல் நூல் என்று தெரியவந்தபோது, எனது பள்ளிக்கால மொழிப்பாட மதிப்பெண்களையும் நினைத்துக்கொண்டேன்.
மொழி கற்றல் என்பதும் ஒரு திறமை தான். சரியான வழிகாட்டல் இருந்தால், யாரும் புது மொழிகளைக் கற்று பல மனங்களையும் புத்தம்புது உலகங்களையும் திறக்கலாம். இந்தக் காலத்தில் இது இன்னும் எளிதாகியிருக்கிறது.
ஆனால், இப்போதைய எல்லா விஷயங்களையும் போல, இதிலும் உங்கள் வழிகாட்டிகளை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில், மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளைத் தொடும் நூல்கள் எனக்குப் பிரியமானவை. நடைமுறையில் பயன்படும் விஷயங்களை எளிதாகச் சொல்லும் நூல்கள் அரிது. அவற்றில் நிச்சயமாக இடம்பெற வேண்டிய நூல் இது: Fluent Forever: How to Learn Any Language Fast and Never Forget It by Gabriel Wyner (“எப்போதும��� சரளமாக: எந்த மொழியையும் விரைவாகக் கற்றுக்கொள்வதும் அதை மறக்காமல் இருப்பதும் எப்படி?” - கேப்ரியல் வைனர்)
Fluent Forever என்கிற மொழி கற்கும் இணைய தளத்தை நிறுவி, அதன் மூலம் தனது மொழி கற்கும் வழிமுறைகளைச் சொல்லித்தரும் கேப்ரியல் வைனர், அமெரிக்காவில் மேற்கத்திய செவ்விசைப் பாடகர். ஐரோப்பா சென்று இசை கற்றுக்கொண்டபோது மொழி தடையாக இருக்கவே, மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டு ���ெற்றி கண்டவர். இப்போது பன்மொழி வல்லுனர் (polyglot).
அவருடைய நூலை அறிமுகம் செய்து, அதிலுள்ள முக்கிய விஷயங்களை��் பேசியிருக்கிறேன்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
உலகில் இரண்டு பொய்கள் பிரபலமானவை, ஆனால் ஆபத்தானவை.:
முதல் பொய், பணக்காரன் நிம்மதியா தூங்கமாட்டான்.
இரண்டாவது பொய், படிப்பதைவிடப் படிக்காத மேதையாய் இருந்து உயர்வது எளிது.
சமயங்களில் இந்தப் பொய்கள் அறியாமையால் சொல்லப்படும். பெரும்பாலும் இவை கள்ளச் சூழ்ச்சியால் சொல்லப்படும்.
விஷத்தைத் தெரியாமல் கலந்தாலும், வேண்டுமென்றே கலந்தாலும், கேள்வி கேட்காமல் அதை அருந்தும் நமக்க���த்தான் பாதிப்பு.
அதனால் தான் Survivorship Bias - பிழைத்தவர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் தவறான பிம்பம் - பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
#monday | சமீபத்திய வார இறுதி தொலைப்பேசி அழைப்பில், நண்பர் நரசிம்மனின் இக்கட்டான கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது: மனதை அழுத்தும் சமூகப் பிரச்சனைகளுக்கு மத்தியில், நாம் எப்படி நமது ஊக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வது?
இது நிஜம் தானே? நம் சின்னஞ்சிறு கைகளால் பிடிக்க முடியாத பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். மனதில் நிராசை நிழலாடும் தரு��ங்கள் அதிகம். என்ன செய்யலாம்?
எனக்குப் பிடித்தமான ஒரு குறள் நினைவுக்கு வந்தது. அது தனிமனிதக் கோபத் தீயை நன்றியால் நனைத்து அணைக்கும் உத்தியை எனக்குத் தந்த குறள். என் வாழ்வில் நான் பலமுறை பயன்படுத்தும் ஒரு கருவி அது.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:109)
ஒருவர் நமக்குக் கொடுமையான தவறு இழைத்துவிட்டாலும், அவர்கள் நமக்குச் செய்த ஒரே ஒரு நல்ல விஷயத்தை மனதில் ஊன்றி நிறுத்தி யோசித்தால், அவர்களின் மீது நமக்கு இருக்கும் சினத்தின் வீர்யம் அடங்கும். அதாவது, நல்ல விஷயத்தில் தாறுமாறான விகிதாசாரத்தில் கவனம் செலுத்துவது தான் தந்திரம். ஏனென்றால், என்ன தான் நியாயம் என்றாலும், நம் கோபம் நம்மைத் தான் அழிக்கும்.
சினம் இல்லாத மனதுடன், அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்று நாம் அணுகலாம். விளைவு மேம்பட்ட���ாக இருக்கும். நிஜமாகவே.
இந்த நுட்பமான விஷயத்தை நாம் சமூக��் சூழலுக்கும் பயன்படுத்தமுடியும். அதீதமான இருள் சூழ்ந்த கணங்களில் குட்டிக்குட்டி நன்மைகளின் அகல் வெளிச்சம் நமக்கு வழிகாட்டும்.
எடுத்துக்காட்டாக, நரசிம்மனின் ஓய்வுக்குப் பிந்தைய மெச்சத்தக்கப் பயணத்தை நான் அறிவேன். விழியிழந்த மாற்றுத் திறனாளிகளுக்குச் சேவை செய்யும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்காகத் தனது நேரத்தையும் திறமையையும் அர்ப்பணிக்கிறார். அவரது குழு வெறும��� நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் நடைமுறை உதவிகளை வழங்குகிறார்கள்—பிறப்பு, படிப்பு, வேலை, திருமணம், உடல்நலம் என்று யோசித்து உதவுகிறார்கள். அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் வலியை உணர்வதோடு நிறுத்தவில்லை. தீர்வுகளைத் தேடி, நிதி திரட்டி, உதவி தந்து, தொடர்ந்து கைப்பற்றி நடக்கிறார்கள்.
சமூகத்��ின் பிரச்சனைகள் பெரிதாகத் தோன்றும்போது, இது போன்ற செயல்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையே என்னை நிராசையிலிருந்து பின்னுக்கு இழுத்து, நம்பிக்கையையும், நிதானத்தையும், ஊக்கத்தையும் ��னக்கு வழங்குகிறது.
நரசிம்மனும் நானும் எங்களது நீநீநீண்ட தொலைப்பேசி உரையாடலை முடித்தபோது, இரண்டு பேரும் இந்தப் புரிதலைத்தான் பகிர்ந்துகொண்டோம். நமது மனதை அலைக்கழிக்கும் பிரச்சனைகள் சூழ்ந்த உலகில், நல்ல விஷயங்களை மனதில் நிறுத்தி நாம் பெரும் ஊக்கம் வெற்று நம்பிக்கை இல்லை—இது ஒரு பகிரப்படவேண்டிய கருவி, ஒரு கூட்டு மனநிலை, பெரும் சவால்களுக்கு எதிரான பொது ஆயுதம்.
#பயணிதரன்
#வா���்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
1/3 கட்டை விரல் கேட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது என்று கழிப்பறையில் கதறுகிறார்கள்.
இவர்கள் கட்டுக்கதையாய் கொண்டு வந்த கடவுள்கள் சொன்னபடி கல்வி இவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த காலம�� மாறுவது கலக்கமூட்டுகிறது இவர்களுக்கு.
அந்த வலியில் தான் இந்த வயிற்று எரிச்சல்...
@PayaniDharan மாவட்ட ஆட��சியரின் சிறப்பான, அர்த்தமுள்ள, மனதைத் தொடும் செயல். இது மாணவி மெய்விழிக்கு இக்கட்டான சமயங்களில் அவளது இலக்கைப் பற்றிய நினைவூட்டலாகவும், ஊக்கமாகவும் இருக்கும். கலெக்டருக்கு மனமார்ந்த நன்றிகள், மெய்விழிக்கு வாழ்த்துக்கள்.